என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மறியல். பொதுமக்கள்"

    • பயணிகள் நிழற்குடை அமைக்ககோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    • சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    கும்பகோணம்:

    தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் அருகே மகாரா ஜபுரம் கிராமத்தில் கல்லணை பூம்புகார் சாலையில் பொது மக்கள் பயன்பாட்டிற்காக பயணிகள் நிழற்குடை அமைக்கப்பட்டு இருந்தது கடந்த 30 ஆண்டுக்கு மேலாக இருந்த இந்த பயணிகள் நிழற்குடை சாலை விரிவாக்க பணிகளால் இடிக்கப்பட்டது.

    கடந்த இரண்டாண்டுக்கு மேலாக நிழற்குடை இல்லாமல் வெயிலிலும் மழையிலும் பொதுமக்கள் நின்று பேருந்தில் பயணம் செய்யும் நிலை ஏற்பட்டது.

    இதனால் பொது மக்கள் அவதியடைந்தனர்.

    இந்நிலையில் மீண்டும் அதே இடத்தில் பயணிகள் நிழற்குடை அமைக்ககோரி கல்லணை பூம்புகார் சாலையை முற்றுகையிட்டு அதேபகுதியை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதனால் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக கல்லணை பூம்புகார் சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    இது குறித்து தகவல் அறிந்ததும் பந்தநல்லூர் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட வர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    பேச்சு வார்த்தை யில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து போ ராட்டம் கைவிடப்பட்டது.

    ×