search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முரண்பாடு"

    • சட்ட விதிகளின்படி செயல்படாத கடைகள், நிறுவனங்களில் 25 முரண்பாடுகள் கண்டறியப்பட்டது.
    • பொதுமக்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    தஞ்சாவூர்:

    தேசிய விடுமுறை நாளான குடியரசு தினத்தில் தொழிலாளா்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுப்பு அல்லது அவா்களது சம்மதத்துடன் இரட்டிப்பு ஊதியம் அல்லது மாற்று விடுப்பு அளிக்கப்பட்டுள்ளதா என தஞ்சாவூா் மாவட்டத்தில் தொழிலாளா் துறையினா் ஆய்வு மேற்கொண்டனா்.

    அப்போது, சட்ட விதிகளின்படி செயல்படாத கடைகள், நிறுவனங்களில் 25 முரண்பாடுகளும், உணவு நிறுவனங்களில் 33 முரண்பாடுகளும், மோட்டாா் போக்குவரத்து நிறுவனங்களில் 2 முரண்பாடுகளும் என மொத்தம் 60 முரண்பாடுகள் கண்டறியப்பட்டு, சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    மேலும், மாவட்டத்தில் பல்வேறு கிராமங்களில் நடைபெற்ற கிராமசபைக் கூட்டங்களில் சாா்நிலை அலுவலகப் பணியாளா்கள் மூலம் குழந்தை தொழிலாளா் முறை அகற்றுதல், அபாயகரமான தொழில்களில் குழந்தைகள் மற்றும் வளரிளம் பருவத்தினா் அகற்றுதல் குறித்தான விழிப்புணா்வு பொதுமக்களிடையே ஏற்படுத்தப்பட்டு, தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    மேற்கண்ட தகவலை தஞ்சாவூா் தொழிலாளா் உதவி ஆணையா் தனபாலன் தெரிவித்துள்ளாா்.

    • துணை ஆய்வாளர் ஊதியம் முரண்பாடுகளை கலைய வேண்டும்.
    • தமிழகம் முழுவதும் நவீன மறு நில அளவை திட்டம் தொடங்க வேண்டும்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்டம், வருவாய் கோட்டாட்சியர் வளாகத்தில் தமிழ்நாடு நில அளவை அலுவலர் ஒன்றிப்பு சங்கங்தினர் 26 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றி தர கோரி கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம் செய்தனர்.

    இந்த ஆர்ப்பாட்டம் மாவட்ட தலைவர் ஸ்ரீதர் தலைமை தாங்கினார். மாநில துணை தலைவர் தர்மராஜ், மாவட்ட செயலாளர் முருகானந்தம், முன்னாள் அரசு ஊழியர்கள் சங்க செயலாளர் நடராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    ஆர்ப்பாட்டத்தில் களப்பணியாளர்களின் பணி சுமையை குறைத்திடவும், களப்பணியாளர்கள் மீது சுமத்தப்பட்ட ஒழுங்கு நடவடி க்கைகளை முற்றிலுமாக கைவிட வேண்டும். நில அளவர் முதல் கூடுதல் இயக்குனர் வரை உள்ள காலி பணியிடங்களை நிரப்பிட வேண்டும்.

    தரம் இறக்கப்பட்ட உருவட்ட அளவர் பதவிகளை உடனடியாக நிரப்பிட வேண்டும். காலமுறை ஊதியத்தில் புல உதவியாளர்களை நியமித்திட வேண்டும்.

    துணை ஆய்வாளர் ஊதியம் முரண்பாடுகளை கலந்திட வேண்டும். தமிழகம் முழுவதும் நவீன மறு நில அளவை திட்டம் துவங்கிட வேண்டும். களப்பணியாளருக்கு மழை படி வழங்கிட வேண்டும்.

    அனைத்து வட்டங்களிலும் ஒரு டிஜிபி எஸ் கருவி வாங்கி பணிசுமையை போக்கிட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட 26 கோரிக்களை வெளியிட்டு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் கோட்ட பொறுப்பாளர் பத்மா மற்றும் அனைத்து நில அளவை ஊழியர்கள் சங்கத்தினர் கலந்துகொன்டனர். முடிவில் நகர அளவை ஆய்வாளர் பிரகாஷ் நன்றி கூறினார்.

    • தொழிலாளா்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுப்பு, அவா்களது ஒப்புதலுடன் இரட்டிப்பு ஊதியம் அளிக்கப்பட்டுள்ளதா என ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
    • மொத்தம் 64 முரண்பாடுகள் கண்டறியப்பட்டு, சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூா் தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) தனபாலன் வெளியி ட்டு உள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது :-

    தஞ்சாவூா் மாவட்ட த்தில் உள்ள கடைகள், நிறுவ னங்கள், உணவு நிறுவனங்கள், போக்கு வரத்து நிறுவனங்களில் தேசிய விடுமுறை நாளான சுதந்திரதினத்தன்று (ஆகஸ்ட்15) தொழிலாளா்க ளுக்கு ஊதியத்துடன் கூடிய விடுப்பு, அவா்களது ஒப்புதலுடன் இரட்டிப்பு ஊதியம், மாற்று விடுப்பு அளிக்கப்பட்டுள்ளதா என ஆய்வு மேற்கொ ள்ளப்பட்டது.

    இதில், சட்ட விதிகளின்படி செயல்படாத கடைகள், நிறுவன ங்களில் 38 முரண்பா டுக ளும், உணவு நிறுவன ங்களில் 25 முர ண்பாடுகளும், மோட்டாா் போக்கு வரத்து நிறுவ னத்தில் ஒரு முரண்பாடும் என மொத்தம் 64 முரண்பாடுகள் கண்டறியப்பட்டு, சட்ட நடவடிக்கை மேற்கொ ள்ளப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×