search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மருத்துவக்கல்லூரி மாணவர்கள்"

    • மருத்துவக் கல்லூரி டீன் முருகேசன் உடல் தானம் செய்த 3 பேரின் குடும்பத்துக்கு சான்றிதழ் வழங்கி கவுரவித்தார்.
    • மாணவர்கள் கவனம் சிதறாமல் படிக்க வேண்டும் என்றார்.

    திருப்பூர் :

    திருப்பூர் அரசு மருத்துவ கல்லூரியில் உடற்கூறியல் துறை சார்பில் உடற்கூறியல் தினம் தொடர்பான கருத்தரங்கம் மற்றும் கண்காட்சி நடந்தது. உடற்கூறியல் துறைத்தலைவர் ராஜேஸ்வரி வரவேற்றார்.மருத்துவக் கல்லூரி டீன் முருகேசன், உடல் தானம் செய்த 3 பேரின் குடும்பத்துக்கு, சான்றிதழ் வழங்கி கவுரவித்த பின் பேசியதாவது:-மருத்துவக் கல்லூரியில் படிக்க வாய்ப்பு கிடைப்பதற்கு மாணவர்கள் கொடுத்து வைத்திருக்க வேண்டும். மாண வர்கள் நல்லொழுக்கத்துடன் இருந்து, நம் கல்லூரிக்கு பெருமை தேடித்தர வேண்டும். மாணவர்கள் இன்று போல் என்றும் மகிழ்ச்சியுடன் இருக்க வேண்டும்.அடுத்த ஆண்டு மாணவர்கள் வந்தாலும், நம் கல்லூரியில் ராகிங் என்ற பேச்சுக்கே இடம் கொடுக்க கூடாது. உடற்கூறு துறையில் தெரிந்து கொள்ள வேண்டியவை நிறைய உள்ளது. மாணவர்கள் கவனம் சிதறாமல் படிக்க வேண்டும் என்றார்.

    தொடர்ந்து, உடற்கூறு தினம் எனும் தலைப்பில், மருத்துவ கல்லூரி மாணவர்களுக்கான ஓவியம், கற்பனை திறனை வெளிப்படுத்தும் போட்டிகள் நடத்தப்பட்டது.மனித உடல் பாகங்களை வரைந்து அவை எவ்வாறு இயங்குகிறது, இதயம், நுரையீரல், மூளை செயல்பாடுகள் குறித்து மாணவர்கள் பங்கேற்றவர்களுக்கு எடுத்துரைத்தனர்.பொது மருத்துவத்துறை இணை பேராசிரியர் செண்பகஸ்ரீ, அறுவைசிகிச்சை துறை பேராசிரியர் உமா ஆகியோர் மாணவர்களின் ஓவியம், படைப்புகளை ஆய்வு செய்து, சிறப்பு படைப்புகளை தேர்வு செய்தனர். நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக உடற்கூறியல் துறை அரங்கத்தை டீன் முருகேசன் திறந்து வைத்தார்.

    ×