என் மலர்
நீங்கள் தேடியது "முதியவர் மீது வழக்குப்பதிவு"
- முதியவர் ஒருவர் கேரள மாநில லாட்டரி சீட்டுகள் வாங்கினால் அதிக பரிசு விழும் என்றும் ஆசை வார்த்தை கூறியுள்ளார்.
- சத்தியமங்கலம் போலீசார் சத்திய சீலன் மீது வழக்கு பதிவு செய்து அவரிடம் இருந்து லாட்டரி சீட்டு, பணத்தை பறிமுதல் செய்தனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் சத்திய மங்கலம் செண்பகப் புதூர் பகுதியை சேர்ந்தவர் ஜெமினி (47). விவசாய கூலி தொழிலாளி. இவர் நேற்று சத்தியமங்கலம் அருகே சத்தி பஜார் வீதியில் நின்று கொண்டிருந்தார்.
அப்போது 70 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் ஜெமினியிடம் தன்னிடம் கேரள மாநில லாட்டரி சீட்டுகள் உள்ளதாகவும், அதை வாங்கினால் அதிக பரிசு விழும் என்றும் ஒவ்வொரு லாட்டரி சீட்டுக்கும் நிச்சயம் அதிர்ஷ்ட பரிசு உண்டு என ஆசை வார்த்தை கூறி யுள்ளார்.
அவர் தொடர்ந்து அந்தப் பகுதியில் உள்ளவர்கள் அனைவருடமும் இதேபோல் லாட்டரி சீட்டு வாங்கும்படி கூறியுள்ளார். இதனை அடுத்து ஜெமினி அக்கம்பக்கத்தினர் உதவியுடன் அந்த முதிய வரை சத்தியமங்கலம் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.
போலீசார் அந்த முதியவரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் கேரளா மாநிலம் வலயார் பகுதியைச் சேர்ந்த சத்தியசீலன் (73) என்பது தெரிய வந்தது. அவர் கையில் ஒரு மஞ்சள் கலர் பை வைத்திருந்தார். அதை திறந்து பார்த்தபோது அதில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 192 கேரளா லாட்டரி சீட்டுகள் இருந்தது தெரியவந்தது. மேலும் ரூ. 8,700 ரொக்க பணம் இருந்ததும் தெரிய வந்தது.
இதையடுத்து சத்தியமங்கலம் போலீசார் சத்திய சீலன் மீது வழக்கு பதிவு செய்து அவரிடம் இருந்து லாட்டரி சீட்டு, பணத்தை பறிமுதல் செய்தனர்.
- ஓய்வு பெற்ற வங்கி கேசியர் போலீசில் புகார் செய்தார்.
- 6 மாதமாக முழு வட்டி கட்ட முடியதால் ராயக்கோட்டையில் உள்ள 840 சதுர அடி வீட்டுமனை நிலத்தை எழுதிக்கொடுத்தார்.
ராயக்கோட்டை,
கிருஷ்ணகிரி மாவட்டம், ராயக்கோட்டை அருகே உள்ள உடையாண்டஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சந்திரன் (வயது60).இவர் ஓய்வு பெற்ற வங்கி கேசியர். இவர் கடந்த 2011-ம் ஆண்டு ராயக்கோட்டையில் உள்ள ஓசூர் சாலையை சேர்ந்த ஆறுமுகம் (60) என்பவரிடம் 2 லட்சம் ரூபாய் கடன் வாங்கினார்.
அந்த கடனுக்காக மாதமாதம் ரூ.12 ஆயிரம் வட்டி கடந்த 2 ½ வருடம் கட்டி வந்துள்ளார்.
அதன்பிறகு 6 மாதமாக முழு வட்டி கட்ட முடியதால் ராயக்கோட்டையில் உள்ள 840 சதுர அடி வீட்டுமனை நிலத்தை எழுதிக்கொடுக்க சொல்லி கேட்டதாகவும் ரூ 6,30,000- மதிப்புள்ள வீட்டுமனை இடத்தை 2014 ம் ஆண்டு ஆறுமுகத்திற்கு பத்திரம் பதிவு செய்து கொடுத்தார்.
பின்னர் ஆறுமுகம் ரூ.60 ஆயிரம் ரூபாயை கொடுத்துள்ளார்.
15 நாள் கழித்து மீண்டும் வந்து மாதமாதம் ரூ.5000 வட்டி கொடுக்க வேண்டும் என்று சந்திரனிடம் கேட்டுள்ளார்.
இது குறித்து சந்திரன் கொடுத்த புகாரின்பேரில் ராயக்கோட்டை போலீசார் கந்துவட்டி தடை சட்டத்தில் வழக்குபதிவு செய்து விசாரனை செய்து வருகின்றனர்.






