என் மலர்
நீங்கள் தேடியது "பிரம்ம கமலம்"
- கடந்த சில வாரங்களுக்கு முன்பு தாவரத்தில் 2 மொட்டுக்கள் வந்தது.
- நள்ளிரவு 2 மணியளவில் பிரம்ம கமலம் மலரின் இதழ்கள் சிறிது சிறிதாக சுருங்கி பின்னர் உதிர்ந்தது.
சீர்காழி:
உத்தரகாண்ட் மாநிலத்தின் மாநில மலராகவும், இமயமலைப் பகுதிகளில் மட்டுமே பெரும்பாலும் காணப்படும் அதிசய மலராகவும் பிரம்ம கமலம் மலர் உள்ளது.
பிரம்மனின் நாடிக்கொடி என வர்ணிக்கப்படும் இந்த மலர், இளவேனில் காலத்தில் இரவுநேரத்தில் ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே பூக்கும் அதிசய மலராகும். இந்த பூ மலர தொடங்கிய நேரத்தில் இருந்து 2 மணி நேரத்துக்கு பிறகே முழுமையாக மலர்ந்திருக்கும். அதேபோல் அதிகாலைக்குள் உதிர்ந்துவிடும் என்றாலும், இந்த பூவின் வாசம் அந்த பகுதி முழுவதும் வீசும்.
இந்த மலரின் செடி கள்ளிச்செடி வகையை சேர்ந்தது என கூறப்படுகிறது.
உலக வெப்பநிலை மாறுபாட்டால் அழிந்துவரும் இந்த தாவரத்தை காப்பாற்ற உத்தரகாண்ட் மாநில அரசு பல முயற்சிகளை எடுத்து வருகிறது.
இந்த மலர் மலரும்போது அருகிலிருந்து நாம் நினைத்து வேண்டியது வரமாக கிடைக்கும் என்பது இந்துக்களின் நம்பிக்கை.
இத்தகைய அதிசய பிரம்ம கமலம் தாவரம் சீர்காழியில் உள்ள சபாநாயகர் முதலியார் இந்து மெட்ரிக் பள்ளியில் வளர்க்கப்பட்டு வருகிறது.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு தாவரத்தில் 2 மொட்டுக்கள் வந்தது. இந்தநிலையில் நேற்று இரவு இந்த தாவரத்தில் 2 மலர்கள் பூத்தது. இரவு 11 மணிக்கு மேல் அந்த மொட்டு மலர்ந்து வெண்ணிலவை போல அழகாக காட்சி அளித்தது.
இதுகுறித்து தகவலறிந்த அப்பள்ளி மாணவர்கள், பெற்றோர்கள், பொது மக்கள் நள்ளிரவிலும் வந்து பிரம்ம கமலம் மலரை பார்த்து வணங்கி சென்றனர்.
மேலும் அவர்கள் தங்கள் செல்போனில் பிரம்ம கமலம் மலருடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.
இதையடுத்து நள்ளிரவு 2 மணியளவில் பிரம்ம கமலம் மலரின் இதழ்கள் சிறிது சிறிதாக சுருங்கி பின்னர் உதிர்ந்தது.
- பூஜை செய்து வழிபாடு
- அப்பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர்
ஜோலார்பேட்டை:
பிரம்மாவிற்கு உகந்த பூவான பிரம்ம கமலத்தை பார்ப்பது என்பது மிகவும் அரிதானது. அத்தகைய அதிசய பூவின் நடுவில் பார்த்தால், பிரம்மா படுத்திருப்பது போன்றும், அதன் மேல் நாகம் படம் எடுத்திருப்பது போன்றும் காணப்படும். இந்த பிரம்ம கமலம் பூ ஒரு வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே பூக்கும் அதிசய பூவாகும்.
இந்த பூ இலையில் இருந்தே பூ பூக்கிறது. இரவு நேரங்களில் மட்டுமே பிரம்ம கமலம் பூ மலரத் தொடங்கும் அதனை பார்ப்போருக்கு அதிர்ஷ்டம் கிட்டும் எனவும் பெரியோர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
இந்த பிரம்ம கமலம் பூ ஹிமாலயாவிலேயே அதிகம் காணமுடியும். இந்த நிலையில் திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை சந்தைக்கோடியூர் பகுதியில் வசித்து வரும் ஜெயக்குமார் என்பவர் தனது வீட்டில் பிரம்ம பூ செடி வளர்த்து வருகிறார்.
நேற்று இரவு ஒரு பிரம்ம கமலம் பூ பூத்துள்ளது. இதன் காரணமாக ஜெயகுமார் குடும்பத்தினர் பிரம்ம கமல பூச்செடிக்கு பூஜை செய்து வழிபட்டனர்.
மேலும் பிரம்ம கமலம் பூவை அப்பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- பூஜை செய்து வழிபாடு
- மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர்
ஆலங்காயம்:
பிரம்ம கமலம் பூ வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே பூக்கும் அதிசய பூவாகும். இந்த பூ இலையில் இருந்தே பூக்கிறது. இரவு நேரங்களில் மட்டுமே பிரம்ம கமலம் பூ மலரத் தொடங்கும்.
பிரம்ம கமலம் பூ ஹிமாலயாவிலேயே அதிகம் காணமுடியும். இந்த நிலையில் திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த ஆலங்காயம் பகுதியில் வசித்து வரும் சந்தியா என்பவர் தனது வீட்டில் பிரம்ம பூ செடி வளர்த்து வருகிறார்.
இதில் ஒரு பிரம்ம கமலம் பூ பூத்துள்ளது. இதன் காரணமாக சந்தியா பிரம்ம கமல பூச்செடிக்கு பூஜை செய்து வழிபட்டார். மேலும் பிரம்ம கமலம் பூவை அப்பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர்.
- பிரம்ம கமலம் கள்ளி செடி வகையை சேர்ந்த அரிய வகை செடி.
- ஆண்டுக்கு ஒரு முறை ஜூன், ஜூலை மாதங்களில் தான் பூக்கும் அரிய வகை செடி.
திருவட்டார்:
ஆற்றூர் அருகே மாநில விவசாய பிரிவு துணைத்தலைவர் ஆற்றூர் குமார் வீட்டில் கள்ளி செடி வகையை சேர்ந்த பிரம்ம கமலம் என்னும் அரிய வகை செடி கடந்த ஒரு ஆண்டுகளுக்கு முன் பூதப்பாண்டி மலை அடிவாரத்தில் இருந்து கொண்டுவந்து நட்டு வைத்தார். இது இமயமலை அடிவாரத்தில்தான் அதிகம் கிடைக்கும். இந்த செடியின் இலையை தான் நடவேண்டும் மற்ற செடிகள் வேர், கம்பு போன்றவைகளை நடவேண்டும். இதன் இலையின் விளிம்பில் இருந்துதான் பூ வரும்.
இது ஆண்டுக்கு ஒரு முறை ஜூன், ஜூலை மாதங்களில் தான் பூக்கும் அரியவகை செடி. இரவு 8 மணிக்கு மேல்தான் பூ விரிய தொடங்கும். இரவு 12 மணிக்கு முழுதாக பூ விரியும் அதிகாலை 5 மணிக்கு முழுவதும் உதிர்ந்து விடும். நல்ல வாசனை உடையது. இதனால் இது இரவின் ராணி என்று அழைக்கப்படுகிறது. பிரம்மனுக்கு படைப்பதற்கு உகந்த பூ இதுவென்று கூறப்படுகிறது.






