search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பார் நாகராஜ்"

    பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகும்படி பார் நாகராஜன் மற்றும் திமுக பிரமுகர் மகன் ஆகியோருக்கு சிபிசிஐடி சம்மன் அனுப்பி உள்ளது. #PollachiAbuseCase #BarNagaraj
    பொள்ளாச்சி:

    பொள்ளாச்சியில் சமூக வலைத்தளம் மூலம் கல்லூரி மாணவிகள் மற்றும் இளம்பெண்களை தங்கள் வலையில் வீழ்த்திய ஒரு கும்பல் ஆபாச படம் எடுத்து மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த விவகாரம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இளம்பெண் ஒருவர் அளித்த புகாரைத் தொடர்ந்து, இந்த கொடூர சம்பவம் வெளியுலகிற்கு தெரியவந்தது.

    இதுகுறித்து திருநாவுக்கரசு, சதீஷ், சபரிராஜன், வசந்தகுமார் ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட செல்போன்களில் இளம்பெண்களை பாலியல் ரீதியாக சித்ரவதை செய்த ஏராளமான வீடியோக்கள் இருப்பது கண்டறியப்பட்டது. சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    மணிவண்ணன்

    இதற்கிடையே பாதிக்கப்பட்ட பெண்ணின் அண்ணனை தாக்கிய வழக்கில் தேடப்பட்டு வந்த மணி என்ற மணிவண்ணன் நேற்று கோர்ட்டில் சரண் அடைந்தார். அவரை ஏப்ரல் 8ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்கும்படி நீதிபதி உத்தரவிட்டார்.

    இந்நிலையில், பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கை விசாரித்து வரும் சிபிசிஐடி போலீசார், இன்று திமுக பிரமுகர் தென்றல் செல்வராஜின் மகன் மணிமாறனுக்கு சம்மன் அனுப்பி உள்ளனர். வரும் 28-ம் தேதி விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி அந்த சம்மனில் கூறப்பட்டுள்ளது.

    இதேபோல், பாதிக்கப்பட்ட பெண்ணின் அண்ணனை தாக்கிய வழக்கில், 28-ம் தேதி விசாரணைக்கு ஆஜராகும்படி பார் நாகராஜுக்கும் சிபிசிஐடி சம்மன் அனுப்பி உள்ளது.

    புகார் கொடுத்ததற்காக பாதிக்கப்பட்ட பெண்ணின் அண்ணனை தாக்கியது தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட  செந்தில், பாபு, வசந்தகுமார், பார் நாகராஜ் ஆகியோர் தற்போது ஜாமீனில் வெளியில் இருப்பது குறிப்பிடத்தக்கது. #PollachiAbuseCase #BarNagaraj

    பொள்ளாச்சியில் பாலியல் புகார் கொடுத்த மாணவியின் அண்ணனை தாக்கிய நாகராஜ் மதுபாரை பொதுமக்கள் அடித்து நொறுக்கினர். #PollachiAbuseCase
    பொள்ளாச்சி:

    பொள்ளாச்சியில் மாணவிகள்- இளம்பெண்களை ஆபாச படம் எடுத்த வழக்கில் திருநாவுக்கரசு, சபரி ராஜன், சதிஷ், வசந்தகுமார் ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

    கல்லூரி மாணவி ஒருவர், தன்னிடம் தகாத முறையில் நடக்க முயன்றதாக போலீசில் கொடுத்த புகாரின் பேரில் தான் இந்த 4 பேரும் கைது செய்யப்பட்டனர்.

    புகார் கொடுத்த கல்லூரி மாணவியின் அண்ணனை மிரட்டிய வழக்கில் பொள்ளாச்சியை சேர்ந்த அ.தி.மு.க. பிரமுகர் பார் நாகராஜ் என்பவர் கைது செய்யப்பட்டார். பின்னர் உடனே ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். இந்த நிலையில் நாகராஜை அ.தி.மு.க.வில் இருந்து நீக்கி அந்த கட்சி தலைமை நடவடிக்கை எடுத்துள்ளது.

    நாகராஜூக்கு சொந்தமான மது பார் பொள்ளாச்சி - வால்பாறை சாலையில் சூளேஸ்வரன் பட்டி ஓம் பிரகாஷ் பஸ் நிறுத்தம் பகுதியில் அமைந்துள்ளது.

    இன்று மதியம் அங்கு சென்ற 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மதுபாரை சூறையாடினார்கள். அங்கிருந்த பொருட்களை அடித்து நொறுக்கினார்கள்.

    இதனால் மது குடிக்க வந்தவர்கள் அலறியடித்து கொண்டு ஓட்டம் பிடித்தனர். இந்த சம்பவத்தால் அங்கு பதட்டம் நிலவியது. இது குறித்து பொதுமக்கள் கூறும் போது, மாணவிகள்- இளம்பெண்களை ஆபாச படம் எடுத்த விவகாரத்தில் பார் நாகராஜூக்கும் தொடர்பு உள்ளது.

    அவரையும் கைது செய்து தண்டனை வழங்க வேண்டும் என பொதுமக்கள் ஆவேசமாக கூறினார்கள். அவர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். #PollachiAbuseCase
    ×