search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மண்எண்ணை ஊற்றி"

    • தமிழ்செல்வி அலறல் சத்தம் கேட்டு வெளியே வந்து பார்த்த போது உடலில் தனக்கு த்தானே மண்எண்ணையை ஊற்றி தீ வைத்து எரிந்து கொண்டிருந்தது.
    • சிகிச்சை பலனின்றி தமிழ்ச்செல்வி பரிதாபமாக இறந்தார்.

    அந்தியூர்:

    அந்தியூர் மாரியப்பா வீதி பகுதியை சேர்ந்த மெய்யரசன் (வயது 24). தனியார் பனியன் கம்பெனியில் வேலை செய்து வருகின்றார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை தனது தாய் தமிழ்ச்செல்வி உடன் வசித்து வருகின்றார்.

    இவரது தந்தை கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இந்த நிலையில் தமிழ்ச்செல்வி க்கு கடந்த 3 வருடத்திற்கு முன்பு உடல்நலம் சரியில்லாததால் மருத்துவ மனைக்கு சென்று சரி செய்து மருந்து மாத்திரை கள் சாப்பிட்டு வந்ததார்.

    இந்நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு மூச்சு திணறல் ஏற்பட்டதால் கோவையில் உள்ள தனியார் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று மாத்திரைகள் உட்கொண்டு வந்ததாகவும் கூறப்படுகிறது.

    இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு மெய்யரசன், தாய் தமிழ்செல்வி இருவரும் உறங்க சென்றனர். அதிகாலை 5 மணி அளவில் வீட்டிற்கு வெளியே தமிழ்செல்வி அலறல் சத்தம் கேட்டு வெளியே வந்து பார்த்த போது உடலில் தனக்கு த்தானே மண்எண்ணையை ஊற்றி தீ வைத்து எரிந்து கொண்டிருந்தது.

    உடனே அக்கம் பக்கத்தினர் உதவியுடன் தமிழ்செல்வியை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் அந்தியூர் அரசு மருத்துவ மனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக பெருந்துறை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

    இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி தமிழ்ச்செல்வி பரிதாபமாக இறந்தார். இது குறித்து மெய்யரசன் கொடுத்த புகாரின் பேரில் அந்தியூர் சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.

    • கடனை திருப்பித் தரவில்லை என போலீஸ் நிலையத்தில் செல்வி அளித்த புகார் அளித்தார்.
    • சத்தியமங்கலம் டி.எஸ்.பி. சந்திரசேகர், வளர்மதி, கதிர்வேல் தம்பதியினரை டிஎஸ்பி அலுவலகத்திற்கு அழைத்து விசாரணை நடத்தினார்.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வரதம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணவேணி. இவரது மகள் வளர்மதி மற்றும் மருமகன் கதிர்வேல்.

    இவர்கள் சிக்கரச ம்பாளையம் பகுதியை சேர்ந்த செந்தில்,செல்வி தம்பதியிடம் கடந்த 2019-ம் ஆண்டு வீடு கட்டுவதற்காக 2.50 லட்சம் ரூபாய் பணம், 4 பவுன் நகை கடனாக வாங்கியுள்ளனர்.

    இதனிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு கடன் கொடுத்த செந்தில், செல்வி தம்பதியினர் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டனர். இதையடுத்து கடன் பெற்ற வளர்மதி, கதிர்வேல் தம்பதியிடம் செல்வி நீங்கள் வாங்கிய கடன் தொகையை என்னிடம் அளிக்குமாறு கேட்டுள்ளார்.

    இதேபோல் செல்வியின் கணவர் செந்தில் ஒருபுறம் தன்னிடம் தான் பணம் நகை கொடுக்க வேண்டும் என்று வளர்மதி -கதிர்வேலிடம் கேட்டுள்ளார்.

    இந்த சூழ்நிலையில் கடனை அடைக்க வளர்மதி-கதிர்வேல் தம்பதியினர் கால அவகாசம் கேட்டுள்ளனர். இருப்பினும் கடனை திருப்பித் தரவில்லை என போலீஸ் நிலையத்தில் செல்வி அளித்த புகார் அளித்தார்.

    இந்த நிலையில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு சத்தியமங்கலம் டி.எஸ்.பி. சந்திரசேகர், வளர்மதி, கதிர்வேல் தம்பதியினரை டிஎஸ்பி அலுவலகத்திற்கு அழைத்து விசாரணை நடத்தினார். அதன் பின்னர் அவர்கள் 2 பேர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

    இதனால் அச்சமடைந்த வளர்மதி, கதிர்வேல் ஆகிய 2 பேரும் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் மாயமாகிவிட்டனர். தனது மகள் மருமகனை, கிருஷ்ணவேணி பல்வேறு இடங்களிலும் தேடியும் அவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை.

    இந்நிலையில் நேற்று கிருஷ்ணவேணி சத்தியமங்கலம் போலீஸ் நிலையத்திற்கு வந்தார். அப்போது கிருஷ்ணவேணி திடீரென தான் கொண்டு வந்த மண்எண்ணை கேனை திறந்து தனது உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.

    இதை பார்த்து அதிர்ச்சியடைந்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் ஓடி வந்து அவரை மீட்டு அவரிடம் விசாரணை நடத்தினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

    ×