search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பழமையான கட்டிடம்"

    • கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்தது.
    • கட்டிடம் தானாக இடிந்து விழுந்தது.

    ராயபுரம்:

    சென்னை ராயபுரம் ஆஞ்சநேயா நகர், 6-வது தெருவை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 24). இவர் தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு சொந்தமான வீடு உள்ளது. இது 50 ஆண்டுகாலம் பழமையான கட்டிடம் ஆகும். இந்த வீடு மிகவும் மோசமான நிலையில் இருந்ததால், இந்த கட்டிடத்தை வருகிற டிசம்பர் மாதம் இடித்துவிட்டு புதிய கட்டிடம் கட்டுவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.

    இந்த நிலையில் சென்னையில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்தது. இதனால் அந்த கட்டிடம் முழுவதும் மழைநீரில் ஊறியது. இதனால் நேற்று அந்த கட்டிடம் தானாக இடிந்து விழுந்தது. அப்போது கட்டிடத்தின் அருகில் விளையாடிக் கொண்டிருந்த 15 வயது சிறுமிக்கு காலில் லேசானம் காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவருக்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

    கட்டிடம் இடிந்து விழுந்தது பற்றி இதுபற்றி ரமேஷ், ராயபுரம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் கட்டிடம் முழுவதையும் இடித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ராயபுரம் எம்.எல்.ஏ. ஐட்ரீம் மூர்த்தி நேரில் சென்று சபவ இடத்தை பார்வையிட்டார்.

    • மழையால் கட்டிடத்தின் ஒரு பகுதி சரிந்து விழுந்துள்ளது.
    • கட்டிடம் இடிந்து விழுந்ததால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    சென்னை:

    சென்னையில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்தது. இரவு மற்றும் பகலிலும் மழை பெய்து வந்த நிலையில் இன்று மழை நின்று சூரிய வெளிச் சம் ஏற்பட்டது.

    இந்த நிலையில் திரு வல்லிக்கேணியில் பழமை யான கட்டிடம் ஒன்று இன்று பகலில் இடிந்து விழுந்தது. பாரதி சாலையில் உள்ள 50 ஆண்டு பழமை யான கட்டிடம் திடீரென இடிந்து விழுந்ததில் உயிர் சேதம் எதுவும் ஏற்பட வில்லை. கட்டிடம் இடிந்து விழுந்த தில் அங்கு நின்ற கார், ஆட்டோ போன்ற வாகனங் கள் அப்பளம் போல் நொறுங்கின. அந்த பகுதி யில் அப்போது ஆட்கள் நடமாட்டம் இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப் பட்டது.

    தொடர்ந்து பெய்த மழை யால் கட்டிடத்தின் ஒரு பகுதி சரிந்து விழுந்துள்ளது. தகவல் அறிந்து ஜாம்பஜார் போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். இடிந்து விழுந்த கட்டிட இடிபாடுகளை அகற்றி னார்கள்.

    போலீஸ் விசாரணையில் அந்த கட்டிடம் கோபால் என்பவருக்கு சொந்தமானது என தெரிய வந்தது. பழமை யான கட்டிடம் இடிந்து விழுந்ததால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    • சென்னை ஓட்டேரி பெரம்பூர் பேரக்ஸ் ரோட்டில் இன்று காலை பழமையான கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்தது.
    • பெரம்பூர் பேரக்ஸ் ரோட்டில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    பெரம்பூர்:

    சென்னை ஓட்டேரி பெரம்பூர் பேரக்ஸ் ரோட்டில் இன்று காலை பழமையான கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்தது. அந்த கட்டிடத்தில் யாரும் இல்லாத நிலையில் இன்று காலையில் பெய்த மழையால் கட்டிடம் இடிந்து சரிந்தது. இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இருப்பினும் பெரம்பூர் பேரக்ஸ் ரோட்டில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கட்டிடத்தின் அருகில் யாரும் செல்லாத படி பார்த்துக்கொண்டனர். பின்னர் பாதியில் நின்ற கட்டிடத்தை முழுமையாக இடிக்கும் பணியில் ஈடுபட்டனர்.

    இந்த கட்டிடத்தின் உரிமையாளரிடம் கடந்த 3 மாதத்துக்கு முன்பே மாநகராட்சி அதிகாரிகள் நோட்டீஸ் கொடுத்துள்ளனர். அதில் கட்டிடம் இடிந்து விழும் நிலையில் இருப்பதால் உடனடியாக இடித்து விடுமாறு குறிப்பிட்டிருந்ததாக தெரிகிறது.

    • மதுரை மாநகர பகுதியில் பழமையான 571 கட்டிடங்களை இடிக்க மேயர் உத்தரவிட்டுள்ளார்.
    • உயிரிழப்பு மற்றும் பொருட்சேதம் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.

    மதுரை

    மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    மதுரை மாநகராட்சியின் 100 வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் பல நூற்றாண்டுகள் கடந்த பழமை வாய்ந்த இடியும் தருவாயில் உள்ள கட்டிடங்கள் அகற்றப்படாமல் உள்ளன. இந்த கட்டிடங்கள் சேதமடைந்து, பழமையானதாக உள்ளதால் மழைக்காலங்களில் கட்டிடங்களின் உறுதித்தன்மை இழப்பதால் அருகில் இருக்கும் கடைகள், நிறுவனங்கள் மற்றும் பொதுமக்கள் மீது எதிர்பாராதவிதமாக இடிந்து விழுந்து விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்பு மற்றும் பொருட்சேதம் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.

    இதனை தவிர்க்கும் வகையில் மதுரை மாநகராட்சி 100 வார்டு பகுதிகளில் உள்ள பழமை வாய்ந்த வீடுகள், வணிக கட்டிடங்கள் உள்ளிட்டவைகணக்கெடுக்கப்பட்டுள்ளன. அதன்படி மண்டலம் 1-க்கு உட்பட்ட 99 கட்டிடங்களுக்கும், மண்டலம் 2-க்கு உட்பட்ட 148 கட்டிடங்களுக்கும், மண்டலம் 3-க்கு உட்பட்ட 104 கட்டிடங்களுக்கும், மண்டலம் 4-க்கு உட்பட்ட 220 கட்டிடங்களுக்கும் என மொத்தம் 571 கட்டிடங்களின் உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை அறிவிப்பு அனுப்பப்பட்டுள்ளது. அவ்வாறு பழமை வாய்ந்த கட்டிடத்தை அப்புறப்படுத்த தவறும்பட்சத்தில் அந்த கட்டிடத்தை மாநகராட்சியால் அப்புறப்படுத்தி அதற்குரிய கட்டணத்தை அபராதத்துடன் உரிமையாளர்களிடம் வசூல் செய்யப்படும்.

    எனவே மதுரை மாநகராட்சி பகுதிகளில் உள்ள பழமை வாய்ந்த வீடுகள் மற்றும் வணிக கட்டிடங்களின் உரிமையாளர்கள் மாநகராட்சிக்கு முழு ஒத்துழைப்பு தர வேண்டும். மாநகராட்சியின் சட்ட நடவடிக்கைகளை தவிர்க்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×