search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மும்பை சிட்டி"

    ஐ.எஸ்.எல். கால்பந்து தொடரில் நேற்றிரவு மும்பையில் நடைபெற்ற 50-வது லீக் ஆட்டத்தில் மும்பை சிட்டி 2-0 என்ற கோல் கணக்கில் சென்னை அணியை தோற்கடித்தது. #ISL2018 #ChennaiyinFC #MumbaiCity
    மும்பை:

    5-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடரில் நேற்றிரவு மும்பையில் நடந்த 50-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சென்னையின் எப்.சி. அணி, மும்பை சிட்டியுடன் மோதியது. உள்ளூர் ரசிகர்களின் ஆதரவுடன் உற்சாகமாக ஆடிய மும்பை அணி வீரர்களில் 27-வது நிமிடத்தில் ராய்னியர் பெர்னாண்டஸ், 55-வது நிமிடத்தில் மோடோ சோகோவ் ஆகியோர் கோல் அடித்தனர். பந்தை கட்டுப்பாட்டில் வைப்பதிலும் (53 சதவீதம்), ஷாட் அடிப்பதிலும் (14 முறை) சென்னை அணி கொஞ்சம் ஆதிக்கம் செலுத்திய போதிலும், எதிரணியின் தடுப்பு அரணை கடைசி வரை உடைக்க முடியவில்லை.

    முடிவில் மும்பை சிட்டி 2-0 என்ற கோல் கணக்கில் சென்னை அணியை தோற்கடித்தது. இதன் மூலம் மும்பை அணி 20 புள்ளிகளுடன் (6 வெற்றி, 2 டிரா, 2 தோல்வி) புள்ளி பட்டியலில் 2-வது இடத்துக்கு முன்னேறியது. அதே சமயம் ஒரு வெற்றி, 2 டிரா, 8 தோல்வி என்று வெறும் 5 புள்ளி மட்டுமே எடுத்து சொதப்பியுள்ள சென்னை அணிக்கு, அரைஇறுதி வாய்ப்பு கிட்டத்தட்ட முடிந்து போய் விட்டது. இன்றைய ஆட்டத்தில் கேரளா பிளாஸ்டர்ஸ்-புனே சிட்டி (இரவு 7.30 மணி) அணிகள் சந்திக்கின்றன. #ISL2018 #ChennaiyinFC #MumbaiCity
    ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் மும்பை அணி தனது முதல் லீக்கில் ஜாம்ஷெட்பூர் அணியிடம் வீழ்ந்தது. #ISL2018 #JamshedpurFC #MumbaiCity
    மும்பை:

    5-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி சமீபத்தில் தொடங்கியது. இதில் சென்னையின் எப்.சி., பெங்களூரு எப்.சி., நார்த் ஈஸ்ட் யுனைடெட் (கவுகாத்தி), எப்.சி.கோவா, மும்பை சிட்டி, ஜாம்ஷெட்பூர், அட்லெடிகோ டி கொல்கத்தா, கேரளா பிளாஸ்டர்ஸ், டெல்லி டைனமோஸ், புனே சிட்டி ஆகிய 10 அணிகள் பங்கேற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் உள்ளூர், வெளியூர் அடிப்படையில் 2 முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்குள் நுழையும்.

    மும்பையில் நேற்றிரவு நடந்த லீக் ஆட்டத்தில் மும்பை சிட்டி அணியும், ஜாம்ஷெட்பூர் அணியும் சந்தித்தன.

    இரு அணிகளும் தொடக்கத்தில் இருந்தே தாக்குதல் பாணியை கடைபிடித்தன. ஜாம்ஷெட்பூர் அணியின் மாரியோ ஆர்க்யுஸ் 28வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார். மும்பை அணி எந்த கோலும் அடிக்கவில்லை. இதனால் முதல் பாதியில் ஜாம்ஷெட்பூர் அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.

    தொடர்ந்து, நடைபெற்ற இரண்டாவது பாதியிலும் ஜாம்ஷெட்பூர் அணி அபாரமாக ஆடியது. அந்த அணியின் பாபியோ மார்கடோஸ் கூடுதல் நேரத்தின் 5-வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார். இதையடுத்து, ஜாம்ஷெட்பூர் அணி 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.
    ×