search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பிடிபட்டது"

    • கோழிக்கூண்டில் புகுந்த நான்கரை அடி நீளம் கொண்ட நாகப்பாம்பையும் பாண்டியன் லாவகமாக பிடித்தார்.
    • அறையில் இருந்த பாம்பை தீயணைப்பு வீரர்கள் பிடித்து வனப்பகுதியில் விட்டனர்.

    சீர்காழி:

    சீர்காழி அருகே மங்கைமடம் பகுதியில் ஸ்வீட் கடை குடோனில் இனிப்புகள் தயாரிக்கும் பணி நடைபெற்றுக் கொண்டிருந்தது.

    அப்போது அங்கு பொருட்கள் வைத்திருக்கும் பகுதியில் பாம்பு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த கடை உரிமையாளர் உடனே சீர்காழியை சேர்ந்த பாம்பு பிடிக்கும் நபரான பாம்பு பாண்டியனுக்கு தகவல் அளித்தார்.

    அதன்படி அங்கு சென்ற பாம்பு பாண்டியன் ஸ்வீட் குடோனில் புகுந்திருந்த நான்கடி நீளம் கொண்ட நாகப் பாம்பை லாவகமாக பிடித்து வனப்பகுதியில் கொண்டு விட்டார்.

    இதேபோல் உச்சிமேட்டில் உள்ள வீட்டில் கோழிக்கூண்டில் புகுந்த நான்கரை அடி நீளம் கொண்ட நாகப்பாம்பையும் பாண்டியன் லாவகமாக பிடித்தார்.

    அப்போது கோழியை விழுங்கி இருப்பது அறிந்த பாண்டியன் பாம்பை பிடித்த போது அது விழுங்கிய கோழியை கக்கி வெளியேற்றியது.

    அதன் பின்னர் அந்த பாம்பைடப்பாவில் அடைத்து ஆள் நடமாட்டம் இல்லாத வனப்பகுதியில் கொண்டு விட்டார்.

    இதேப்போல் சீர்காழி தலைமை தபால் நிலையத்தில் பதிவேடுகள் அறையில் இருந்த பாம்பை தீயணைப்பு வீரர்கள் பிடித்து வன பகுதியில் கொண்டு விட்டனர்.

    • பாம்பனில் வாளை மீன்கள் அதிக அளவில் பிடிபட்டது.
    • உள்ளூர் பகுதி மக்களும் ஆர்வமுடன் வாளை மீன்களை வாங்கி சென்றனர்.

    ராமேசுவரம்

    ராமேசுவரம், பாம்பன் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மீன்பிடி தொழிலை நம்பி உள்ளனர். இலங்கை கடற்படை நடவடிக்கை காரணமாக ராமேசுவரம் பகுதி மீனவர்கள் முழுமையாக மீன்பிடி தொழிலில் ஈடுபட முடியாத சூழல் உள்ளது.

    இதற்கிடையில் பாம்பனில் 80-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 4 ஆயிரம் மீனவர்கள் நேற்று முன்தினம் கடலுக்கு சென்றனர். இவர்கள் மன்னார் வளைகுடா கடலில் மீன்பிடித்து விட்டு பாம்பன் திரும்பினார்கள்.

    இதில் பெரும்பாலான மீனவர்களுக்கு நல்ல மீன்பாடு கிடைத்தது. மீனவர்களின் வலைகளில் வௌ மீன், பாறை மீன், மா உழா உள்ளிட்ட பல்வேறு மீன்கள் சிக்கின. பல மீனவர்களின் வலைகளில் வாளை மீன்கள் அதிகமாக சிக்கி இருந்தன.

    இதனால் வாளை மீன் சீசன் தொடங்கி உள்ள தாகவும், இனி வரும் நாட்க ளில் வாளை மீன்கள் அதிக மாக கிடைக்கும். சீசன் தொடங்கி உள்ளதால் வருமானம் அதிகரிக்கும் என்று மீனவர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

    வாளை மீன் கிலோ ரூ.120 முதல் ரூ.150 வரை விறபனையாகின. அவை களை வியாபாரிகள் வாங்கி கேரள மீன் மார்க்கெட்டு களுக்கு அனுப்பி வைத்தனர். மேலும் உள்ளூர் பகுதி மக்களும் ஆர்வமுடன் வாளை மீன்களை வாங்கி சென்றனர்.

    ×