search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புரவலர்கள்"

    • இந்நூலகத்தில் 40 முதல் 100 பேர் வரை தினசரி மாத இதழ் மற்றும் நூல்களை படித்து வருகின்றனர்.
    • சிறிய கட்டடத்தில் நூலகம் இயங்குவதால் 45 ஆயிரம் புத்தகங்களை வைக்கவே இடம் போதுமானதாக உள்ளது.

    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம், வேதாரண்யத்தில் 1958-ம் ஆண்டு நூலகம் தொடங்கப்பட்டது.

    நூலகம் தொடங்கப்பட்ட நாளிலிருந்து சொந்த கட்டிடத்தில் இயங்கி வந்தது.

    கடந்த 2017-ம் ஆண்டு நூலகத்திற்கு சொந்தமான கட்டிடம் பழுதடைந்து இடிக்கப்பட்டது.

    அன்று முதல் வேதாரண்யம் பயணியர் மாளிகை செல்லும் சாலையில் உள்ள மாற்றுத்திறனாளிகள் தொழில் பயிற்சி கூடத்தில் நூலகம் இயங்கி வருகிறது.

    தற்போது இந்த கட்டிடமும் பழுதடைந்து மழை காலங்களில் தண்ணீர் உள்ளே வருகிறது.

    தற்போது நூலகத்தில் 45 ஆயிரம் புத்தகங்கள் உள்ளன.

    இதில் 4,100 நபர்கள் உறுப்பினராகவும், 32 புரவலர்களும் உள்ளனர்.

    நாள்தோறும், இந்நூலகத்தில் 40 முதல் 100 பேர் வரை தினசரி மாத இதழ் மற்றும் நூல்களை படித்து வருகின்றனர்.

    மேலும், தமிழக அரசு நடத்தும் பல்வேறு போட்டி தேர்வுகளுக்கான 1000-க்கும் மேற்பட்ட புத்தகங்களும் இந்த நூலகத்தில் உள்ளன.

    சிறிய கட்டடத்தில் நூலகம் இயங்குவதால் 45 ஆயிரம் புத்தகங்களை வைக்கவே இடம் போதுமானதாக உள்ளது.

    நிறைய வாசகர்கள் ஒரே நேரத்தில் படிக்க வந்தால் படிக்க முடியாமல் இடநெருக்கடியும் ஏற்படுகிறது.

    இதனால் வாசகர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.

    வேதாரண்யம் நூலகத்திற்கு வேதாரண்யம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகில் முன்பு நூலகம் இயங்கிவந்த சுமார் 3000 ஆயிரம் சதுர அடி இடம் காலியாக உள்ளது.

    எனவே, வேறு ஒரு துறைக்கு சொந்தமான கட்டிடத்தில் இயங்கும் நூலகத்திற்கு புதிதாக காலியாக உள்ள பழைய இடத்தில் நூலகத்திற்கு புதிய கட்டிடம் கட்டவேண்டும் என வாசகர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×