search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போலி நகை மோசடி"

    திருவண்ணாமலை ராதாபுரம் கூட்டுறவு வங்கியில் போலி நகை அடமானம் வைத்து மோசடியில் ஈடுபட்ட செயலாளர், காசாளர் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளனர்.
    தண்டராம்பட்டு:

    திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அருகில் உள்ள ராதாபுரத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி உள்ளது. இதில் நடந்து முடிந்த தேர்தலுக்கு முன்பு ஏ.சி. கணேசன் என்பவர் தலைவராக இருந்தார்.

    அப்போது செயலாளராக கோழாப்பாடியை சேர்ந்த முருகனும், காசாளராக அகரத்தை சேர்ந்த சுதாகரும், நகை மதிப்பீட்டாளராக தினக்கூலி அடிப்படையில் சிறுபாக்கத்தை சேர்ந்த குமாரும், விற்பனையாளராக சேர்ப்பாப்பட்டு பகுதியை சேர்ந்த சேகர் என்பவரும் பணியாற்றி வந்தனர்.

    அப்போது அவர்கள் பணி காலத்தில் போலி நகை அடமானம் வைத்து ரூ.49 லட்சம் வரை மோசடி செய்யப்பட்டுள்ளதாகவும், வாடிக்கையாளர்களின் வைப்புத்தொகையில் இருந்து ரூ.10 லட்சமும், போலியாக சிலர் பேரில் பயிர்க்கடன் ரூ.13 லட்சம் பெற்று உள்ளதாகவும் இவர்கள் மீது தொடர்ந்து பல்வேறு புகார்கள் வந்தன.

    இந்த முறைகேடுகள் சம்பந்தமாக சே.கூடலூரை சேர்ந்த கூட்டுறவு கடன் சங்கத்தை சேர்ந்த முன்னாள் தலைவர் சக்கரவர்த்தி கலெக்டர், கூட்டுறவு இணை பதிவாளர், துணை பதிவாளர் ஆகியோரிடம் புகார் செய்தார்.

    இதுகுறித்து கலெக்டர் கந்தசாமி விசாரணை நடத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதையடுத்து அதிகாரிகள் விசாரணை நடத்தி, மோசடியில் ஈடுபட்ட செயலாளர் முருகன், காசாளர் சுதாகர், நகை மதிப்பீட்டாளர் குமார் ஆகியோரை சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டனர்.

    விற்பனையாளர் சேகரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×