search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பஸ் சிறைப்பிடிப்பு"

    • அரசு பஸ் சிறைப்பிடிப்பு- பரபரப்பு
    • ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதித்தது

    ஜோலார்பேட்டை:

    திருப்பத்தூர் மாவட்டம், கந்திலி அடுத்த வெங்க ளாபுரம் ஊராட்சியில் சுமார் 300-க்கும் அதிகமான குடும்பங்கள் வசிக்கின்றனர்.

    கடந்த சில மாதங்களாக இப்பகுதியில் சீரான குடிநீர் வழங்கவில்லை. திருவிழாக்கள் மற்றும் பண்டிகை நாட்களில் குடிநீர் வழங்காததால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர். இதுகுறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

    இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் வெங்களாபுரம் அருகே திருப்பத்தூர்- திருவண்ணா மலை சாலையில் காலி குடங்களுடன் மறியலில் ஈடுபட்டனர். மேலும் அந்த வழியாக வந்த அரசு பஸ்சையும் சிறை பிடித்தனர்.

    இது குறித்து தகவல் அறிந்த திருப்பத்தூர் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது அதிகாரிகளுக்கும், பொதும க்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

    இதனைத் தொடர்ந்து போலீசார் உயர் அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.

    இதனைத் தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதித்தது.

    • வ.மேட்டூர் கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
    • பஸ் வசதி வேண்டுமெனக் கூறி சாலை மறியல் போராட்டம் செய்தனர்.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த சிறுப்பாக்கம் அருகே உள்ள வ.மேட்டூர் கிராமம் உள்ளது. இங்கு 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு பஸ் வசதி இதுவரை செய்து தரவில்லை. இதனால் தங்கள் கிராமத்தில் இருந்து பள்ளி மற்றும் கல்லூரி செல்லும் மாணவர்கள், அத்தியாவசிய தேவைக்காக வெளியூர் செல்லும் சிறு, குறு விவசாயிகள், வணிகர்கள் பஸ்சிற்காக 1 கிலோமீட்டர் நடந்து சென்று பனையாந்தூர் அல்லது வள்ளிமதுரம் கிராமத்திற்கு சென்று பஸ் ஏற வேண்டிய சூழ்நிலை உள்ளது.

    இதனால் தங்கள் கிராமத்திற்கு பஸ் வசதி வேண்டுமெனக் கூறி இன்று காலை திட்டக்குடியில் இருந்து நைனார்பாளையம் வரை செல்லும் அரசு பஸ்சை ஊர் பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் சிறைப்பிடித்து திடீரென சாலை மறியல் போராட்டம் செய்தனர். தொடர்ந்து சாலை மறியல் நடந்த இடத்திற்கு அரசு அதிகாரிகள் யாரும் வரவில்லை. நீண்ட நேரம் ஆகியும் பள்ளி மற்றும் கல்லூரி மற்றும் வெளியூருக்கு செல்வதற்காக பஸ்சில் காத்திருந்த பயணிகளின் நலன் கருதி தாங்களாகவே போராட்டத்தை கைவிட்டு பஸ்சை அனுப்பி வைத்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மாவட்ட நிர்வாகம் பஸ் வசதி செய்து தரவில்லை என்றால் மீண்டும் மிகப்பெரிய அளவில் போராட்டத்தில் ஈடுபட போவதாக பொதுமக்கள் எச்சரித்தனர்.

    ×