search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மீனவர்களுக்கு"

    • வெளியுறவுத்துறை மந்திரியிடம் விஜய் வசந்த் எம்.பி. கோரிக்கை
    • அதிர்ஷ்டவசமாக மீனவர்கள் அனைவரும் உயிர்தப்பி கப்பல் மூலம் மாலத்தீவுக்கு சென்றனர்.

    நாகர்கோவில்:

    விஜய்வசந்த் எம்.பி. வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- குமரி மாவட்டம் இரவிபுத்தன்துறையை சேர்ந்த 7 மீனவர்கள் உள்பட 12 மீனவர்கள் கடந்த 11-ந்தேதியன்று மாலத்தீவு அருகே ஆழ்கடலில் மீன் பிடித்து கொண்டிருந்த போது, அந்நாட்டின் இழுவை கப்பல் மீன வர்களின் படகு மீது மோதி விபத்தை ஏற்படுத்தியது. இதில் படகு மற்றும் அதில் இருந்த விலை உயர்ந்த பொருட்கள் கடலில் முழ்கின. அதிர்ஷ்டவசமாக மீனவர்கள் அனைவரும் உயிர்தப்பி கப்பல் மூலம் மாலத்தீவுக்கு சென்றனர்.

    அந்நாட்டு அரசு அவர்களை கைது செய்தது. பின்னர் அவர்களை விடுவிக்க இந்திய தூதரகத்தை நான் தொடர்பு கொண்டு நடவடிக்கை மேற்கொண்டேன். மீனவர்கள் தாயகம் திரும்பி வரவும் நடவடிக்கை எடுத்தேன். பின்னர் ஊர் திரும்பிய மீனவர்களை சந்தித்து அவர்கள் கோரிகை் கையை கேட்டறிந்தேன். அப்போது சேதம் அடைந்த படகு உள்பட ரூ.1½ கோடி மதிப்பில் நஷ்டம் ஏற்பட்டதாகவும், அதனை கப்பல் நிறுவனத்திடம் இருந்து பெற்று தரவேண்டும் என கோரிக்கை வைத்தனர். அதைத்தொடர்ந்து நான் நேற்று டெல்லி சென்று வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கரை சந்தித்தேன். அப்போது மாலத்தீவு கப்பல் மோதி படகு விபத்துக் குள்ளான மீனவர்களுக்கு நஷ்டஈடு வழங்க வேண்டும் என மனு அளித்தேன்.

    இதுதொடர்பாக மாலத்தீவு அரசை தொடர்பு கொண்டு நிறுவனத்திடம் இருந்து நஷ்டஈடு பெற்று தர நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய மந்திரி உறுதியளித்துள்ளார். இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

    ×