என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பேஷன் ஸ்டுடியோஸ்"

    • நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் தற்போதுவரை 8 படங்கள் வெளியாகியுள்ளன
    • படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் நாளை மாலை 5 மணிக்கு வெளியாகும்

    சிவகார்த்திகேயன் தயாரிப்பில் உருவாகியுள்ள புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. 

    நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் தற்போதுவரை 8 படங்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் இத்தயாரிப்பு நிறுவனத்தின் புதுப்படம் குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன. தற்போது இந்த புதிய படத்தை ஃபேஸன் ஸ்டூடியோஸ் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ளது.

    இதன் அறிவிப்பு வீடியோ வெளியாகியுள்ளது. மேலும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் நாளை மாலை 5 மணிக்கு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


    • இயக்குனர் வசந்த குமார் இயக்கத்தில் அருள்நிதி நடித்த மௌனகுரு திரைப்படம் பெரிதும் பேசப்பட்ட படமாக மாறியது.
    • கடைசியாக இயக்குனர் முத்தையா இயக்கத்தில் வெளியான கழுவேத்தி மூர்க்கன் படத்தில் அருள்நிதி நடித்திருந்தார்.

    கடந்த 2010 ஆம் ஆண்டு பாண்டிராஜ் இயக்கத்தில் வெளியான 'வம்சம்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக கால்பதித்தவர் நடிகர் அருள்நிதி. தொடர்ந்து இயக்குனர் வசந்த குமார் இயக்கத்தில் அருள்நிதி நடித்த மௌனகுரு திரைப்படம் பெரிதும் பேசப்பட்ட படமாக மாறியது.

     

    தனித்துவமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வரும் அருள்நிதியின் நடிப்பில் ஹாரர் படமான டிமான்டி காலனி, ஆறாது சினம், பிருந்தாவனம், தகராறு, இரவுக்கு ஆயிரம் கண்கள், கே- 13 உள்ளிட்ட பல படங்கள் வெளியாகியுள்ளது. கடைசியாக இயக்குனர் முத்தையா இயக்கத்தில் வெளியான கழுவேத்தி மூர்க்கன் படத்தில் அருள்நிதி நடித்திருந்தார்.

    இந்நிலையில் அருள்நிதி புதிய படம் ஒன்றில் கமிட்டாகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2021 ஆம் ஆண்டு பேஷன் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் வெளியான என்னங்க சார் உங்க சட்டம் என்ற திரைப்படத்தை இயக்கிய பிரபு ஜெயராம் இயக்கும் புதிய படத்தில் அருள்நிதி நடிக்க உள்ளாராம்.

     

    இந்த திரைப்படத்தையும் பேஷன் ஸ்டுடியோஸ் இயக்கவுள்ளது. இந்த புதிய படத்தைக் குறித்த அடுத்தடுத்த அப்டேட் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சாதிய பிரச்னைகளைக் குறித்து என்னங்க சார் உங்க சட்டம் படத்தில் பிரபு ஜெயராம் பேசியிருந்தைப்போல இதுவும் ஒரு சமூக படமாக இருக்குமோ என்ற யூகங்களும் எழத்தொடங்கியுள்ளன .

     உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    ×