search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பயன்பெறலாம்"

    • நெல் சாகுபடி செய்யக்கூடிய விவசாயிகள் அனைவரும் பருவத்துக்கு ஏற்ற பயிர் ரகங்களையே தேர்வு செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
    • அம்மாபேட்டை வட்டார வேளாண் விரிவாக்க மையத்தில் போதிய அளவு இருப்பு வைக்கப்பட்டு, மானிய விலையில் விவசாயிகளுக்கு வினியோகிக்கப்படுகிறது.

    ஈரோடு:

    நெல் சாகுபடியில் அதிக மகசூல் பெற பருவம் மற்றும் ரகங்கள் முக்கியக் காரணிகளாக அமைகின்றன. எனவே, நெல் சாகுபடி செய்யக்கூடிய விவசாயிகள் அனைவரும் பருவத்துக்கு ஏற்ற பயிர் ரகங்களையே தேர்வு செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இதுகுறித்து அம்மா பேட்டை வட்டார வேளாண்மை உதவி இயக்கு னர் கனிமொழி கூறியதாவது:

    தற்போதைய சம்பா பருவத்தில் அதிக மகசூல் பெறுவதற்கு ஏற்றதாக கோ 52, சி.ஆர் – 1009 சப் 1, ஐ.ஆர். 20, ஏ.டீ.டி – 38, ஏ.டீ.டி – 39, பி.பி.டி – 5204, சம்பா சப் – 1, டி.ஆர்.ஒய் – 3 ஆகிய நெல் ரகங்களே பரிந்துரை செய்யப்படுகின்றன.

    இந்த ரகங்கள் அம்மாபேட்டை வட்டார வேளாண் விரிவாக்க மையத்தில் போதிய அளவு இருப்பு வைக்கப்பட்டு, மானிய விலையில் விவசாயிகளுக்கு வினியோகிக்கப்படுகிறது.

    மேலும், நெல் பயிருக்குத் தேவைப்படும் நுண்ணூட்ட உரம் மற்றும் நுண்ணு யிர் உரங்களான அசோஸ்பைரில்லம், பாஸ்போ பாக்டீரியா போன்றவையும் போதிய அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளன.

    எனவே விவசாயிகள் பருவத்துக்கு ஏற்ப மானிய விலையில் விதை நெல் மற்றும் இடுபொருள்களைப் பெற்று பயன்பெறலாம்.

    இவ்வாறு அவர் தெரி வித்துள்ளார்.

    ×