search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நாராயணன் பேட்டி"

    • செல்போன்களை உரிய–வர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி இன்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலு–வலகத்தில் நடைபெற்றது.
    • ரூ.19 லட்சம் மதிப்பிலான 104 செல்போன்கள் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.

    கோவை,

    கோவை மாவட்டத்தில் காணாமல் போன செல்போன்களை உரிய–வர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி இன்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலு–வலகத்தில் நடைபெற்றது.

    இதில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாராயணன் மீட்க–ப்பட்ட செல்போன்களை உரிமையாளர்களிடம் ஒப்படைத்தார்.

    பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    கோவை மாவட்டத்தில் காணாமல் போன ரூ.19 லட்சம் மதிப்பிலான 104 செல்போன்கள் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. கடந்த ஆண்டில் மட்டும் 750 செல்போன்கள் மீட்டு ஒப்படைக்கப்பட்டுள்ளன.

    மேலும் போதைப்பொருள் விற்பனை, சூதாட்டம், லாட்டரி விற்பனை, செல்போன் திருட்டு போன்ற பல்வேறு குற்றங்கள் தொடர்பாக கோவை மாவட்டத்தில் 1,341 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இந்த ஆண்டில் குற்றங்கள் தொடர்பாக மொத்தம் 1,550 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.போதைப் பொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் 53 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 68 கைது செய்யப்பட்டனர்.

    கோவை மாவட்டத்தில் போதை பொருள் மற்றும் போக்சோ சம்பந்தமான விழிப்புணர்வு தொடர்ந்து ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதுவரை 310 கிலோ கஞ்சா சாக்லெட் பறிமுதல் செய்யப்பட்டு குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    போக்சோ வழக்கில் கடந்தாண்டு 170 குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. தற்போதைய 2 மாதத்தில் போக்சோ சம்பந்தமாக 23 குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளன. 2 வழக்குகள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. குண்டர் சட்டத்தின் கீழ் 11 பேர் கைது செய்யப்பட்டனர்.

    கோவை மாவட்டத்தை பொறுத்த வரை 250 கிராமங்கள் கஞ்சா இல்லா கிராமமாக மக்கள் அறிவித்துள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • எந்த வயதினராக இருந்தாலும் நடவடிக்கை பாயும் என போலீஸ் சூப்பிரண்டு தெரிவித்தார்.
    • இதுவரை 570 கஞ்சா வழக்குகள் பதியப்பட்டு 520 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    நீலாம்பூர்,

    கோவை மாவட்டம் சூலூர் போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட நீலாம்பூர் பகுதியில் புதிதாக புறக்காவல் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.

    இந்த புறக்காவல் நிலையத்தை கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார்.மேலும் அங்கு அமைக்கப்பட்டுள்ள சி.சி.டி.வி கட்டுப்பாட்டு அறையையும் திறந்து வைத்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    கோவை மாவட்டத்தில் குற்றங்களை குறைப்பதற்கா கவும், கோவை மாநகருக்குள் நுழைவதற்கான முக்கியமான எல்லைப்பகுதி என்பதாலும் இங்கு கண்காணிப்பை தீவிரப்படுத்துவதற்காக புற காவல் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இது குற்றங்கள் குறைப்பதற்கு பயன் அளிப்பதாக இருக்கும். இதுவரை கோவை மாநகரில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 220 பவுன் நகைகள் குற்றவாளி களிடம் இருந்து மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

    கோவை மாநகரில் குற்றவாளிகள் எந்த வயதினராக இருந்தாலும் அவர்கள் மீது தயவு தாட்சண்யம் இன்றி காவல்துறை நடவடிக்கை எடுக்கும். குற்றங்களை செய்துவிட்டு யாரும் தப்பிக்க முடியாது.

    கோவையில் பொது மக்களை மிரட்டி பணம் பறித்தால் அவர்களை கண்டு கொள்ளாமல் இருக்க மாட்டோம். அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    இருசக்கர வாகன திருட்டு சம்பந்தமாக 150 வழக்குகள் பதியப்பட்டுள்ளன. இதில் 120 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

    இதேபோல் கோவையில் இதுவரை 570 கஞ்சா வழக்குகள் பதியப்பட்டு 520 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×