search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்காடும் மொழியாக தமிழ் இடம் பெறும்- மத்திய சட்டத்துறை மந்திரி பேச்சு
    X

    மத்திய சட்டத்துறை மந்திரி கிரண் ரிஜிஜு

    சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்காடும் மொழியாக தமிழ் இடம் பெறும்- மத்திய சட்டத்துறை மந்திரி பேச்சு

    • உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியிடம் இது குறித்து ஏற்கனவே பேசியுள்ளேன்.
    • ஒரு மொழியை மட்டும் திணிக்கப்படுவதை நான் எதிர்க்கிறேன்.

    நீதிமன்றங்களின் நடவடிக்கைகளில் பிராந்திய மொழிகளைப் பயன்படுத்துவதற்கு மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை மந்திரி கிரண் ரிஜிஜு ஆதரவு தெரிவித்துள்ளார். சென்னையில் உள்ள தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின்12வது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்று பேசிய அவர் கூறியுள்ளதாவது:

    (பொதுமக்கள்) நீதித்துறையை எளிதாக அணுகுவதற்கு, பிராந்திய மொழிகளில் நீதிமன்ற நடவடிக்கைகள் இருப்பது காலத்தின் கட்டாயம். நமது பிரதமர் நமது கலாச்சாரம் மற்றும் நமது மொழியுடன் நாட்டை முன்னேற்ற வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளார் என்பது உங்களுக்குத் தெரியும்.

    நீதிமன்ற நடவடிக்கைகள் மற்றும் நீதித்துறையில் எதிர்காலத்தில் பிராந்திய மொழிகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி, உச்ச நீதிமன்ற மூத்த நீதிபதிகள் மற்றும் அனைத்து உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிகளிடமும் ஏற்கனவே நான் பேசியுள்ளேன்.

    உயர்நீதிமன்றம் மற்றும் அனைத்து மாவட்ட மற்றும் துணை நீதிமன்றங்களில் (எதிர்காலத்தில்) தமிழ் மொழி முக்கிய இடம் பெறுவதைக் கண்டு நாம் அனைவரும் பெருமைப்படுவோம். தமிழ் மிகச் சிறந்த மொழி, ஒரு மொழியை மட்டும் திணிப்பதை நான் எதிர்க்கிறேன். உள்ளூர் மொழிகளுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    Next Story
    ×