search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தொழுநோயாளிகள்"

    தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்களை வெறுத்து ஒதுக்கி வைக்கும் வன்கொடுமைக்கு முடிவு கட்டும் விதமாக கொண்டுவரப்பட்ட மசோதா இன்று மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. #PPChaudhary #LokSabha
    புதுடெல்லி:

    தொழுநோயால் பாதிக்கப்படவர்களை அவர்களது உறவினர்கள் உட்பட ஏறத்தாழ அனைவருமே ஒதுக்கி வைக்கும் ஒரு சூழல் இருந்து வருகிறது. இதனை கண்டித்து கடந்த 2010-ம் ஆண்டு ஐ.நா ஒரு தீர்மானம் நிறைவேற்றியது. அதில் இதுபோன்ற தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்களை ஒதுக்கி வைக்க கூடாது என தெரிவித்திருந்தது.

    அதேபோல், சமீபத்தில் உச்சநீதிமன்றமும் மத்திய மற்றும் மாநில அரசுகள் தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் வாழ்வை சீர்செய்ய உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தது.



    இந்நிலையில், தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்களை வெறுத்து ஒதுக்கும் கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் புதிய சட்டமசோதா இன்று மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது.

    மத்திய சட்டத்துறை மந்திரி பி.பி சவுத்ரி தாக்கல் செய்த இந்த மசோதாவில், தேசிய மனித உரிமைகள் ஆணையம், மாநிலங்களவை மனு சீராய்வுக்குழு, தேசிய சட்ட ஆணையம், மற்றும் உச்சநீதிமன்றம் ஆகியவற்றின் பரிந்துரையின் அடிப்படையில், தனிநபர் சட்டத்தில் இருந்து தொழுநோயாளிகள் பிரிவை நீக்க முடிவு செய்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. #LokSabha
    ×