search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புழுதிப்புயல்"

    ஆஸ்திரேலியாவில் தென் கிழக்கு பகுதி முழுமைக்கும் நேற்று கடுமையான புழுதிப்புயல் வீசியது. இதன் காரணமாக வானம் ஆரஞ்சு நிறமாக மாறியது. #Australia #DustStorm
    சிட்னி:

    ஆஸ்திரேலியாவில் நாட்டின் தென் கிழக்கு பகுதி முழுமைக்கும் நேற்று கடுமையான புழுதிப்புயல் வீசியது. இதன் காரணமாக வானம் ஆரஞ்சு நிறமாக (செம்மஞ்சள் நிறமாக) மாறியது.

    500 கி.மீ. பரப்புக்கு இந்தப் புழுதிப்புயல் வீசியது. சிட்னி தொடங்கி பல நகரங்கள் புழுதிப்புயலால் பாதிக்கப்பட்டன. காற்றின் தரம் மிகக்குறைவானதாக மாறியதால் பொது மக்கள் இடையே அச்சம் ஏற்பட்டது.



    நியூ சவுத் வேல்ஸ் மாகாணம் உள்பட பல பகுதிகளில் சாலைகளே கண்களுக்கு தெரியவில்லை. உலர்ந்து போன மண்ணைக் கிளப்பி கடுமையான காற்று வீசியதாக அதிகாரிகள் கூறினர்.

    கடந்த ஆகஸ்டு மாதம் முதல், அந்த நாடு கடுமையான வறட்சியின் பிடியில் சிக்கியுள்ள நிலையில், இந்தப் புழுதிப்புயல் வீசியதால் சாலைப் போக்குவரத்து பாதித்தது. விமானப்போக்குவரத்தும் பாதித்ததாக தகவல்கள் கூறுகின்றன.

    புழுதிப்புயலால் பலரும் பாதிக்கப்பட்டனர். அவர்கள் சுவாசிப்பதில் சிரமப்பட்டனர். பலருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது. உடனடியாக அதிகாரிகள், பொதுமக்களுக்கு எச்சரிக்கையுடன் கூடிய வேண்டுகோள் விடுத்தனர். யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம், குறிப்பாக குழந்தைகளை வெளியே விடாதீர்கள், சுவாச பிரச்சினை உடைய முதியவர்களையும் வெளியே அனுப்ப வேண்டாம் என அவர்கள் கூறினர்.  #Australia #DustStorm
    உ.பி., மேற்கு வங்கம், ஆந்திரா உட்பட வட மாநிலங்களில் ஏற்பட்ட புழுதிப்புயலுக்கு 80 பேர் பலியாகியதோடு, 136 பேர் படுகாயமடைந்துள்ளனர். #duststrom

    புதுடெல்லி:

    வடமாநிலங்களில் நேற்று சூறாவளிப்புயல் தாக்கியது. இதையடுத்து இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்தது. தலைநகர் டெல்லியில் நேற்று மாலை மழை மற்றும் பலத்த சூறைக்காற்றுடன் பல பகுதிகளில் புழுதிப்புயல் தாக்கியது. இதன் காரணமாக இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையத்தில் விமானங்களின் வருகை, புறப்பாடுகள் நிறுத்தி வைக்கப்பட்டன. பல விமானங்கள் மாற்றுப் பாதைகளில் திருப்பி விடப்பட்டன.

    அதேபோல், உத்தரப்பிரதேசம், மேற்கு வங்கம், ஆந்திரப்பிரதேசம், உத்தரகாண்ட் போன்ற பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய பலத்த மழையும், புழுதிப்புயலும் வீசி மக்களை நிலைகுலையச் செய்தன. இதில் பெருமளவில் உயிர்ச்சேதம் ஏற்பட்டுள்ளது.

    உத்தரப்பிரதேசத்தின் 24 மாவட்டங்கள், மேற்கு வங்கத்தின் 6, ஆந்திராவின் 3, டெல்லியின் 2, உத்தரகாண்டின் 1 மாவட்டங்களில் புழுதிப்புயல், மின்னல் தாக்கியுள்ளது.



    இந்நிலையில், உத்தரப்பிரதேசத்தில் 51, மேற்குவங்கத்தில் 14, ஆந்திரப் பிரதேசத்தில் 12, டெல்லி 2, உத்தரகாண்டில் 1 ஆகியோர் பலியாகி உள்ளதாகவும், 136 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். #DustStormUP
     
    முன்னதாக உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், தெலுங்கானா, உத்தரகாண்ட், பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் புயல் பாதிப்பு ஏற்பட்டது. இதில் 134 பேர் பலியாகினர். 400க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். ஆக்ரா மாவட்டத்தில் மட்டும் 80 பேர் பலியாகியுள்ளனர். கடந்த மே 9ல் உத்தரப்பிரதேசத்தின் பல்வேறு பகுதிகளில் புயல் தாக்கியதில் 18 பேர் பலியாகினர். 27 பேர் படுகாயமடைந்தனர். #duststrom
    வடமாநிலங்களை சூறையாடி வரும் புழுதிப்புயல் மற்றும் மழை காரணமாக, உத்தரப்பிரதேச மாநிலத்தில் மட்டும் 51 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. #DustStormUP
    லக்னோ:

    தலைநகர் டெல்லியில் நேற்று மாலை மழை மற்றும் பலத்த சூறைக்காற்றுடன் பல பகுதிகளில் புழுதிப்புயல் தாக்கியது. இதன் காரணமாக இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையத்தில் விமானங்களின் வருகை, புறப்பாடுகள் நிறுத்தி வைக்கப்பட்டன. பல விமானங்கள் மாற்றுப் பாதைகளில் திருப்பி விடப்பட்டன.

    அதேபோல், உ.பி, மேற்கு வங்கம், ஆந்திரா போன்ற பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய பலத்த மழையும், புழுதிப்புயலும் வீசி மக்களை நிலைகுலையச் செய்தன. இதில் பெருமளவில் உயிர்ச்சேதம் ஏற்பட்டுள்ளது.

    இந்நிலையில், உத்தரப்பிரதேச மாநிலத்தில் மட்டும், புழுதிப்புயல் மற்றும் மழையால்  51 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 83 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 25 மாவட்டங்களில் 121 வீடுகள் சேதமடைந்துள்ளன.  #DustStormUP
    வடமாநிலங்களில் புழுதிப்புயல் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பதால் சென்னையில் இருந்து செல்லும் 5 விமானங்கள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளன. #DustStrom #DelhiDustStrom #FlightsCancelled
    சென்னை:

    தலைநகர் டெல்லியில் நேற்று மாலை மழை மற்றும் பலத்த சூறைக்காற்றுடன் புழுதிப்புயல் தாக்கியது. மணிக்கு 100 கி.மீ. வேகத்தில் புழுதியுடன் காற்று வீசியதால் இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையத்தில் விமானங்களின் வருகை, புறப்பாடுகள் நிறுத்தி வைக்கப்பட்டன. 70 விமானங்கள் மாற்று பாதைகளில் திருப்பி விடப்பட்டன. பல்வேறு விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.



    இந்நிலையில் புழுதிப் புயல் தாக்கம் காரணமாக சென்னையில் இருந்து டெல்லி, மும்பை, ஐதராபாத் செல்லும் 5 விமானங்கள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளன. 10-க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமாக புறப்பட்டுச் செல்லும் என அறிவிக்கப்பட்டது. இதனால் பயணிகள் அவதியடைந்தனர்.

    இந்த புழுதி புயலுக்கு உ.பி.யில் 18 பேரும், டெல்லியில் 2 பேரும், மின்னல் தாக்கியதில் மேற்கு வங்கத்தில் 12 பேரும், ஆந்திராவில் 9 பேரும் என மொத்தம் 41 பேர் பலியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

    டெல்லி விமான நிலையத்தில் நேற்று இரவு 9 மணிக்கு ஓரளவு நிலைமை சரியான போதிலும், நள்ளிரவு 2 மணிக்குப் பிறகே விமானங்கள் இயங்கத் தொடங்கின. எனினும் மாற்றுப் பாதையில் திருப்பிவிடப்பட்ட விமானங்கள் வந்து சேர்ந்து, வழக்கமான பயணத்தை தொடர இன்னும் ஒரு நாள் ஆகும் என கூறப்படுகிறது. #DustStrom #DelhiDustStrom #FlightsCancelled
    ×