search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பயிற்சிமுகாம்"

    • சுகாதார மேலாண்மை உறுப்பினர்களுக்கான பயிற்சி முகாம் ஒன்றிய குழு தலைவர் தேன்மொழி தலைமையில் நடைபெற்றது.
    • கிராம ஊராட்சிகளில் விநியோகம் செய்யப்படும் குடிநீரின் தரம், பாதுகாப்பு, மழைநீர் சேகரிப்பு, தண்ணீரில் கலந்துள்ள வேதிப்பொருட்களை அறிந்து கொள்வது எப்படி என பயிற்சி அளிக்கப்பட்டது.

    பல்லடம்:

    பல்லடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கிராம குடிநீர் மற்றும் சுகாதார மேலாண்மை உறுப்பினர்களுக்கான பயிற்சி முகாம் ஒன்றிய குழு தலைவர் தேன்மொழி தலைமையில் நடைபெற்றது.

    ஒன்றியக் குழு துணைத் தலைவர் பாலசுப்ரமணியம் முன்னிலை வகித்தார்.இதில் அஸ்வத் தொண்டு நிறுவன மேலாண்மை இயக்குனர் செல்வராஜ், குடிநீர் வடிகால் வாரிய தொழில்நுட்ப உதவியாளர் ரம்யா, ஆகியோர் கிராம ஊராட்சிகளில் விநியோகம் செய்யப்படும் குடிநீரின் தரம், பாதுகாப்பு, மழைநீர் சேகரிப்பு, தண்ணீரில் கலந்துள்ள வேதிப்பொருட்களை அறிந்து கொள்வது எப்படி? என்பது குறித்து கிராம குடிநீர் மற்றும் சுகாதார மேலாண்மை உறுப்பினர்களுக்கு பயிற்சி அளித்தனர்.

    • மதுரையில் கோடைகால விளையாட்டு பயிற்சி முகாம் நடந்தது.
    • விளையாட்டு விடுதி மேலாளர் கண்ணன் நன்றி கூறினார்.

    மதுரை

    தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மதுரை மாவட்ட பிரிவின் சார்பில் மாவட்ட அளவிலான கோடை கால பயிற்சி முகாம் ரேஸ்கோர்ஸ் எம்.ஜி.ஆர். விளையாட்டு அரங்கில் 15 நாட்கள் நடந்தது. இதில் தடகளம், கூடைப்பந்து, கால்பந்து.

    கையுந்துபந்து, வளைகோல்பந்து, கைப்பந்து ஆகிய விளையாட்டுகளில் இலவசமாக நடத்தப்பட்டது. பயிற்சி முகாமில் கலந்து கொண்ட மாணவ-மாணவிகளுக்கு காலை முட்டையும், மாலையில் பிஸ்கெட், கண்டல் வழங்கப்பட்டது. பயிற்சி முகாமின் நிறைவு விழா நடந்தது.

    மாவட்ட விளையாட்டு அலுவலர் ராஜா, வரவேற்றார். 6-வது பட்டாலியன் தமிழ்நாடு சிறப்பு காவல்படை காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் முன்னிலை வகித்தார். முன்னாள் மண்டல முதுநிலை மேலாளர் முருகன், மதுரை மாவட்ட நீச்சல் கழக செயலாளர் கண்ணன், மண்டல இந்திய வங்கி முதன்மை மேலாளர் அண்ணாமலை, இந்தியன் வங்கியின் மாவட்ட கோர்ட்டு கிளை மேலாளர் பாலகுமார், முன்னாள் மாவட்ட விளையாட்டு அலுவலர் பிரகாசம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று 202 வீரர், வீராங்கனைகளுக்கு விளையாட்டு சீருடை மற்றும் சான்றிதழ்கள் வழங்கினர். விளையாட்டு விடுதி மேலாளர் கண்ணன் நன்றி கூறினார்.

    ×