search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாபர்"

    • குமரி மாவட்டத்தில் 800 போலீசார் பாதுகாப்பு
    • ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரை உள்ள கடற்கரை கிராமங்களிலும் கடலோர காவல் படை போலீசார் கண்காணிப்பு பணி தீவிரம்

    நாகர்கோவில்:

    பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி தமிழகம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

    குமரி மாவட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.பாதுகாப்பு பணியில் 800 போலீசார் ஈடுபட்டுள்ளனர்.ஆரல்வாய்மொழி, களியக்காவிளை, அஞ்சு கிராமம் சோதனை சாவடிகளில் கூடுதல் போலீசார் நியமிக்கப்பட்டு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

    வெளியூர்களில் இருந்து வரும் வாகனங்கள் அனைத்தும் முழுமையாக சோதனை செய்யப்பட்டு வருகிறது. இரவு நேரங்களிலும் இரண்டு ஷிப்டுகளாக பிரிக்கப்பட்டு போலீசார் கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வருகிறார்கள்.

    கன்னியாகுமரி, நாகர்கோவில், குளச்சல், தக்கலை சப்வி-டிவிசன்க ளுக்கு உட்பட்ட பகுதிகளில் தீவிர வாகன சோதனையும் நடத்தப்பட்டு வருகிறது. லாட்ஜிகளிலும் போலீசார் சோதனை மேற்கொண்டு வருகிறார்கள். சந்தேகப்படும் படியாக நபர்கள் யாராவது தங்கி உள்ளார்களா என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டது. முக்கிய சந்திப்புகளிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கோவில்களிலும் போலீசார் கண்காணிப்பு பணியை மேற்கொண்டனர்.

    ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரை உள்ள கடற்கரை கிராமங்களிலும் கடலோர காவல் படை போலீசார் கண்காணிப்பு பணியை மேற்கொண்டனர்.நாகர்கோவில் ரெயில் நிலையத்தில் இன்று காலை போலீசார் சோதனை மேற்கொண்டனர். வெளியூர்களில் இருந்து வரும் பயணிகளின் உடமைகள் சோதனை செய்யப்பட்டது.

    நாகர்கோவிலில் இருந்து வெளியூர்களுக்கு அனுப்பப்படும் பார்சல்களையும் போலீசார் சோதனை செய்தனர். பிளாட்பாரங்களில் போலீசார் ரோந்து சுற்றி வந்தனர். கன்னியாகுமரி, நாங்குநேரி, இரணியல், வள்ளியூர், குழித்துறை ரயில் நிலையங்களிலும் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. அங்கும் போலீசார் கண்காணிப்பு பணியை மேற்கொண்டனர்.

    ×