என் மலர்

  சினிமா

  ஒரே நேரத்தில் 3 பேய் படங்களில் நடிக்கும் அஞ்சலி
  X

  ஒரே நேரத்தில் 3 பேய் படங்களில் நடிக்கும் அஞ்சலி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தமிழ் சினிமாவில் தனக்கு என ஒரு இடத்தை தக்க வைத்துள்ள அஞ்சலி சினிமாவில் மீண்டும் வேகம் எடுத்துள்ளதால், அடுத்தடுத்து பல படங்களில் ஒப்பந்தமாகி வருகிறார். #Anjali
  அஞ்சலி கடைசியாக விஜய் ஆண்டனி ஜோடியாக `காளி' படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அந்த படத்தை தொடர்ந்து ராம் இயக்கத்தில் `பேரன்பு' மற்றும் சமுத்திரக்கனி இயக்கத்தில் சசிகுமார் ஜோடியாக `நாடோடிகள்-2' படத்திலும் நடித்து முடித்திருக்கிறார். இந்த இரு படங்களும் விரைவில் வெளியாக இருக்கின்றன. 

  இதுதவிர `காண்பது பொய்', 3டி-யில் உருவாகும் `லிசா' என்ற பேய் படத்திலும் தற்போது நடித்து வருகிறார். சமீபத்தில் விஜய் சேதுபதி ஜோடியாக ஒரு படத்திலும் நடிக்கத் தொடங்கினார்.   இந்த நிலையில், தெலுங்கில் அஞ்சலி இரு வேடங்களில் நடித்து பெரிய வெற்றி பெற்ற கீதாஞ்சலி என்னும் பேய் படத்தின் இரண்டாம் பாகம் உருவாக உள்ளது. இதிலும் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். 

  இதன்மூலம் `லிசா', `ஓ' மற்றும் `கீதாஞ்சலி-2' என ஒரே நேரத்தில் மூன்று பேய் படங்களில் அஞ்சலி நடித்து வருகிறார். #Anjali

  Next Story
  ×