search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பயணிகள் உயிரிழப்பு"

    • ரெயிலில் இருந்த முகமது ஷபி தவறி கீழே விழுந்தார்.
    • மின்னாம்பள்ளி-ஏத்தாப்பூர் ரெயில் நிலையம் இடையே சென்றபோது ரெயிலில் இருந்து தவறி விழுந்தார்.

    சேலம்:

    ஆந்திர மாநிலம் சித்தூர் தாலுகா மதனப்பள்ளியை சேர்ந்தவர் முகமது ஷபி (38), இவர் நேற்று காட்பாடி-கோழிக்கோடு ரெயிலில் பொதுப்பெட்டியில் பயணம் செய்தார். அப்போது ரெயில் லோகூர்-டேனீஸ்பேட்டை ரெயில் நிலையங்களுக்கு இடையே வந்து கொண்டிருந்தது. அப்போது ரெயிலில் இருந்த முகமது ஷபி தவறி கீழே விழுந்தார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

    மற்றொரு சம்பவம்...

    இதே போல சேலம் மாவட்டம் ஆத்தூர் பெத்தநாயக்கன் பாளையம் அருகே உள்ள சின்னமசமுத்திரம் பஞ்சமர் தெருவை சேர்ந்தவர் செந்தில்குமார் (38). கட்டிட தொழிலாளியான இவர் தினமும் ரெயிலில் வேலைக்கு சென்று வந்தார். அதே போல நேற்றும் வேலை முடிந்து சேலத்தில் இருந்து சேலம்-விருதாச்சலம் ரெயிலில் ஊருக்கு புறப்பட்டார். அப்போது மின்னாம்பள்ளி-ஏத்தாப்பூர் ரெயில் நிலையம் இடையே சென்றபோது ரெயிலில் இருந்து தவறி விழுந்தார். இதில் அவர் சம்பவ இடத்தில் இறந்தார்.

    இதே போல சேலத்தை அடுத்த மேக்னசைட்-கருப்பூர் ரெயில் நிலையத்திற்கு இடையே நள்ளிரவு 12 மணியளவில் சுமார் 45 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் தலை துண்டாகிய நிலையில் பிணமாக கிடப்பதாக ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவசெந்தில்குமாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் அங்கு போலீசாருடன் விரைந்து சென்ற அவர் விசாரணை நடத்தினார். அப்போது தலை துண்டாகிய நிலையில் இறந்து கிடந்தவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர், எப்படி இறந்தார் என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சேலம் பொன்னம்மாப்பேட்டை ரெயில் தண்டவாளப்பகுதியில் 24 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் கிடப்பதாக நேற்றிரவு ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகனுக்கு தகவல் கிடைத்தது. உடனே அங்கு விரைந்து சென்ற ரெயில்வே போலீசார் அவரது உடலை மீட்டு விசாரணை நடத்தினர். அப்போது அவர் ரெயில் தண்டவாளத்தை கடக்க முயன்றபோது அந்த வழியாக சென்ற ரெயிலில் அடிபட்டு இறந்தது தெரிய வந்தது. மேலும் அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்ற விவரம் தெரியவில்லை. இது குறித்தும் ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சேலத்தில் ஒரே நாளில் அடுத்தடுத்து தண்டவாளத்தில் பிணமாக கிடந்த 4 பேரின் உடல்களையும் மீட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • கோழிக்கோட்டில் தேசிய புலனாய்வு பிரிவு அதிகாரிகள் 3 பயணிகள் எரித்து கொல்லப்பட்ட ரெயில் பெட்டியில் ஆய்வு நடத்தினர்.
    • என்.ஐ.ஏ. அதிகாரிகள் நாடு முழுவதும் உள்ள உளவு பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்து உஷார்படுத்தினர்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் ஆலப்புழாவில் இருந்து கண்ணூர் சென்ற எக்ஸ்கியூட்டிவ் ரெயில் நேற்று முன்தினம் இரவு எலத்தூர் அருகே சென்ற போது மர்மநபர் ஒருவர் டி 1 பெட்டியில் இருந்த பயணிகள் மீது திடீரென பெட்ரோல் ஊற்றி தீ வைத்தார். இதில் 9 பேர் படுகாயம் அடைந்தனர். ஒரு குழந்தை மற்றும் பெண் உள்பட 3 பேர் பலியானார்கள்.

    இதுபற்றிய தகவல் கிடைத்ததும் ரெயில்வே போலீசாரும் கேரள அதிரடி படையினரும் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இதில் தீயில் எரிந்து பலியானவர்கள் பற்றிய விபரம் தெரிந்தது. மேலும் பயணிகள் மீது பெட்ரோல் ஊற்றிய நபர், ரெயிலில் இருந்து தப்பி சென்றது கண்டுபிடிக்கப்பட்டது.

    அவர்களை போலீசார் தேடி வந்த நிலையில் ரெயில் பெட்டியில் கிடந்த மர்மநபரின் உடமைகளை போலீசார் கைப்பற்றினர். அதில் ஒரு செல்போன், ஒரு டைரி மற்றும் பெட்ரோலுடன் கூடிய பாட்டில் ஆகியவை கிடைத்தது. அந்த டைரியில் கேரளாவின் முக்கிய நகரங்களான திருவனந்தபுரம், கழக்கூட்டம் மற்றும் குமரி மாவட்டத்தின் குளச்சல், கன்னியாகுமரி ஆகிய ஊர்களின் பெயர்கள் எழுதப்பட்டிருந்தன. போலீசார் கைப்பற்றிய செல்போனில் சிம் கார்டு எதுவும் இல்லை. மேலும் அந்த செல்போனின் ஐ.எம்.இ.ஐ. எண்ணை வைத்து அதில் இருந்து யார்-யாருடன் பேசப்பட்டது என்ற தகவலை போலீசார் கண்டுபிடித்தனர்.

    இதில் உத்தரபிரதேசம் நொய்டாவை சேர்ந்த ஷாருக் செய்பி என்ற வாலிபர் பற்றிய தகவல் தெரியவந்தது. இவரது உருவத்தை ரெயிலில் இருந்த பயணிகள் உதவியுடன் போலீசார் புகைப்படமாக வரைந்தனர். அந்த படம் மூலம் ரெயிலில் 3 பேரை எரித்து கொன்ற நபரை பிடிக்கும் பணிகள் முடுக்கிவிடப்பட்டன.

    இதில் அந்த நபர், கோழிக்கோட்டில் இருந்து உத்தரபிரதேசத்தின் நொய்டாவுக்கு தப்பி சென்றது தெரியவந்தது. உடனே கேரள போலீசார், உத்தரபிரதேச போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் காசியாபாத் அதிரடி படையினரின் உதவியுடன் அந்த நபரை பிடிக்க சென்றனர்.

    அவர் ஒரு தச்சு தொழிலாளி என தெரியவந்தது. அவரது பெயரும் ஷாருக் செய்பி என கூறப்பட்டது. இதையடுத்து காசியாபூர் அதிரடி படையினர் அந்த நபரை பிடித்து விசாரித்தனர். இதில் அவர் கடந்த 2 மாதங்களாக ஊரை விட்டு எங்கும் சென்றதில்லை என தெரியவந்தது. மேலும் அவரது தந்தை தனது மகன் ஊரை விட்டு எங்குமே சென்றதில்லை எனவும் கூறினார். இதையடுத்து போலீசார் அந்த வாலிபரை விடுவித்தனர்.

    இதற்கிடையே இந்த சம்பவத்திற்கும் மாவோயிஸ்டு பயங்கரவாத குழுக்களுக்கும் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகம் கேரள போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு ஏற்பட்டது. எனவே அவர்கள் இதுபற்றி மத்திய உளவு துறைக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் மத்திய உளவு துறை அதிகாரிகளும், தேசிய புலனாய்வு பிரிவினரும் கோழிக்கோடு சென்று விசாரணை நடத்தினர்.

    குறிப்பாக கோழிக்கோட்டில் தேசிய புலனாய்வு பிரிவு அதிகாரிகள் 3 பயணிகள் எரித்து கொல்லப்பட்ட ரெயில் பெட்டியில் ஆய்வு நடத்தினர். மேலும் அந்த பகுதி முழுவதும் சோதனையும் மேற்கொண்டனர். இதில் ரெயிலில் பயணிகள் மீது பெட்ரோல் ஊற்றிய விவகாரம் தொடர்பாக பல முக்கிய ஆதாரங்களை திரட்டினர்.

    இது தொடர்பாக என்.ஐ.ஏ. அதிகாரிகள் கூறும்போது, இந்தியாவின் போபாலில் இதற்கு முன்பு கடந்த 2017-ம் ஆண்டு குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. ஐ.எஸ். பயங்கரவாதிகள் திட்டமிட்டு இந்த குண்டு வெடிப்பை நடத்தினர். இதுதான் ஐ.எஸ்.பயங்கரவாதிகள் இந்தியாவில் நடத்திய முதல் நாசவேலை ஆகும்.

    அப்போது அவர்கள் போபாலில் இருந்து கேரளாவின் கோழிக்கோடுக்கு வந்துள்ளனர். அதுபோல இப்போதும் கேரள ரெயிலில் பெட்ரோல் ஊற்றி பயணிகளை எரித்த நபருக்கு ஐ.எஸ். பயங்கரவாதிகளுடன் தொடர்பு இருக்கலாம் என சந்தேகப்படுவதாக என்.ஐ.ஏ. அதிகாரிகள் தெரிவித்தனர்.

    எனவே என்.ஐ.ஏ. அதிகாரிகள் நாடு முழுவதும் உள்ள உளவு பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்து உஷார்படுத்தினர். மேலும் மகாராஷ்டிராவில் உள்ள பயங்கரவாத தடுப்பு அதிரடிப்படையினரும் மாநிலம் முழுவதும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

    அவர்கள் நடத்திய தேடுதல் வேட்டையில் இன்று அதிகாலை கேரள போலீசார் தேடிய ஷாருக் செய்பி பிடிப்பட்டார். அவரை கைது செய்த அதிரடி படையினர் இந்த தகவலை மகாராஷ்டிரா அதிரடி படையினர் கேரள போலீசாருக்கு தெரிவித்தனர். இதையடுத்து கேரள தனிப்படை போலீசார் மகாராஷ்டிரா விரைந்தனர். அவர்கள் அங்கு சென்று விசாரணை நடத்திய பின்னர் தான் மகாராஷ்டிராவில் கைதானவர், கேரள ரெயிலில் பெட்ரோல் ஊற்றி 3 பயணிகளை கொலை செய்த நபரா? என்பது தெரியவரும்.

    கேரள ரெயிலில் 3 பயணிகளை எரித்து கொன்றதாக உத்தரபிரதேசத்தில் கைதான நபர் விடுவிக்கப்பட்ட நிலையில் இப்போது மகாராஷ்டிராவில் இன்னொருவர் கைதாகி இருப்பது கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    மேலும் இந்த சம்பவத்தில் பயங்கரவாத கும்பலின் தொடர்பு இருக்குமோ என்ற சந்தேகத்தையும் அதிகரித்து உள்ளது.

    இந்த நிலையில் கேரள போலீஸ் டி.ஜி.பி. அனில்காந்த் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    கேரள ரெயிலில் 3 பயணிகளை எரித்து கொன்ற சம்பவத்தில் தொடர்புடைய நபர் மகாராஷ்டிரா மாநிலம் ரத்தினகிரியில் பிடிபட்டுள்ளார்.

    இந்த தகவலை மகாராஷ்டிரா போலீசார் எங்களுக்கு தெரிவித்தனர். அவரிடம் சம்பவம் குறித்து கேரள போலீசார் விசாரிக்க உள்ளனர். இதற்காக கேரளாவில் இருந்து இன்று போலீஸ் அதிகாரிகள் குழு ரத்தினகிரி செல்கிறது.

    இக்குழுவினர் மகாராஷ்டிராவில் பிடிபட்ட நபரை காவலில் எடுத்து இங்கு அழைத்து வருவார்கள். கேரளா வந்ததும் அந்த நபரிடம் சம்பவம் குறித்து உரிய விசாரணை நடத்தப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • உத்தரபிரதேசம் நொய்டாவை சேர்ந்த ஷாருக் செய்பி என்ற வாலிபர் பற்றிய தகவல் தெரியவந்தது.
    • என்.ஐ.ஏ. அதிகாரிகள் நாடு முழுவதும் உள்ள உளவு பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்து உஷார்படுத்தினர்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் ஆலப்புழாவில் இருந்து கண்ணூர் சென்ற எக்ஸ்கியூட்டிவ் ரெயில் நேற்று முன்தினம் இரவு எலத்தூர் அருகே சென்றபோது மர்ம நபர் ஒருவர் டி 1 பெட்டியில் இருந்த பயணிகள் மீது திடீரென பெட்ரோல் ஊற்றி தீ வைத்தார். இதில் 9 பேர் படுகாயம் அடைந்தனர். ஒரு குழந்தை மற்றும் பெண் உள்பட 3 பேர் பலியானார்கள்.

    இதுபற்றிய தகவல் கிடைத்ததும் ரெயில்வே போலீசாரும் கேரள அதிரடி படையினரும் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இதில் தீயில் எரிந்து பலியானவர்கள் பற்றிய விபரம் தெரிந்தது. மேலும் பயணிகள் மீது பெட்ரோல் ஊற்றிய நபர், ரெயிலில் இருந்து தப்பி சென்றது கண்டுபிடிக்கப்பட்டது.

    அவர்களை போலீசார் தேடி வந்த நிலையில் ரெயில் பெட்டியில் கிடந்த மர்ம நபரின் உடமைகளை போலீசார் கைப்பற்றினர். அதில் ஒரு செல்போன், ஒரு டைரி மற்றும் பெட்ரோலுடன் கூடிய பாட்டில் ஆகியவை கிடைத்தது. அந்த டைரியில் கேரளாவின் முக்கிய நகரங்களான திருவனந்தபுரம், கழக்கூட்டம் மற்றும் குமரி மாவட்டத்தின் குளச்சல், கன்னியாகுமரி ஆகிய ஊர்களின் பெயர்கள் எழுதப்பட்டிருந்தன. போலீசார் கைப்பற்றிய செல்போனில் சிம் கார்டு எதுவும் இல்லை. மேலும் அந்த செல்போனின் ஐ.எம்.இ.ஐ. எண்ணை வைத்து அதில் இருந்து யார்-யாருடன் பேசப்பட்டது என்ற தகவலை போலீசார் கண்டுபிடித்தனர்.

    இதில் உத்தரபிரதேசம் நொய்டாவை சேர்ந்த ஷாருக் செய்பி என்ற வாலிபர் பற்றிய தகவல் தெரியவந்தது. இவரது உருவத்தை ரெயிலில் இருந்த பயணிகள் உதவியுடன் போலீசார் புகைப்படமாக வரைந்தனர். அந்த படம் மூலம் ரெயிலில் 3 பேரை எரித்து கொன்ற நபரை பிடிக்கும் பணிகள் முடுக்கிவிடப்பட்டன.

    இதில் அந்த நபர், கோழிக்கோட்டில் இருந்து உத்தரபிரதேசத்தின் நொய்டாவுக்கு தப்பி சென்றது தெரியவந்தது. உடனே கேரள போலீசார், உத்தரபிரதேச போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் காசியாபாத் அதிரடி படையினரின் உதவியுடன் அந்த நபரை பிடிக்க சென்றனர்.

    அவர் ஒரு தச்சு தொழிலாளி என தெரியவந்தது. அவரது பெயரும் ஷாருக் செய்பி என கூறப்பட்டது. இதையடுத்து காசியாபூர் அதிரடி படையினர் அந்த நபரை பிடித்து விசாரித்தனர். இதில் அவர் கடந்த 2 மாதங்களாக ஊரை விட்டு எங்கும் சென்றதில்லை என தெரியவந்தது. மேலும் அவரது தந்தை தனது மகன் ஊரை விட்டு எங்குமே சென்றதில்லை எனவும் கூறினார். இதையடுத்து போலீசார் அந்த வாலிபரை விடுவித்தனர்.

    இதற்கிடையே இந்த சம்பவத்திற்கும் மாவோயிஸ்டு பயங்கரவாத குழுக்களுக்கும் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகம் கேரள போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு ஏற்பட்டது. எனவே அவர்கள் இதுபற்றி மத்திய உளவு துறைக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் மத்திய உளவு துறை அதிகாரிகளும், தேசிய புலனாய்வு பிரிவினரும் கோழிக்கோடு சென்று விசாரணை நடத்தினர்.

    குறிப்பாக கோழிக்கோட்டில் தேசிய புலனாய்வு பிரிவு அதிகாரிகள் 3 பயணிகள் எரித்து கொல்லப்பட்ட ரெயில் பெட்டியில் ஆய்வு நடத்தினர். மேலும் அந்த பகுதி முழுவதும் சோதனையும் மேற்கொண்டனர். இதில் ரெயிலில் பயணிகள் மீது பெட்ரோல் ஊற்றிய விவகாரம் தொடர்பாக பல முக்கிய ஆதாரங்களை திரட்டினர்.

    இது தொடர்பாக என்.ஐ.ஏ. அதிகாரிகள் கூறும்போது, இந்தியாவின் போபாலில் இதற்கு முன்பு கடந்த 2017-ம் ஆண்டு குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. ஐ.எஸ். பயங்கரவாதிகள் திட்டமிட்டு இந்த குண்டு வெடிப்பை நடத்தினர். இதுதான் ஐ.எஸ். பயங்கரவாதிகள் இந்தியாவில் நடத்திய முதல் நாசவேலை ஆகும்.

    அப்போது அவர்கள் போபாலில் இருந்து கேரளாவின் கோழிக்கோடுக்கு வந்துள்ளனர். அதுபோல இப்போதும் கேரள ரெயிலில் பெட்ரோல் ஊற்றி பயணிகளை எரித்த நபருக்கு ஐ.எஸ். பயங்கரவாதிகளுடன் தொடர்பு இருக்கலாம் என சந்தேகப்படுவதாக என்.ஐ.ஏ. அதிகாரிகள் தெரிவித்தனர்.

    எனவே என்.ஐ.ஏ. அதிகாரிகள் நாடு முழுவதும் உள்ள உளவு பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்து உஷார்படுத்தினர். மேலும் மகாராஷ்டிரத்தில் உள்ள பயங்கரவாத தடுப்பு அதிரடிப்படையினரும் மாநிலம் முழுவதும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

    அவர்கள் நடத்திய தேடுதல் வேட்டையில் இன்று அதிகாலை கேரள போலீசார் தேடிய ஷாருக் செய்பி பிடிப்பட்டார். அவரை கைது செய்த அதிரடி படையினர் இந்த தகவலை மகாராஷ்டிர அதிரடி படையினர் கேரள போலீசாருக்கு தெரிவித்தனர். இதையடுத்து கேரள தனிப்படை போலீசார் மகாராஷ்டிரா விரைந்தனர். அவர்கள் அங்கு சென்று விசாரணை நடத்திய பின்னர் தான் மகாராஷ்டிரத்தில் கைதானவர், கேரள ரெயிலில் பெட்ரோல் ஊற்றி 3 பயணிகளை கொலை செய்த நபரா? என்பது தெரியவரும்.

    கேரள ரெயிலில் 3 பயணிகளை எரித்து கொன்றதாக உத்தரபிரதேசத்தில் கைதான நபர் விடுவிக்கப்பட்ட நிலையில் இப்போது மகாராஷ்டிரத்தில் இன்னொருவர் கைதாகி இருப்பது கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    மேலும் இந்த சம்பவத்தில் பயங்கரவாத கும்பலின் தொடர்பு இருக்குமோ என்ற சந்தேகத்தையும் அதிகரித்து உள்ளது.

    • பயணிகள் மீது தீ வைத்த நபரை கண்டுபிடிக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டனர்.
    • படத்தை அனைத்து போலீஸ் நிலையங்களுக்கும் அனுப்பி மர்மநபரை கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபட்டனர்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் ஆலப்புழாவில் இருந்து கண்ணூர் செல்லும் எக்ஸ்கியூட்டிவ் ரெயில் நேற்று முன்தினம் இரவு ஆலப்புழாவில் இருந்து புறப்பட்டது.

    எலத்தூர் அருகே ரெயில் சென்ற போது டி 1 பெட்டியில் இருந்த மர்மநபர் ஒருவர் அந்த பெட்டியில் பயணம் செய்த பெண் மற்றும் பயணிகள் மீது திடீரென பெட்ரோல் ஊற்றி நெருப்பு வைத்தார். இதை பார்த்த மற்ற பயணிகள் அலறியடித்தப்படி ரெயிலின் அபாய சங்கலியை பிடித்து இழுத்து ரெயிலை நிறுத்தினர்.

    இதனை கண்டதும் பயணிகள் மீது பெட்ரோல் ஊற்றிய நபர், ரெயிலில் இருந்து குதித்து தப்பியோடினார். இந்த சம்பவத்தில் ஒரு பெண், ஒரு குழந்தை உள்பட 3 பேர் பலியானார்கள். ரெயில் கண்ணூர் வந்து சேர்ந்த பின்னர் பெட்டியில் பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்ட பெண்ணும், குழந்தையையும் காணவில்லை.

    போலீசார் எரிக்கப்பட்டவர்களின் உடல்களை தேடியபோது, அவை தண்டவாளத்தில் கருகிய நிலையில் கிடந்தன. உடல்களை கைப்பற்றிய போலீசார், அவற்றை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இறந்தவர்கள் யார்? என்பது பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

    இதில் அவர்கள் கண்ணூர் பகுதியை சேர்ந்தவர்கள் என தெரியவந்தது. மேலும் அவர்கள் ரெயில் பெட்டியில் இருந்து கீழே குதித்த போது அடிப்பட்டு இறந்திருக்கலாம் என்ற சந்தேகம் போலீசாருக்கு ஏற்பட்டது. இதுபோல இன்னொருவரின் உடலும் அந்த பகுதியில் இருந்து மீட்கப்பட்டது. இந்த சம்பவத்தில் 8 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    இதற்கிடையே பயணிகள் மீது தீ வைத்த நபரை கண்டுபிடிக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டனர். இதற்காக அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை கைப்பற்றி போலீசார் ஆய்வு செய்தனர். இதில் சிவப்பு தொப்பி அணிந்த நபர் ஒருவர் ரெயிலில் இருந்து இறங்கி மெயின் ரோட்டிற்கு செல்வது தெரியவந்தது. அந்த நபர் சிறிது நேரம் சாலையில் காத்திருந்தார்.

    அப்போது இன்னொரு நபர் மோட்டார் சைக்கிளில் அங்கு வருகிறார். அந்த நபருடன், ரெயிலில் இருந்து குதித்த நபர் மோட்டார் சைக்கிளில் ஏறி செல்கிறார். அந்த நபர் யார்? என்பதை கண்டுபிடிக்க ரெயிலில் இருந்த பயணிகளிடம் கேட்டு போலீசார் படம் வரைந்தனர். அந்த படத்தை அனைத்து போலீஸ் நிலையங்களுக்கும் அனுப்பி மர்மநபரை கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபட்டனர்.

    இந்நிலையில் கேரளாவில் ஓடும் ரெயிலில் பயணிகள் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த நபர் உத்தரபிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். கைதானவர் குறித்த தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கேரளாவில் ஓடும் ரெயிலில் பயணிகள் மீது பெட்ரோல் ஊற்றி எரித்த சம்பவத்தில் 3 பேர் உயிரிழந்தனர்.
    • சிவப்பு சட்டை மற்றும் தொப்பி அணிந்த நபர் பெட்ரோலை ஊற்றி தீ வைத்தது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    திருவனந்தபுரம்:

    கேரளாவில் ஓடும் ரெயிலில் பயணிகள் மீது பெட்ரோல் ஊற்றி எரித்த சம்பவத்தில் 3 பேர் உயிரிழந்தனர். இந்த வழக்கை என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்

    விசாரணையில், சிவப்பு சட்டை மற்றும் தொப்பி அணிந்த நபர் பெட்ரோலை ஊற்றி தீ வைத்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    ரெயில் பயணி ஷஜிஷா என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில், தீ வைத்த நபர் மீது கொலை முயற்சி, மரணத்தை உண்டாக்கும் வகையிலான பொருளை பயன்படுத்துவது உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் கோழிக்கோடு ரெயில் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    கைப்பற்றப்பட்ட மர்ம நபரின் செல்போனில் இருந்து கடைசியாக மார்ச் 30ம் தேதி அழைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் நேரில் பார்த்தவர்கள் மற்றும் சிசிடிவி காட்சி அடிப்படையில் தீ வைத்த நபரின் மாதிரி உருவப்படம் வெளியிடப்பட்டுள்ளது.

    • கோரப்புழா பாலத்தில் சென்றபோது, அந்தப் பெட்டியில் இருந்த ஒரு வாலிபருக்கும் மற்ற பயணிகளுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
    • பயணிகளின் மீது தீப்பிடித்ததால் அவர்கள் தீக்காயத்துடன் அலறினர்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் ஆலப்புழாவில் இருந்து கண்ணூருக்கு நேற்று இரவு 9.05 மணிக்கு எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட்டது.

    இந்த ரெயிலில் ஏராளமான பயணிகள் பயணம் செய்தனர். இதில் டி-1 பெட்டியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சிலர் உள்பட பலர் இருந்தனர். இந்த ரெயில் நள்ளிரவில் கோழிக்கோடு நகரை தாண்டி சென்றது.

    எலத்தூர் ரெயில் நிலையம் அருகே உள்ள கோரப்புழா பாலத்தில் சென்றபோது, அந்தப் பெட்டியில் இருந்த ஒரு வாலிபருக்கும் மற்ற பயணிகளுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

    அப்போது அந்த வாலிபர், தான் கையில் வைத்திருந்த 2 பாட்டில்களில் இருந்த திரவத்தை தன்னுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பயணிகள் மீது திடீரென ஊற்றினார். பின்னர் அவர் நெருப்பையும் பற்ற வைத்தார். இதனால் அங்கு பதட்டம் ஏற்பட்டது.

    பயணிகளின் மீது தீப்பிடித்ததால் அவர்கள் தீக்காயத்துடன் அலறினர். இதனால் அங்கு பதட்டம் ஏற்பட்டது. தீயினால் புகை மண்டலமும் உருவாக யார் எங்கு இருக்கிறார்கள்? என்றே தெரியவில்லை. இந்த நிலையில் அந்த பெட்டியில் பயணம் செய்த பயணி ஒருவர் அபாய சங்கிலியை பிடித்து இழுத்தார்.

    இதனால் ரெயில் நின்றது. இதனை பயன்படுத்தி தீ வைப்பு சம்பவத்தில் ஈடுபட்டவர் தப்பி ஓடி விட்டார். இது பற்றிய தகவல் கிடைத்ததும் ரெயில்வே பாதுகாப்பு படையினரும், ரெயில்வே அதிகாரிகளும் சம்பவ இடம் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

    இந்த சம்பவத்தில் காயம் அடைந்த பிரின்ஸ், பேபி மெமோரியல், தலச்சேரி அனில்குமார், அவரது மனைவி சஜிஷா, மகன் அத்வைத் உள்ளிட்ட 9 பேரை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.அவர்கள் கோழிக்கோடு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

    இதற்கிடையில் அந்த பெட்டியில் பயணம் செய்த குழந்தை உள்பட 3 பேர் மாயமாகி இருப்பது தெரிய வந்தது. அவர்களை தேடியபோது ரெயில் தண்டவாளத்தில் 3 பேரும் தீக்காயங்களுடன் பிணமாக கிடப்பது தெரியவந்தது. அவர்கள் மீது தான் தீ வைக்கப்பட்டதா? அல்லது தீ விபத்தின்போது, ரெயிலில் இருந்து குதித்ததில் இறந்திருக்கலாமா? என்ற சந்தேகம் போலீசாருக்கு ஏற்பட்டு உள்ளது.

    தொடர்ந்து நடைபெற்ற முதல்கட்ட விசாரணையில் பிணமாக கிடந்தது மாட்டனூரைச் சேர்ந்த வாசி ரகுமத், அவரது சகோதரி மகள் சஹாரா (வயது 2) மற்றும் சவுபீக் என தெரிய வந்துள்ளது.

    பயணிகள் தீ வைத்த நபர், சிவப்பு தொப்பி மற்றும் சட்டை அணிந்திருந்ததாகவும் அவர் வைத்திருந்த 2 பாட்டில்களில் மண் எண்ணெய் அல்லது பெட்ரோல் வைத்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

    அவர் திட்டமிட்டு வந்து இந்த தாக்குதலை நடத்தி இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். மேலும் அவருக்கு மாவோயிஸ்டு இயக்கத்தினருடன் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகமும் போலீசாருக்கு ஏற்பட்டுள்ளது. ரெயில் நிலைய தண்டவாளம் பகுதியில் சந்தேகத்திற்கிடமாக ஒரு பேக் கிடந்ததை பார்த்த போலீசார் அதனை கைப்பற்றி விசாரணை நடத்தினர். அந்த பையில் ஒரு டிபன் பாக்ஸ் இருந்தது. அந்த பையை தீ வைத்த வாலிபர் விட்டுச்சென்று இருக்கலாமா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அந்தப் பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமரா பதிவுகளை கைப்பற்றியும் போலீசார் ஆய்வு செய்தனர். இதில் சந்தேகத்திற்குரிய நபர், ரெயிலில் இருந்து இறங்கி செல்வது தெரிய வந்தது. அதன் அடிப்படையில் ஒரு வாலிபரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்நிலையில் கேரளாவில் ஓடும் ரெயிலில் பயணிகள் மீது பெட்ரோல் ஊற்றி எரித்த சம்பவத்தில் 3 பேர் உயிரிழந்த நிலையில் என்.ஐ.ஏ விசாரணை நடத்த உள்ளது.

    சிவப்பு சட்டை மற்றும் தொப்பி அணிந்த நபர் பெட்ரோலை ஊற்றி தீ வைத்தது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தாக்குதல் நடத்தியவரின் தொலைபேசி மற்றும் இந்தியில் எழுதப்பட்ட சில புத்தகங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

    கேரள டிஜிபி அனில் காந்த் சம்பவம் நடந்த எலத்தூர் பகுதிக்கு விரைகிறார்.

    ×