search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மின்வாரிய அலுவலகம் முற்றுகை"

    • தமிழகத்தில் கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. பல இடங்களில் 100 டிகிரியை தாண்டி வாட்டி வதைத்து வருகிறது.
    • திருவள்ளூர் மாவட்டத்திலும் பல்வேறு இடங்களில் தொடர்ந்து மின்தடை ஏற்பட்டு வருகிறது.

    திருவள்ளூர்:

    தமிழகத்தில் கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. பல இடங்களில் 100 டிகிரியை தாண்டி வாட்டி வதைத்து வருகிறது. இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் பல இடங்களில் அறிவிக்கப்படாத மின்வெட்டால் பொதுமக்கள் தவித்து வருகிறார்கள். இரவு நேரத்தில் ஏற்படும் தொடர் மின் வெட்டால் புழுக்கத்தாலும், வியர்வையாலும் தூக்கமின்றி தவிக்கும் நிலை உள்ளது.

    இந்த நிலையில் திருவள்ளூர் மாவட்டத்திலும் பல்வேறு இடங்களில் தொடர்ந்து மின்தடை ஏற்பட்டு வருகிறது. திருவள்ளூர் நகரப்புறங்களில் ஒரு மணி நேரத்திற்கு மேலாகவும், கிராமப் பகுதிகளில் 6 மணி நேரத்திற்கு மேலாகவும் அறிவிக்கப்படாத மின்வெட்டு நிலவி வருகிறது. இதனால் பொது மக்கள் பகல் நேரம் மட்டுமன்றி இரவிலும் தவிக்கும் நிலைக்கு ஆளாகி உள்ளனர்.

    கடம்பத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட அதிகத்தூர் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமத்தில் நேற்று 6 மணி நேரம் தொடர் மின்வெட்டு ஏற்பட்டது. இரவு நேரத்திலும் மின்தடையால் மக்கள் தவித்தனர்.

    இதனால் ஆத்திரம் அடைந்த அதிகத்தூர் கிராம மக்கள் மணவாள நகர் மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு அங்கிருந்த அதிகாரிகளிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்ட கிராமமக்களிடம் அதிகாரிகள் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போகச்செய்தனர்.

    இது குறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது, கிராமங்களுக்கு அருகே உள்ள தொழிற்சாலைகளுக்கு மின்சாரம் மாற்றி அனுப்பப்படுகிறது. இதனால் கிராமப் புறங்களில் மின்சாரம் தடைப்படுகிறது. இதுபற்றி மின்சார வாரிய அதிகாரியை தொடர்பு கொண்டால் சரியான முறையில் பதில் அளிக்கவில்லை. தொடர் மின் வெட்டால் மக்கள் கடும் அவதி அடைந்து வருகிறார்கள்.

    எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக கிராமப்புற பகுதியில் ஏற்படும் மின்வெட்டை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    ×