search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முதல்வர் அழைப்பு"

    காவிரி விவகாரம் தொடர்ந்து ஆலோசனை நடத்துவதற்காக, கர்நாடகாவில் முதல்வர் குமாரசாமி தலைமையில் இன்று அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற உள்ளது. #Kumaraswamy #Allpartymeet #CauveryIssue
    பெங்களூரு:

    காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக உச்ச நீதிமன்ற உத்தரவின்படி காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி நதிநீர் ஒழுங்காற்றுக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இரண்டு அமைப்புகளுக்கும் உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். காவிரி நதிநீர் மேலாண்மை வாரியத்தின் தலைவராக மத்திய நீர்வள ஆணையத்தின் தலைவர் மசூத் ஹுசேன் நியமிக்கப்பட்டுள்ளார்.

    இந்த ஆணையத்தின் தலைமையகம் டெல்லியில் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு தலைவர், உறுப்பினர்கள், பகுதி நேர உறுப்பினர்கள் 9 பேர் நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து, இந்த ஆணையத்தின் முதல் கூட்டம் வரும் ஜூலை 2-ந் தேதியன்று டெல்லியில் நடைபெற உள்ளது.

    இந்த கூட்டத்தில், தமிழகம், கர்நாடகா, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களின் உறுப்பினர்களும், மத்திய அரசு பிரதிநிதிகளும் பங்கேற்கிறார்கள். இதில், பல்வேறு அம்சங்கள் பற்றி ஆலோசிக்கப்பட உள்ளது.



    இந்த நிலையில், கர்நாடகாவில் இன்று அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு முதல்வர் குமாரசாமி அழைப்பு விடுத்துள்ளார்.  குமாரசாமி தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில், எதிர்க்கட்சி தலைவர் எடியூரப்பா உள்ளிட்ட கட்சி தலைவர்கள் கலந்து கொள்கின்றனர். இந்த கூட்டத்தில், காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் கர்நாடகம் சார்பில் முன்வைக்கப்படும் கருத்துக்கள் குறித்து ஆலோசிக்கப்படும் என்று கூறப்படுகிறது. #Kumaraswamy #Allpartymeet #CauveryIssue
    ×