என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மக்கள் புகார்"

    • மர்மமான முறையில் 5 வயது மதிக்கத்தக்க புள்ளிமான் ஒன்று இறந்து கிடந்தது.
    • மானின் இறப்பு குறித்து காரணம் அறிந்த பிறகு வனத்துறை தீவிர விசாரணை மேற்கொள்ளும் என்று தெரிவித்துள்ளனர்.

    பாப்பிரெட்டிப்பட்டி,

    பொம்மிடி அருகே தருமபுரி, சேலம் மாவட்ட எல்லையில் சேர்வராயன்மலை உள்ளது. இந்த வனப்பகுதியில் அணை கட்டு என்ற இடத்தில் காடுகளை ஒட்டிய தனியார் நிலம் சுமார் 100 ஏக்கர் உள்ளது. இந்த நிலப்பகுதியை ஓட்டிய பகுதியில் மர்மமான முறையில் 5 வயது மதிக்கத்தக்க புள்ளிமான் ஒன்று இறந்து கிடந்தது.

    அப்பகுதி வழியாக வந்த பொதுமக்கள் இது குறித்து வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர்.உடனடியாக பாப்பிரெட்டிப்பட்டி வன சரகர் உத்தரவின் பேரில் சேர்வராயன்மலை வன அதிகாரி செல்வராஜ் தலைமையிலான வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று இறந்த மான் உடலை பொம்மிடி வன அலுவலகத்திற்கு எடுத்து வந்தனர். இதன் எடை 50 கிலோ இருக்கும். இறந்து கிடந்த அந்த ஆண் புள்ளி மானின் உடலில் நாய்க்கடிகள் இல்லை.

    இந்த வனப் பகுதியை ஒட்டி சிலர் துப்பாக்கியுடன் அடிக்கடி சுற்றி வருவதால் இந்த மானை மர்ம நபர்கள் சுட்டு கொன்றிருப்பார்களா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இந்த பகுதியில் வேட்டைகாரர்கள் அடிக்கடி நாட்டு துப்பாக்கிகளுடன் சுற்றி திரிவதாகவும் அவர்கள் இறைச்சிக்காக மானை சுட்டு கொண்டிருக்கலாம். மக்களின் நடமாட்டம் தெரிந்து அப்படியே விட்டு விட்டு சென்றிருக்கலாம் என பொதுமக்கள் சந்தேகம் எழுப்புகின்றனர். இறந்து போன புள்ளி மான் உடல் தற்போது பொம்மிடியில் உள்ள வனத்துறை அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளது.

    கால்நடை மருத்துவர் மூலமாக உடற்கூறு ஆய்வு செய்ய இருப்பதாகவும்,அதன் பிறகு மானின் இறப்பு குறித்து காரணம் அறிந்த பிறகு வனத்துறை தீவிர விசாரணை மேற்கொள்ளும் என்று தெரிவித்துள்ளனர்.

    • கலெக்டர் தீபக் ஜேக்கப்பிடம் புகார் மனு ஒன்றை அளித்தனர்.
    • நிறுவனத்தின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள பாரண்டப்பள்ளி கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் கலெக்டர் தீபக் ஜேக்கப்பிடம் புகார் மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    போச்சம்பள்ளி பகுதியில் கடந்த 28 ஆண்டுகளுக்கு முன்பு 1,200 ஏக்கர் நிலங்களை சிப்காட் அமைப்பதற்காக அரசு கையகப்படுத்தியது. அதில், பல்வேறு பன்னாட்டு நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. அப்பகுதியில் மீதமுள்ள நிலங்களில், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விவசாயம் செய்து வருகின்றனர்.

    இந்த நிலையில் எதாரளப்பட்டி, போக்கம்பட்டி பகுதியில் உள்ள 125 ஏக்கர் தனி நபர்களின் நிலங்கள், மற்றும் வீடுகளை தனியார் நிறுவனர் சுற்றுச்சுவர் அமைப்பதற்காக விலைக்கு கேட்டு நிர்பந்தம் செய்கிறார்கள்.

    நில புரோக்கர்களை வைத்து பேசுகிறார்கள். கடந்த 80 ஆண்டுகளாக விவசாயம் செய்து வரும் நாங்கள் அந்த நிலங்களை விற்க முடியாது எனக் கூறியும் நிலங்களுக்கு அதிக விலை கொடுப்பதாக கூறி நிலங்களை விற்குமாறு வற்புறுத்துகின்றனர். எங்கள் வாழ்வாதாரங்களை பறிக்க முயலும் கம்பெனிகளின் நடவடிக்கைகள் குறித்து உடனடியாக விசாரித்து, அந்த நிறுவனத்தின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    இந்த மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர், தனி நபர்களுக்கு சொந்தமான நிலங்களை, தனியார் கம்பெனிகள் அத்துமீறி வாங்க அதிகாரம் இல்லை. இது குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் உறுதி அளித்தாக விவசாயிகள் தெரிவித்தனர்.

    ×