search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மத்திய சட்டத்துறை மந்திரி"

    • உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியிடம் இது குறித்து ஏற்கனவே பேசியுள்ளேன்.
    • ஒரு மொழியை மட்டும் திணிக்கப்படுவதை நான் எதிர்க்கிறேன்.

    நீதிமன்றங்களின் நடவடிக்கைகளில் பிராந்திய மொழிகளைப் பயன்படுத்துவதற்கு மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை மந்திரி கிரண் ரிஜிஜு ஆதரவு தெரிவித்துள்ளார். சென்னையில் உள்ள தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின்12வது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்று பேசிய அவர் கூறியுள்ளதாவது:

    (பொதுமக்கள்) நீதித்துறையை எளிதாக அணுகுவதற்கு, பிராந்திய மொழிகளில் நீதிமன்ற நடவடிக்கைகள் இருப்பது காலத்தின் கட்டாயம். நமது பிரதமர் நமது கலாச்சாரம் மற்றும் நமது மொழியுடன் நாட்டை முன்னேற்ற வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளார் என்பது உங்களுக்குத் தெரியும்.

    நீதிமன்ற நடவடிக்கைகள் மற்றும் நீதித்துறையில் எதிர்காலத்தில் பிராந்திய மொழிகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி, உச்ச நீதிமன்ற மூத்த நீதிபதிகள் மற்றும் அனைத்து உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிகளிடமும் ஏற்கனவே நான் பேசியுள்ளேன்.

    உயர்நீதிமன்றம் மற்றும் அனைத்து மாவட்ட மற்றும் துணை நீதிமன்றங்களில் (எதிர்காலத்தில்) தமிழ் மொழி முக்கிய இடம் பெறுவதைக் கண்டு நாம் அனைவரும் பெருமைப்படுவோம். தமிழ் மிகச் சிறந்த மொழி, ஒரு மொழியை மட்டும் திணிப்பதை நான் எதிர்க்கிறேன். உள்ளூர் மொழிகளுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியின் கருத்து தற்போதைய சூழலை பிரதிபலிக்கிறது.
    • இந்தியாவில் நீதித்துறை முற்றிலும் பாதுகாக்கப் பட்டுள்ளது.

    ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடைபெற்ற தேசிய சட்ட ஆய்வு பல்கலைக்கழக நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா, ஊடகங்களால் பரப்பப்படும் பாரபட்சமான கருத்துக்கள் மக்களைப் பாதிப்பதாக தெரிவித்துள்ளார்.

    ஊடகங்கள் பொறுப்பை மீறி, எங்கள் ஜனநாயகத்தை எடுத்துக் கொள்வதாகவும், இது போன்ற செயல்பாட்டினால் நீதி வழங்குவது பாதிக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.அச்சு ஊடகம் குறிப்பிட்ட அளவு பொறுப்புணர்வைக் கொண்டுள்ளது என்றும் ஆனால் மின்னணு ஊடங்களுக்கு பொறுப்புக்கூறல் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

    இந்நிலையில் மின்னணு ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்கள் குறித்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தெரிவித்த கருத்துக்கள் நாடு முழுவதும் தற்போதைய சூழலை பிரதிபலிப்பதாகவும், இது குறித்து தாம் கருத்து எதுவும் தெரிவிக்க விரும்பவில்லை என்றும் மத்திய சட்டத்துறை மந்திரி கிரண் ரிஜிஜூ கூறியுள்ளார். இது குறித்து யாரும் பேச விரும்பினால், பொது களத்தில் விவாதிக்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

    உலகில் எந்த நீதித்துறையும் இந்தியாவைப் போல சுதந்திரமாக இல்லை என்றும், இந்தியாவில் நீதிபதிகள் மற்றும் நீதித்துறை முற்றிலும் பாதுகாக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார். எந்த நாட்டைச் சேர்ந்த நீதிபதியோ அல்லது நீதித்துறையோ இந்தியாவைப் போல சுதந்திரமாக இல்லை என்று என்னால் தெளிவாக கூற முடியும் என்றும் மத்திய மந்திரி கிரண் ரிஜிஜூ கூறியுள்ளார்.

    ×