search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பிரெக்சிட் உடன்படிக்கை"

    ஐரோப்பிய ஒன்றியத்துடன் பிரிட்டன் பிரதமர் தெரசா மே செய்துகொண்ட பிரெக்சிட் உடன்படிக்கை மூன்றாவது முறையாக அந்நாட்டு பாராளுமன்றத்தில் இன்று தோல்வி அடைந்தது. #BritishMPs #BritishMPsrejected #TheresaMaydeal #leavingEU #Brexit
    லண்டன்:

    ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து பிரிட்டன் வெளியேறும் ‘பிரெக்சிட்’ நடவடிக்கையின் காலக்கெடு வருகிற 29-ந் தேதி முடிவடைகிறது. ஆனால் பிரெக்சிட்டுக்காக ஐரோப்பிய கூட்டமைப்புடன் பிரிட்டன் பிரதமர் தெரசா மே ஏற்படுத்திய ஒப்பந்தத்தை 2 முறை அந்நாட்டு பாராளுமன்றம் பெருவாரியான ஓட்டு வித்தியாசத்தில் நிராகரித்துவிட்டது.
      
    மேலும், ஒப்பந்தம் இல்லா ‘பிரெக்சிட்’ தீர்மானமும் 2 முறை நிராகரிக்கப்பட்ட நிலையில், பிரெக்சிட் நடவடிக்கையை தாமதப்படுத்துவதற்கான தீர்மானம் சமீபத்தில் பிரிட்டன் பாராளுமன்றத்தில் ஒருமனதாக நிறைவேறியது. இதனால் பிரெக்சிட்டின் காலக்கெடுவை நீட்டிக்க வேண்டுமென தெரசா மே ஐரோப்பிய கூட்டமைப்பிடம் கோரிக்கை வைத்தார். இதனை ஐரோப்பிய கூட்டமைப்பின் தலைவர் டொனால்டு டஸ்க் ஏற்றுக் கொண்டார். 

    ‘பிரெக்சிட் ஒப்பந்தத்தை பிரிட்டன் பாராளுமன்றம் ஆதரித்தால் ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து வெளியேற மே மாதம் 22-ந் தேதி வரை காலக்கெடு வழங்கப்படுகிறது. மாறாக அந்த ஒப்பந்தம் நிராகரிக்கப்பட்டால் ஏப்ரல் 12-ந் தேதிக்குள் பிரிட்டன் வெளியேறியாக வேண்டும்’ என்று டொனால்டு டஸ்க் திட்டவட்டமாக தெரிவித்திருந்தார்.

    இந்த பரபரப்பான சூழ்நிலைக்கு மத்தியில், பிரெக்சிட் தொடர்பாக 8 மாற்று உடன்படிக்கைகளை எம்பிக்கள் முன்வைத்தனர். ஆனால் இந்த உடன்படிக்கைகளுக்கும் பாராளுமன்றத்தில் பெரும்பான்மை வாக்குகள் கிடைக்கவில்லை. அனைத்தும் நிராகரிக்கப்பட்டன.

    இந்நிலையில், ஐரோப்பிய ஒன்றியத்துடன் பிரிட்டன் பிரதமர் தெரசா மே செய்துகொண்ட பிரெக்சிட் உடன்படிக்கை தொடர்பாக மூன்றாவது முறையாக அந்நாட்டு பாராளுமன்றத்தில் இன்று நடைபெற்ற வாக்கெடுப்பும் தோல்வியில் முடிந்தது.

    இன்று பாராளுமன்றத்தில் வாக்கெடுப்புக்கு முன்வைக்கப்பட்ட உடன்படிக்கைக்கு எதிராக 344 எம்.பி.க்களும், ஆதரவாக 286 எம்.பி.க்களும் வாக்களித்தனர். 

    மூன்றாவது முறையாகவும் இந்த ஒப்பந்தம் பிரிட்டன் பாராளுமன்றத்தில் தோல்வி அடைந்துள்ள நிலையில், ஏப்ரல் 10-ம் தேதி ஐரோப்பிய ஒன்றியத்தில் இடம்பெற்றுள்ள நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கும் அவசர கூட்டத்துக்கு டொனால்ட் டஸ்க் அழைப்பு வித்துள்ளார். #BritishMPs #BritishMPsrejected #TheresaMaydeal #leavingEU #Brexit
    பிரிட்டன் பிரதமர் தெரசா மே முன்வைத்த பிரெக்சிட் உடன்படிக்கை பாராளுமன்றத்தில் நிறைவேறாமல் போன நிலையில் ஐரோப்பிய யூனியனில் தொடர்ந்து இணைந்திருக்க 6 லட்சம் மக்கள் கையொப்பமிட்டுள்ளனர். #Brexit #Bremain #UKgovernment #EuropeanUnion
    லண்டன்:

    ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து வெளியேறும் நடவடிக்கை ‘பிரெக்ஸிட்’ என அழைக்கப்படுகிறது. இதற்கான காலக்கெடு வரும் 29-ந் தேதி முடிவடைகிறது. 
     
    ஆனால் திட்டமிட்டபடி ‘பிரெக்ஸிட்’ வெற்றிகரமாக நடப்பது கேள்விக்குறியாகி உள்ளது. பிரெக்சிட்டுக்காக, ஐரோப்பிய கூட்டமைப்புடன் இங்கிலாந்து பிரதமர் தெரசா மே ஏற்படுத்திய ஒப்பந்தம்தான் இதற்கு முட்டுக்கட்டையாக உள்ளது.

    கடந்த ஜனவரி மாதம் 15-ந் தேதி இந்த ஒப்பந்தம் பாராளுமன்றத்தில் ஓட்டெடுப்புக்கு விடப்பட்டபோது பெரும்பான்மையான எம்.பி.க்கள் அதனை நிராகரித்து விட்டனர்.

    அதேபோல், ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து வெளியேறுவதற்கும் எதிர்ப்பு தெரிவிக்கும் இங்கிலாந்து எம்.பி.க்கள் புதிய ஒப்பந்தத்தை ஏற்படுத்த வலியுறுத்துகிறார்கள்.

    ஆனால் ஐரோப்பிய கூட்டமைப்போ ‘பிரெக்சிட்’ நடவடிக்கையில் புதிய ஒப்பந்தத்துக்கு வாய்ப்பு இல்லை என கைவிரித்துவிட்டது. எனவே எம்.பி.க்களை சமாதானம் செய்யும் வகையில் ஏற்கனவே உள்ள ஒப்பந்தத்தில் சில சட்டப்பூர்வ மாறுதல்களை தெரசா மே கொண்டுவந்தார்.

    அதனை தொடர்ந்து, கடந்த வாரம் பிரிட்டன் நாடாளுமன்றத்தில் திருத்தப்பட்ட ‘பிரெக்சிட்’ ஒப்பந்தம் ஓட்டெடுப்புக்கு விடப்பட்டது. எனினும் அந்த ஒப்பந்தத்தையும் எம்.பி.க்கள் நிராகரித்து விட்டனர்.

    அதேசமயம், பிரெக்சிட் நடவடிக்கையை தாமதப்படுத்தும் தீர்மானம் நாடாளுமன்றத்தில் நிறைவேறியது. எனினும் சிறப்பான ஒரு ஒப்பந்தத்துடன் ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து வெளியேறும் என நம்பிக்கை தெரிவித்துள்ள தெரசா மே, ‘பிரெக்சிட்’ ஒப்பந்தம் மீது மீண்டும் ஓட்டெடுப்பு நடத்த ஆலோசித்து வருவதாக கூறப்பட்டது.

    நாடாளுமன்றத்தில் ‘பிரெக்சிட்’ ஒப்பந்தம் மீது 3-வது முறையாக ஓட்டெடுப்பு நடத்த அனுமதி கிடையாது என சபாநாயகர் ஜான் பெர்கோவ் திட்டவட்டமாக தெரிவித்து விட்டார்.

    இந்த நிலையில், பிரிட்டன் நாட்டு சட்டத்தின்படி ஒரு விவகாரம் தொடர்பாக குறைந்தபட்சம் ஒரு லட்சம் மக்கள் கையொப்பமிட்டால் அதை பாராளுமன்றம் பரிசீலனை செய்யலாம் என்ற நிலை உள்ளது.

    இந்நிலையில், ஐரோப்பிய கூட்டமைப்பில் தொடர்ந்து இணைந்திருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி மார்கரேட் அன்னி நியூசம் ஜியார்ஜியாடோ என்பவர் பிரிட்டன் அரசு மற்றும் பாராளுமன்றத்தின் அதிகாரப்பூர்வ 'பெட்டிஷன்ஸ்’ இணையதளம் மூலமாக கையெழுத்து வேட்டை நடத்தினார்.

    'ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து விலகுவது மக்களின் முடிவு என்று பிரிட்டன் அரசு தொடர்ந்து கூறி வருகிறது. இதை தடுத்து நிறுத்த ஐரோப்பிய கூட்டமைப்பில் தொடர்ந்து இணைந்திருக்க வேண்டும் என்பதை பெருவாரியான மக்கள் ஆதரிக்கிறார்கள் என்பதை இந்த அரசுக்கு நாம் நிரூபித்தாக வேண்டும். 

    எனவே, அனைவரும் தவறாமல் இந்த கையெழுத்து இயக்கத்தில் பங்கேற்று வாக்களிக்க வேண்டும்’ என பிரிட்டன் நாட்டு அரசியலமைப்பு சட்டத்தின் 50-வது பிரிவை பயன்படுத்தி ‘பிரெக்சிட்’ வாக்கெடுப்பை தவிடுப்பொடியாக்கும் வகையில் இந்த கையெழுத்து இயக்கத்தை தொடங்கிய மார்கரேட் அன்னி நியூசம் ஜியார்ஜியாடோ குறிப்பிட்டிருந்தார். 

    இதில் ஏராளமான மக்கள் பங்கேற்று பெருவாரியாக வாக்களித்தனர். வருகையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்ததால் 'பெட்டிஷன்ஸ்’ இணையதளம் நேற்றிரவு திடீரென்று முடங்கியது.

    இன்றைய நிலவரப்படி 6 லட்சத்துக்கும் அதிகமான மக்கள்  ஐரோப்பிய கூட்டமைப்பில் தொடர்ந்து இணைந்திருக்க வேண்டும் என்று வலியுறுத்தி வாக்களித்துள்ள நிலையில் பாராளுமன்றத்தில் இதுதொடர்பாக விரைவில் விவாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.  #Brexit #Bremain #UKgovernment #EuropeanUnion
    பிரிட்டன் பிரதமர் தெரசா மே தயாரித்த பிரெக்சிட் உடன்படிக்கைக்கு ஐரோப்பிய யூனியன் நாடுகள் இன்று ஒப்புதல் அளித்தன. #Brexitdeal
    புருசெல்ஸ்:

    ஐரோப்பிய யூனியனில் இருந்து விலக பிரிட்டன் பாராளுமன்றம் எடுத்த முடிவு தொடர்பாக கடந்த 2016-ம் ஆண்டு நடைபெற்ற பொது வாக்கெடுப்பில் விலகும் தீர்மானத்தை ஆதரித்து அதிகம் பேர் வாக்களித்தனர். இதையடுத்து, ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிந்துவிட்ட பிரிட்டன் தனிநாடாகவே பார்க்கப்படுகிறது.

    ஆனால், ஐரோப்பிய யூனியனில் இணைந்துள்ள 27 நாடுகளுடனான நிதி கொடுக்கல் - வாங்கல், எதிர்கால பரிவர்த்தனை, விசா மற்றும் குடியுரிமை தொடர்பாக இருதரப்பினரும் செய்துகொள்ள வேண்டிய எதிர்கால உடன்படிக்கையை பிரிட்டன் பிரதமர் தெரசா மே தயாரித்து வந்தார்.

    இந்த செயல்திட்ட வரைவு அறிக்கையை ஆளும் கன்சர்வேட்டின் கட்சியை சேர்ந்த முதன்மை மந்திரிகளும், எதிர்க்கட்சி எம்.பி.க்களும் கடுமையாக எதிர்த்து வந்தனர். இதுதொடர்பாக தனிப்பட்ட முறையிலும் பாராளுமன்றத்திலும் சூடான விவாதங்கள் நடந்து வந்தது.

    ஐரோப்பிய யூனியனில் இருந்து விலகுவது தொடர்பான காலக்கெடுவான 29-3-2019 என்ற தேதி நெருங்கி வருவதால் தெரசா மே தயாரித்த செயல்திட்டத்தின் மீது அதிருப்தி அடைந்த சில மந்திரிகளும் சொந்தக் கட்சி எம்.பி.க்களும் பாராளுமன்றத்தில் அவருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவதற்கு திட்டமிட்டு, இதற்காக ஆதரவு திரட்டி வந்தனர். எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி எம்.பி.க்களும் தெரசா மேவை வீழ்த்த தகுந்த தருணத்தை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.

    இந்நிலையில், ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேறுவது தொடர்பாக அந்நாட்டின் பிரதமர் தெரசா மே சமர்ப்பித்த செயல்திட்ட அறிக்கைக்கு மந்திரிசபை சமீபத்தில் ஒப்புதல் அளித்தது. எனினும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து 4 மந்திரிகள் ராஜினாமா செய்தனர். 

    இந்நிலையில், பிரெக்சிட் உடன்படிக்கயுடன் தெரசா மே நேற்று மாலை ஐரோப்பிய யூனியன் தலைநகரான புருசெல்ஸ் சென்றார். 



    ஐரோப்பிய யூனியனில் இணைந்துள்ள 27 நாடுகளின் தலைவர்களும், ஐரோப்பிய கமிஷன் தலைவர் ஜீன்-கிலாட் ஜங்கர் மற்றும் ஐரோப்பிய கவுன்சில் தலைவர் டொனால்ட் டஸ்க் ஆகியோரும் இன்று தெரசா மே-வை சந்தித்தனர்.

    பின்னர், பிரிட்டன் அரசின் சார்பில் தெரசா மே முன்வைத்த உடன்படிக்கைக்கு ஐரோப்பிய யூனியனில் இணைந்துள்ள 27 நாடுகளும் ஒப்புதல் அளித்துள்ளதாக  ஐரோப்பிய கவுன்சில் தலைவர் டொனால்ட் டஸ்க் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

    இந்த பிரிவு தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள ஐரோப்பிய கமிஷன் தலைவர் ஜீன்-கிலாட் ஜங்கர், இந்தநாள் மிகவும் சோகமான நாளாகும் என்று குறிப்பிட்டுள்ளார். பிரிட்டனைப் போன்ற ஒரு உயர்ந்த நாடு ஐரோப்பிய யூனியன் அமைப்பில் இருந்து விலகிச் செல்வது மகிழ்ச்சியான தருணமாகவும், கொண்டாட்டத்துக்குரிய சம்பவமாகவும் இருக்க முடியாது என்று தெரிவித்தார்.

    இந்த உடன்படிக்கை உருவாவதற்கு ஐரோப்பிய யூனியன் தரப்பில் இருந்து பக்கதுணையாக இருந்த பிரான்ஸ் நாட்டின் முன்னாள் வெளியுறவுத்துறை மந்திரி மைக்கேல் பார்னியெர், ‘நாங்கள் எப்போதும் துணைவர்களாகவும், பங்காளிகளாகவும், நண்பர்களாகவும் இருப்போம்’ என்று உறுதி அளித்தார்.

    இந்த பிரெக்சிட் உடன்படிக்கையின் அம்சங்கள்  ஐரோப்பிய யூனியன் நாட்டு அரசுகளின் இணையதளங்களில் விரைவில் பதிவேற்றம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

    இதற்கிடையில், பிரிட்டன் நாட்டின் ஆளும்கட்சியில் இடம்பெற்றுள்ள தெரசா மேவின் எதிர்ப்பாளர்கள் பாராளுமன்றத்தில் இந்த ஒப்பந்தத்தை தோற்கடிப்பதற்கு மறைமுகமாக முயற்சித்து வருகிறார்கள் என தெரியவருகிறது. #TheresaMay #Brexitdeal #EUapproveBrexit 
    பிரிட்டன் பிரதமர் தெரசா மே தயாரித்த 585 பக்கங்களை கொண்ட பிரெக்சிட் வரைவு உடன்படிக்கையை பிரிட்டனும் ஐரோப்பிய யூனியனும் இன்று கூட்டாக வெளியிட்டுள்ளன. #EUBrexitdeal #DraftBrexitdeal
    புருசெல்ஸ்:

    ஐரோப்பிய யூனியனில் இருந்து விலக பிரிட்டன் பாராளுமன்றம் எடுத்த முடிவு தொடர்பாக கடந்த 2016-ம் ஆண்டு நடைபெற்றபொது வாக்கெடுப்பில் விலகும் தீர்மானத்தை ஆதரித்து அதிகம் பேர் வாக்களித்தனர்.

    இதையடுத்து,  ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேறுவது தொடர்பாக அந்நாட்டின் பிரதமர்  தெரசா மே சமர்ப்பித்த வரைவு உடன்படிக்கைக்கு மந்திரிசபை ஒப்புதல் அளித்துள்ளது.



    வெளியேற்றத்துக்கு பின்னர் ஐரோப்பிய யூனியனில் உள்ள நாடுகளுக்கும் பிரிட்டனுக்கும் இடையினான எதிர்கால நிதி பரிமாற்றம், பாதுகாப்பு, விசா மற்றும் குடியேற்றக் கொள்கை உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் இதில் இடம்பெற்றுள்ளன. மேலும், இனி செயல்பாட்டுக்கு வரும் பிரிட்டன் அரசின் கொள்கை முடிவுகள் தொடர்பாகவும் தனியாக ஒரு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

    இந்நிலையில், 585 பக்கங்களை கொண்ட பிரெக்சிட் உடன்படிக்கையை  ஐரோப்பிய யூனியனும் பிரிட்டன் அரசும்  இன்று கூட்டாக வெளியிட்டுள்ளன.

    லண்டன் பாராளுமன்றமும் ஐரோப்பிய யூனியன் நாடுகளை சேர்ந்த தலைவர்களும் ஒப்புதல் அளித்த பின்னர் இந்த உடன்படிக்கையில் உள்ள அம்சங்கள் அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. #EUBrexitdeal  #Brexitdeal
    ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேறுவது தொடர்பாக அந்நாட்டின் பிரதமர் சமர்ப்பித்த செயல்திட்ட உடன்படிக்கைக்கு மந்திரிசபை ஒப்புதல் அளித்துள்ளது. #TheresaMay #Brexitdeal
    லண்டன்:

    ஐரோப்பிய யூனியனில் இருந்து விலக பிரிட்டன் பாராளுமன்றம் எடுத்த முடிவு தொடர்பாக கடந்த ஆண்டு நடைபெற்ற பொது வாக்கெடுப்பில் விலகும் தீர்மானத்தை ஆதரித்து அதிகம் பேர் வாக்களித்தனர். இதையடுத்து, ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிந்துவிட்ட பிரிட்டன் தனிநாடாகவே பார்க்கப்படுகிறது.

    ஆனால், ஐரோப்பிய யூனியனில் இணைந்துள்ள 27 நாடுகளுடனான நிதி கொடுக்கல் - வாங்கல், எதிர்கால பரிவர்த்தனை, விசா மற்றும் குடியுரிமை தொடர்பாக இருதரப்பினரும் செய்துகொள்ள வேண்டிய எதிர்கால உடன்படிக்கையை பிரிட்டன் பிரதமர் தெரசா மே தயாரித்து வந்தார்.

    இந்த செயல்திட்ட வரைவு அறிக்கையை ஆளும் கன்சர்வேட்டின் கட்சியை சேர்ந்த முதன்மை மந்திரிகளும், எதிர்க்கட்சி எம்.பி.க்களும் கடுமையாக எதிர்த்து வந்தனர். இதுதொடர்பாக தனிப்பட்ட முறையிலும் பாராளுமன்றத்திலும் சூடான விவாதங்கள் நடந்து வந்தது.

    இதற்கிடையில், சுமார் 500 பக்கங்களை கொண்ட ஒரு செயல்திட்ட அறிக்கையை ஐரோப்பிய யூனியன் தயாரித்துள்ளது.  பிரிட்டனில் உள்ள ஐரோப்பிய நாடுகளின் தூதர்கள் இதுதொடர்பாக விவாதிக்க வரும் 25-ம் தேதி அவசர ஆலோசனை கூட்டம் ஒன்றுக்கு ஏற்பாடு செய்துள்ளார்கள்.



    ஐரோப்பிய யூனியனில் இருந்து விலகுவது தொடர்பான காலக்கெடுவான 29-3-2019 என்ற தேதி நெருங்கி வருவதால் தெரசா மே தயாரித்த செயல்திட்டத்தின் மீது அதிருப்தி அடைந்த சில மந்திரிகளும் சொந்தக் கட்சி எம்.பி.க்களும் பாராளுமன்றத்தில் அவருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவதற்கு திட்டமிட்டு, இதற்காக ஆதரவு திரட்டி வந்தனர். எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி எம்.பி.க்களும் தெரசா மேவை வீழ்த்த தகுந்த தருணத்தை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.

    இந்நிலையில், ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேறுவது தொடர்பாக அந்நாட்டின் பிரதமர் சமர்ப்பித்த செயல்திட்ட அறிக்கைக்கு மந்திரிசபை ஒப்புதல் அளித்துள்ளதாக பிரதமர் தெரசா மே தெரிவித்துள்ளார். சுமார் 5 மணிநேர விவாதத்துக்கு பின்னர் இந்த இறுதி முடிவு எட்டப்பட்டதாக பிரிட்டன் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

    இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் எனது அறிவுப்பூர்வமாகவும், மனப்பூர்வமாகவும் சிந்தித்து ஒட்டுமொத்த பிரிட்டன் நாட்டுக்கும் நன்மை பயக்கும் வகையில் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

    இந்த அறிக்கையில் மந்திரிகள் அனைவரும் கையொப்பமிட்ட பின்னர் ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேறும் உடன்படிக்கை என்ற பெயரில் ஐரோப்பிய யூனியனுக்கு அனுப்பி வைக்கப்படும். பின்னர் இந்த உடன்படிக்கையின் அம்சங்கள்  ஐரோப்பிய யூனியன் நாட்டு அரசுகளின் இணையதளங்களில் பதிவேற்றம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. #TheresaMay #Brexitdeal
    ×