என் மலர்
நீங்கள் தேடியது "மது விற்பனையாளர்"
- தமிழகத்தில் சில டாஸ்மாக் கடைகளில் பாட்டிலுக்கு கூடுதலாக 10 ரூபாய் வாங்குவதாக புகார் எழுந்தது.
- நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதலாக வாங்கினால் சஸ்பெண்டு உள்பட நடவடிக்கைகள் பாயும் என டாஸ்மாக் நிர்வாகம் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
சேலம்:
தமிழகத்தில் சில டாஸ்மாக் கடைகளில் பாட்டிலுக்கு கூடுதலாக 10 ரூபாய் வாங்குவதாக புகார் எழுந்தது. இதனால் டாஸ்மாக் ஊழியர்களுக்கும் மது வாங்குவோருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
இதையடுத்து மது பாட்டில்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதலாக வாங்கினால் சஸ்பெண்டு உள்பட நடவடிக்கைகள் பாயும் என டாஸ்மாக் நிர்வாகம் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. தொடர்ந்து டாஸ்மாக் கடைகளை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வந்தனர்.
இந்த நிலையில் மகுடஞ்சாவடி அருகே உள்ள கனககிரி டாஸ்மாக் கடை விற்பனையாளர் கந்தசாமி (45) என்பவர் மது பாட்டில் ஒன்றுக்கு கூடுதலாக 10 ரூபாய் வாங்குவதாக புகார்கள் எழுந்தது. இதையடுத்து டாஸ்மாக் அதிகாரிகள் அந்த கடைகளில் ஆய்வு செய்தனர். அப்போது அவர் பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலாக வாங்கியது உறுதி செய்யப்பட்டதால் சஸ்பெண்டு செய்யப்பட்டார்.






