search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாணவி ஸ்ரீமதி"

    • கடந்த ஆண்டு ஜூலை 17-ந்தேதி பள்ளி வளாகத்தில் கலவரம் வெடித்தது.
    • கலவரத்தை தொடர்ந்து சுமார் 600 பேர் வரை கைது செய்யப்பட்டனர்.

    விழுப்புரம்:

    கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே உள்ள பெரியநெசலூரை சேர்ந்த மாணவி ஸ்ரீமதி.

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அடுத்த கனியாமூரில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். மாணவி ஸ்ரீமதி பள்ளியின் 3-வது மாடியில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்ததாக கூறப்பட்டது. ஆனால், அவரது தாய் தனது மகளின் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறினார்.

    இதைத்தொடர்ந்து கடந்த ஆண்டு ஜூலை 17-ந்தேதி பள்ளி வளாகத்தில் கலவரம் வெடித்தது. இந்த கலவரத்தை தொடர்ந்து சுமார் 600 பேர் வரை கைது செய்யப்பட்டனர். மாணவி உயிரிழந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த வழக்கு விசாரணை விழுப்புரம் கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கினை ஆகஸ்ட் 22-ந்தேதிக்கு ஒத்தி வைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

    • மாணவியின் உடலில் 2 காயங்கள் மட்டும் அதிகப்படுத்தி குறிப்பிடப்பட்டுள்ளது.
    • முதல் பரிசோதனையில் எடுக்கப்படாத சோதனைகளை 2வது பரிசோதனையில் கூடுதலாக சோதனைகள் எடுக்கப்பட்டுள்ளது.

    வேப்பூா்:

    கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே பெரிய நெசலூர் கிராமத்தை சேர்ந்தவர் ஸ்ரீமதி. இவர் கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூர் தனியார் பள்ளியில் கடந்த மாதம் 13-ந்தேதி மர்மமான முறையில் உயிரிழந்தார்.

    இவரது பெற்றோர் தனது மகள் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி உறவினர்களுடன் பல கட்ட போராட்டங்கள் நடத்தினர்.

    தற்போது தமிழக அரசு இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட்டு தற்போது விசாரணைகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் முதல் கட்ட பிரேத பரிசோதனை 14.7.2022 அன்று செய்யப்பட்டது

    இந்த பிரேத பரிசோதனையில் தங்களுக்கு திருப்தி இல்லை எனவும் மறுபிரேத பரிசோதனை செய்ய வேண்டும் எனவும் அந்த பிரேத பரிசோதனையில் தங்கள் தரப்பு மருத்துவர் இருக்க வேண்டும் எனவும் கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

    வழக்கை விசாரணை செய்த உயர்நீதிமன்றம் தனி மருத்துவக் குழு ஒன்றை அமைத்தும் அதில் தடவியல் நிபுணர் ஒருவரையும் அமைத்தும் 19.7.2022 அன்று மறு பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என உத்தரவிட்டது.

    இந்த உத்தரவில் தங்கள் தரப்பில் மருத்துவர் அமைக்கவில்லை எனவும் அமைக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் ஸ்ரீமதியின் பெற்றோர் மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்கை விசாரணை செய்த உச்சநீதிமன்றம் உயர் நீதிமன்றத்தையே அணுக வேண்டும் என உத்தரவிட்டது.

    ஸ்ரீமதியின் பெற்றோர் மீண்டும் உயர் நீதிமன்றத்தை அணுகிய போது 2 பிரேத பரிசோதனை அறிக்கைகள் மற்றும் 2 பிரேத பரிசோதனைகளையின்போது எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகளை புதுச்சேரி மருத்துவ குழுவினர் மீண்டும் ஆய்வு செய்து அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என என உத்தரவிட்டது.

    அதன்படி நீதிமன்றத்தில் ஜிப்மர் மருத்துவக் குழுவினர் ஆய்வு அறிக்கை முடிவுகளை தாக்கல் செய்தது. இந்த ஆய்வு அறிக்கைகளை ஸ்ரீமதியின் பெற்றோர் வேண்டுமென நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். விசாரணை முடிவில் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    இதுகுறித்து மாணவி ஸ்ரீமதியின் வக்கீல் காசி விசுவநாதன் கூறியதாவது:-

    கடந்த மாதம் 14-ந் தேதி நடைபெற்ற பிரேத பரிசோதனைக்கும், 19-ந் தேதி அன்று நடைபெற்ற பிரேத பரிசோதனை முடிவுகளில் சொல்லாத ஒரு சில தடயங்களை 2-வது பிரேத பரிசோதனையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மாணவியின் உடலில் 2 காயங்கள் மட்டும் அதிகப்படுத்தி குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் முதல் பரிசோதனையில் எடுக்கப்படாத சோதனைகளை 2வது பரிசோதனையில் கூடுதலாக சோதனைகள் எடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் முதல் பிரேத பரிசோதனை அறிக்கைக்கும் 2-வது பிரேத பரிசோதனை அறிக்கைக்கும் சில வேறுபாடுகள் இருக்கின்றன.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×