search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புத்தகத்"

    • நாமக்கல் வடக்கு நல்லி பாளையம் அரசு மேல்நி லைப்பள்ளியில் கடந்த 28-ந் தேதி முதல் புத்தகத் திருவிழா நடைபெற்று வருகிறது.
    • புத்தகத் திருவிழா இன்று டன் நிறைவு பெறுவ தாக இருந்தது. எனினும் புத்தக ஆர்வலர்கள், பொது மக்களின் கோரிக்கையினை ஏற்று, மேலும் 2 நாட்கள் நீட்டிக்கப்படுகிறது.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங் வெளியிட்டுள்ள செய்திக்கு றிப்பில் கூறியிருப்ப தாவது:-

    நாமக்கல் வடக்கு நல்லி பாளையம் அரசு மேல்நி லைப்பள்ளியில் கடந்த 28-ந் தேதி முதல் புத்தகத் திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த புத்தகத் திருவிழா வில் 80 அரங்குகள், சொற்பொழிவு கள், பட்டி மன்றம், குழந்தை களுக்கான பொழுதுபோக்கு அம்சங்கள், உணவுத் திரு விழா, கலைநிகழ்ச்சிகள், போட்டிகள், அறிவியல் கோளரங்கம், வண்ண மீன்கள் காட்சியகம், தமிழ்நாடு அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண் காட்சி உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் நடைபெற்று வருகிறது.

    புத்தகத் திருவிழா இன்று டன் நிறைவு பெறுவ தாக இருந்தது. எனினும் புத்தக ஆர்வலர்கள், பொது மக்களின் கோரிக்கையினை ஏற்று, மேலும் 2 நாட்கள் நீட்டிக்கப்படுகிறது.

    இதையடுத்து, நாளை (சனிக்கிழமை) மற்றும் நாளை மறுநாள் (12-ந் தேதி) இந்த புத்தகத் திரு விழா நடை பெறும். எனவே பொது மக்கள், மாணவ, மாணவிகள், எழுத்தாளர்கள், கல்வியா ளர்கள் என அனைவரும் இந்த வாய்ப்பினை பயன்ப டுத்தி தங்களுக்கு தேவையான புத்தகங்களை வாங்கிப் படித்து பயன்பெறலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • மாபெரும் புத்தகத் திருவிழா, நல்லிபாளையத்தில் உள்ள, நாமக்கல் வடக்கு அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்று வருகிறது.
    • நாமக்கல் கலெக்டர் ஸ்ரேயா சிங் தலைமை வகித்து, கண்காட்சியை தொடங்கி வைத்தார்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டத்தில், முதன் முறையாக, தமிழ்நாடு அரசு சார்பில், மாபெரும் புத்தகத் திருவிழா, நல்லிபாளையத்தில் உள்ள, நாமக்கல் வடக்கு அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்று வருகிறது. நாமக்கல் கலெக்டர் ஸ்ரேயா சிங் தலைமை வகித்து, கண்காட்சியை தொடங்கி வைத்தார். டி.ஆர்.ஓ. மணிமேகலை வரவேற்றார். எம்.பி., சின்ராஜ், எம்.எல்.ஏ., ராமலிங்கம், நகராட்சி தலைவர் கலாநிதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் போலீஸ் சூப்பிரண்டு கலைச்செல்வன் பேசியதாவது:-

    தற்போதைய சூழ்நிலையில், புத்தகம் வாசிப்பது குறைந்துள்ளது. இளைஞர்கள் வாட்ஸ் ஆப், ட்விட்டர் உள்ளிட்ட சோசியல் யாக்களில் காட்டும் ஆர்வத்தை, புத்தகம் வாசிப்பதில் காட்டுவதில்லை. புத்தகம் வாசிப்பதன் மூலம், தன்னம்பிக்கை பெறமுடியும். அந்த தன்னம்பிக்கை இருந்தால்தான், நாளைய உலகில் போராட முடியும். முன்னுக்கு வரமுடியும்.

    பொதுமக்கள் தங்களின் குழந்தைகளை அழைத்து வந்து, புத்தக அரங்கை காண்பித்தால் அவர்களுக்கு புத்தகம் வாசிப்பதில் ஈடுபாடு வரும். அதன் மூலம், பத்து பேர், 100 பேர் படிக்கின்ற பழக்கத்தை ஏற்படுத்தினால், நாளைய சமூகம் நன்றாக இருக்கும். இது குறிப்பிட்ட தனிநபர் ஆர்வம் கிடையாது. குழந்தைகள் படித்தால், நாளைக்கு இந்த சமூகத்துக்கு அவர்கள் மூலம் பயன்பாடு கிடைக்கும்.

    நாடு முன்னேறி இருக்கிறது. நமக்கு என்று கலாச்சாரம், பண்பாடு இருக்கிறது. சிலப்பதிகாரம், திருக்குறள், சங்க இலக்கியங்கள் இருப்பது நமக்கு பெருமைதான். அதனால், குழந்தைகளை அழைத்து வந்து படிக்கின்ற பழக்கத்தை ஏற்படுத்தினால், நாளைய சமூகம் நன்றாக இருக்கும். அதன் மூலம் ஏற்படுகின்ற சமூக மாற்றங்களும் நன்றாக இருக்கும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    புத்தக திருவிழாவில், 80 அரங்குகள், 20 ஆளுமைகளின் சொற்பொழிவுகள், பட்டிமன்றம், குழந்தைகளுக்கான பொழுது போக்கு அம்சங்கள், உணவுத் திருவிழா, கலைநிகழ்ச்சிகள், போட்டிகள், அறிவியல் கோளரங்கம், வண்ண மீன்கள் காட்சியகம், தமிழ்நாடு அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் அமைந்துள்ளன. வரும், 10-ந் தேதி வரை நடக்கும் இந்த புத்தக திருவிழாவில், தினமும், காலை 11 மணி முதல், மதியம் 2 மணி வரை, பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியருக்கான கட்டுரை, பாட்டு, கவிதை, படம் பார்த்து கதை சொல்லுதல், வினாடி வினா, மாறுவேடம், நாடகம் மற்றும் பேச்சு உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடக்கிறது.

    மேலும், மாலை, 3 மணி முதல், 5 மணி வரை, பள்ளி, கல்லூரி மாணவர்களின் கலை நிகழ்ச்சியும் நடக்கிறது. தொடர்ந்து, மாலை 6 மணி முதல், இரவு 9 மணி வரை20 பேச்சாளர்களின் சொற்பொழிவுகள், பட்டி–மன்றம் உள்ளிட்ட நிகழ்ச்சி–கள் நடைபெற உள்ளது.

    ×