search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்"

    • கச்சேரி வீதி நகராட்சி நடுநிலைப்பள்ளி, தேவனூர் புதூர் அரசு மேல்நிலைப்பள்ளி ஆகிய ஐந்து மையங்களில் நடைபெற்றது.
    • ராம்பிரசாத் ஆகியோர் குறுவள மையங்களில் பயிற்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

     உடுமலை:

    தொடக்கப் பள்ளிகளில் நான்காம் வகுப்பு மற்றும் ஐந்தாம் வகுப்பு கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு, கற்றல் இழப்பை மாணவர்களிடம் சரி செய்வதற்காக வழங்கப்பட்டுள்ள இணைப்பு பாட கட்டகம் சார்ந்த குறுவள மைய பயிற்சி உடுமலையில் பாரதியார் நூற்றாண்டு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, ராஜேந்திரா ரோடு அரசு மேல்நிலைப்பள்ளி, கச்சேரி வீதி நகராட்சி நடுநிலைப்பள்ளி, தேவனூர் புதூர் அரசு மேல்நிலைப்பள்ளி ஆகிய ஐந்து மையங்களில் நடைபெற்றது. உடுமலையில் நடைபெற்ற பயிற்சிகளை திருமூர்த்தி நகர் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன துணை முதல்வர் விமலா தேவி முதுநிலை விரிவுரையாளர்கள் சுப்பிரமணி, சரவணன் ஆகியோர் துவக்கி வைத்தனர்.

    திருமூர்த்தி நகர் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல் நிலை விரிவுரையாளர் சுப்பிரமணியன் இணைப்பு பாட கட்டகம் பற்றியும் வினாக்கள் தயாரித்து மாணாக்கர்களை எவ்வாறு நாம் கற்றல் விளைவுகளை அடையச் செய்வது என்பது பற்றியும் ஆசிரியர்களிடம் எடுத்துக் கூறினார். முதுநிலை விரிவுரையாளர் சரவணன் இணைப்பு பாட கட்டகங்களை தேவையான மாணவர்களுக்கு பயன்படுத்தி அவர்களை அந்த இணைப்பு பாடகட்டகத்தினை பயன்படுத்த செய்வதன் மூலமாக மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ள கற்றல் இழப்பினை சரி செய்ய முடியும் என்று பேசினார் .

    உடுமலை வட்டார கல்வி அலுவலர்கள் சரவணக்குமார், ஆறுமுகம் ,மனோகரன் பயிற்சியினுடைய முக்கியத்துவம் குறித்தும் இணைப்பு பாடகட்டகத்தைப் பற்றியும் பேசினர். திருப்பூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திருவளர் செல்வி உடுமலை ஒன்றிய குறுவள மையங்களை பார்வையிட்டு ஆசிரியர்கள் மாணவர்களிடம் சிந்தனையை தூண்டும் விதமாகவும், எதிர்பார்க்கப்படும் கற்றல் விளைவுகளுக்கு ஏற்ப வினாக்களை தயார் செய்து அவர்களின் கற்றல் திறனை மதிப்பீடு செய்ய வேண்டும். இந்த இணைப்பு பாடகட்டகம் நான்காம் வகுப்பு மற்றும் ஐந்தாம் வகுப்பில் கற்றல் குறைபாடுள்ள மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதை சரியாக பயன்படுத்தி மாணவர்களின் கற்றல் இழப்பை சரி செய்து அடிப்படை திறன்களையும் அந்தந்த மாணவர்கள் அந்தந்த வகுப்பில் பெறக்கூடிய திறன்களையும் பெறச் செய்வதற்காக ஆசிரியர்கள்இப்பயிற்சியினை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று பேசினார். குறு வள மையங்களில் கருத்தாளர்களாக உடுமலை ஒன்றிய ஆசிரியர்கள் செயல்பட்டனர். வட்டார வளமைய மேற்பார்வையாளர் சண்முகசுந்தரம் ,ஆசிரியப் பயிற்றுநர்கள் கார்த்திக் , காயத்ரி ,நவீன் ராஜா, சிவமணி,ஜெனட், ராம்பிரசாத் ஆகியோர் குறுவள மையங்களில் பயிற்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

    ×