search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பிடிபி கட்சி"

    ஜம்மு-காஷ்மீர் மக்கள் ஜனநாயக கட்சியை பிளவுப்படுத்த முயற்சிப்பவர்கள் யாராக இருந்தாலும் ஆபத்தான எதிர்வினைகளை சந்திக்க நேரிடும் என மெகபூபா முப்தி எச்சரித்துள்ளார். #Mehbooba #PDP
    ஸ்ரீநகர்:

    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் மெகபூபா முப்தி தலைமையில் நடைபெற்றுவந்த மக்கள் ஜனநாயக கட்சி - பா.ஜ.க. கூட்டணி ஆட்சி கவிழ்க்கப்பட்டு அங்கு தற்போது கவர்னர் ஆட்சி நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், ஸ்ரீநகரில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முன்னாள் முதல் மந்திரி மெகபூபா முப்தி எங்கள் கட்சியை பிளவுப்படுத்த முயற்சிப்பவர்கள் யாராக இருந்தாலும் ஆபத்தான எதிர்வினைகளை சந்திக்க நேரிடும் என குறிப்பிட்டுள்ளார்.

    1987-ம் ஆண்டு சட்டசபை தேர்தலுக்கு பின்னர் எங்கள் கட்சியை பிளவுப்படுத்த நினைத்த முயற்சியால்தான் சையத் சலாவுதீன் (தற்போது பாகிஸ்தானில் வாழும் ஹிஜ்புல் முஜாஹிதீன் பயங்கரவாத இயக்கத்தின் தலைவன்) முஹம்மது யாசின் மாலிக் போன்ற பிரிவினைவாதிகள் உருவானார்கள்.

    இதேபோல், இப்போதும் எங்கள் கட்சியை உடைக்க டெல்லியில் முயற்சிகள் நடைபெற்று வருகிறது.

    எல்லா குடும்பங்களில் உள்ளதுபோல் எங்கள் கட்சிக்குள்ளும் சில கருத்து வேறுபாடுகள் உண்டு. அது பேசி தீர்க்கப்படும். டெல்லியின் தலையீடு இல்லாமல் எந்த பிளவும் இங்கு ஏற்பட முடியாது. அப்படி பிளவுப்படுத்துவதன் மூலம் மேலும் ஒரு பயங்கரவாதியை உருவாக்க முடியாது.

    காஷ்மீர் வாக்காளர்களின் ஓட்டுகளை கவர்வதற்காக டெல்லியால் உருவாக்கப்படும் ஒரு கட்சியின் அழிவுக்காக இங்குள்ள மக்கள் ஒருபோதும் கவலைப்பட மாட்டார்கள் எனவும் அவர் தெரிவித்தார்.

    என் கட்சி பலமாக  உள்ளது. எங்களுக்குள் இருக்கும் வேற்றுமைகளை நாங்களே தீர்த்து கொள்வோம். 1987-ம் ஆண்டு ஐக்கிய முஸ்லிம் முன்னணியை ஒடுக்க நினைத்ததுபோல் எந்த முயற்சி நடந்தாலும் அதன் எதிர்வினைகள் மிகவும் ஆபத்தானதாக அமையும் எனவும் மெகபூபா எச்சரித்தார். #Mehbooba #PDP  
    ×