search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நத்திங் நிறுவனம்"

    • நத்திங் நிறுவனம் தனது அடுத்த போனை விரைவில் வெளியிட உள்ளதாக புதிய தகவல் ஒன்று பரவி வருகிறது.
    • நத்திங் போன் 1-ன் லைட் வெர்ஷனாக அது இருக்கும் என கூறப்படுகிறது.

    மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் நத்திங் நிறுவனத்தின் முதல் ஸ்மார்ட்போன் இந்த மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. டிரான்ஸ்பரண்ட் பேக் பேனலுடன் கூடிய இந்த ஸ்மார்ட்போன் கருப்பு மற்றும் வெள்ளை ஆகிய இரு நிறங்களில் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் பேக் பேனலில் எல்.இ.டி ஸ்டிரிப்கள் கொடுக்கப்பட்டு இருந்தன.

    அதுமட்டுமின்றி இதில் 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்துடன் கூடிய 6.55 இன்ச் OLED டிஸ்ப்ளே, குவால்காம் ஸ்நாப்டிராகன் 778G+ புராசஸர், 50 மெகாபிக்சல் டூயல் ரியர் கேமரா, 16 மெகாபிக்சல் செல்பி கேமரா, 4,500 எம்.ஏ.ஹெச் திறன் கொண்ட பேட்டரி, 33வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி என எண்ணற்ற அம்சங்களை இந்த போன் கொண்டிருந்தாலும், இதில் சில கோளாறுகள் ஏற்பட்டதாக பயனர்கள் புகார் தெரிவித்து வந்தனர்.


    இந்நிலையில், நத்திங் நிறுவனம் தனது அடுத்த போனை விரைவில் வெளியிட உள்ளதாக புதிய தகவல் ஒன்று பரவி வருகிறது. அதன்படி இந்த ஸ்மார்ட்போன் நத்திங் போன் 1-ன் லைட் வெர்ஷனாக இருக்கும் என கூறப்படுகிறது. நத்திங் போன் 1-ற்கும் அதன் லைட் வெர்ஷனுக்கு சின்ன சின்ன மாற்றங்கள் தான் இருக்குமாம்.

    குறிப்பாக நத்திங் போன் 1-ன் பேக் பேனலில் இடம்பெற்றுள்ள எல்.இ.டி ஸ்டிரிப்கள் அதன் லைட் வெர்ஷனில் இடம்பெற்று இருக்காது என கூறப்படுகிறது. அதேபோல் வயர்லெஸ் சார்ஜிங் வசதியும் இடம்பெற்று இருக்காது என தெரிகிறது. மற்றபடி நத்திங் போன் 1-ல் இடம்பெற்று இருக்கும் அனைத்து அம்சங்களும் அதன் லைட் வெர்ஷனிலும் வர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

    • இன்று முதல் நத்திங் போனை முன்பதிவு இன்று ப்ளிப்கார்ட் தளத்தில் ஆர்டர் செய்து வாங்கிக் கொள்ளலாம்.
    • ஏராளமானோர் ரூ.2000 செலுத்தி முன்பதிவு செய்து இந்த போனை வாங்கினர்.

    நத்திங் நிறுவனம் அதன் முதல் ஸ்மார்ட்போனை கடந்த ஜூலை 12-ந் தேதி வெளியிட்டது. இந்த போனை மக்களிடையே பிரபலமாக்க அந்நிறுவனம் கடந்த சில மாதங்களாக பல்வேறு வியாபார யுக்திகளை பயன்படுத்தியது. அதில் ஒன்று தான் முன்பதிவு. இந்த ஸ்மார்ட்போன் முன்பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே முதலில் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

    இதனால் ஏராளமானோர் ரூ.2000 செலுத்தி முன்பதிவு செய்து இந்த போனை வாங்கினர். முன்பதிவு செய்தவர்களுக்கு இந்த போன் கடந்த ஜூலை 21-ந் தேதி முதல் விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில், தற்போது முன்பதிவின்றி இந்த ஸ்மார்ட்போனை வாங்க முடியும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.


    அதன்படி இன்று முதல் நத்திங் போனை முன்பதிவு இன்றி ப்ளிப்கார்ட் தளத்தில் ஆர்டர் செய்து வாங்கிக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது. நத்திங் போனின் 8ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.32 ஆயிரத்து 999 ஆக நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அதேபோல் 8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.35 ஆயிரத்து 999 ஆக நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    இதன் டாப் எண்ட் மாடலான 2ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.38 ஆயிரத்து 999 ஆக நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. ஹெச்.டி.எஃப்.சி பேங்க் கார்ட் வைத்திருப்பவர்களுக்கு மட்டும் ரூ.2 ஆயிரம் தள்ளுபடி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    • சமீபத்தில் நத்திங் போனை பயன்படுத்தியவர்கள் அதன் டிஸ்ப்ளேவில் கோளாறு இருப்பதாக புகார் அளித்தனர்.
    • டிஸ்ப்ளேவில் உள்ள கோளாறை சரிபடுத்தும் வகையில் விரைவில் ஒரு அப்டேட்டை வெளியிட நத்திங் நிறுவனம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

    நத்திங் நிறுவனம் அதன் முதல் ஸ்மார்ட்போனை கடந்த ஜூலை 12-ந் தேதி உலகம் முழுவதும் அறிமுகப்படுத்தியது. அன்றைய தினம் இந்தியாவில் இந்த மொபைல் அறிமுகமானது. பல்வேறு நாடுகளில் இந்த போன் விற்பனைக்கு வந்தாலும், இந்தியாவில் இன்று இரவு 7 மணிக்கு தான் விற்பனை தொடங்கப்பட உள்ளது. ப்ளிப்கார்ட் தளத்தின் மூலம் இந்த போன் இந்தியாவில் விற்பனை செய்யப்பட உள்ளது.

    இந்நிலையில், நத்திங் நிறுவனம் அதன் முதல் போனான நத்திங் போன் (1) மாடலுக்கு அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அப்டேட்டில் யூசர் இண்டர்பேஸ், பேட்டரி, கேமரா ஆகியவற்றில் சில மேம்படுத்தல்களை செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த அப்டேட் மொத்தம் 93.81 எம்.பி அளவு கொண்டதாகும்.


    அதன்படி இந்த அப்டேட்டில் நத்திங் இயங்குதளத்தின் சிஸ்டம் ஒலிகள் புதுப்பிக்கப்பட்டு உள்ளன. இதுதவிர கேமராவில் சில மாற்றங்களை கொண்டுவந்துள்ளன. குறிப்பாக அதில் HDR10 ப்ளஸுக்கான ஆதரவை பெற்றுள்ளன. இதன்மூலம் ஹெச்டிஆர், போர்ட்ரெய்ட், இரவுக் காட்சி மற்றும் பிற மோட்களுக்கான கேமரா எபெக்ட்களும் மேம்படுத்தப்பட்டுள்ளன.

    நத்திங் போன் 1-ன் பேட்டரி ஆயுளும் இந்த அப்டேட் மூலம் மேம்படுத்தப்பட்டுள்ளது. சமீபத்தில் நத்திங் போனை பயன்படுத்தியவர்கள் அதன் டிஸ்ப்ளேவில் கோளாறு இருப்பதாக புகார் அளித்தனர். இதனை சரிபடுத்தும் வகையில் விரைவில் ஒரு அப்டேட்டை வெளியிட நத்திங் நிறுவனம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

    • நத்திங் போன் வருகிற ஜூலை 21-ந் தேதி முதல் ப்ளிப்கார்ட் தளத்தின் மூலம் விற்பனைக்கு வர உள்ளது.
    • முன்பதிவு கட்டணமாக ரூ.2 ஆயிரம் வசூலிக்கப்பட்டு உள்ளது.

    நத்திங் நிறுவனம் அதன் முதல் ஸ்மார்ட்போனை கடந்த ஜூலை 12-ந் தேதி வெளியிட்டது. இந்த போனை மக்களிடையே பிரபலமாக்க அந்நிறுவனம் கடந்த சில மாதங்களாக பல்வேறு வியாபார யுக்திகளை பயன்படுத்தியது. அதில் ஒன்று தான் முன்பதிவு. இந்த ஸ்மார்ட்போன் முன்பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே முதலில் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

    அப்படி முன்பதிவு செய்தவர்களுக்கு பாஸ் ஒன்று வழங்கப்பட்டு உள்ளது. அதனை பெற்றவர்களுக்கு மட்டுமே முதலில் நத்திங் போன் வழங்கப்பட உள்ளது. முன்பதிவு கட்டணமாக ரூ.2 ஆயிரம் வசூலிக்கப்பட்டு உள்ளது. இந்த 2 ஆயிரம் ரூபாய் முன்பதிவு தொகை, போன் வாங்கும்போது அதன் மொத்த விலையில் கழித்துக்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


    இதன் முதற்கட்ட முன்பதிவி முடிந்துவிட்ட நிலையில், தற்போது அடுத்தக்கட்ட முன்பதிவு தொடங்கும் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி இன்று முதல் நத்திங் போனின் முன்பதிவு மீண்டும் தொடங்கி உள்ளது. ஜூலை 20-ந் தேதி நள்ளிரவு வரை முன்பதிவு செய்துகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. வருகிற ஜூலை 21-ந் தேதி முதல் ப்ளிப்கார்ட் தளத்தின் மூலம் நத்திங் போன் விற்பனைக்கு வர உள்ளது.

    ×