search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தைப்பூச மகாதரிசனம்"

    • தைப்பூச விழாவின் மிக முக்கிய நிகழ்வான மகாதரிசனம் நிகழ்ச்சி நாளை இரவு நடக்கிறது.
    • இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு விடிய, விடிய சாமி தரிசனம் செய்வார்கள்.

    சென்னிமலை:

    சென்னிமலை முருகன் கோவில் தைப்பூச விழா கடந்த ஜனவரி மாதம் 28-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    பின்னர் பல்லாக்கு சேவை, மயில் வாகன காட்சி, யானை வாகன காட்சி, பஞ்சமூர்த்தி புற ப்பாடு, திருத்தேரோட்டம், குதிரை வாகன காட்சி, பரி வேட்டை ஆகிய விழாக்கள் தொடர்ந்து நடந்து வருகிறது.

    தொடர்ந்து இன்று இரவு தெப்போற்சவம், பூச வாகன காட்சி திருவீதி உலா நடக்கிறது. தைப்பூச விழாவின் மிக முக்கிய நிகழ்வான மகாதரிசனம் நிகழ்ச்சி நாளை (வியாழக்கிழமை) இரவு நடக்கிறது.

    முன்னதாக காலை 10 மணிக்கு சென்னிமலை கைலாசநாதர் கோவிலில் வள்ளி, தெய்வானை சமேத முத்துகுமாரசாமிக்கு மகா சிறப்பு அபிஷேகமும், அதைத்தொடடர்ந்து மலர் அபிஷேகம் நடைபெறுகிறது.

    அப்போது டன் கணக்கில் மலர்களால் அபிஷேகம் செய்யப்படும். இரவு 8 மணிக்கு நடராஜ பெருமானும், சுப்பிரமணிய சுவாமியும் வெள்ளி விமானம், வெள்ளி மயில் வாகனத்தில் திருவீதி உலா நடக்கும்.

    இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு விடிய, விடிய சாமி தரிசனம் செய்வார்கள். இரவு 9 மணிக்கு நாதஸ்வர தவிலிசை கச்சேரியுடன் நான்கு ராஜா வீதிகளிலும் சாமி வலம் வந்து அதிகாலை 5 மணிக்கு கைலாசநாதர் கோவி லுக்குள் சென்றடையும்.

    தொடர்ந்து நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) மஞ்சள் நீர் அபிஷேகத்துடன் 15 நாள் தேர் திருவிழா நிறைவுக்கு வருகிறது.

    விழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் அன்னகொடி, செயல் அலுவலர் சரவணன்,மற்றும் பணியாளர்கள், அர்ச்ச கர்கள் செய்துள்ளனர். பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

    நாளை மாலை 4 மணிக்கு மேல் சென்னிமலை டவுன் பகுதிக்கு வாகனங்கள் அனுமதிக்கப்பட மாட்டது.

    ஈரோடு, பெருந்துறை மார்கமாக செல்லும் பஸ் களுக்கு பிராட்டியம்மன் கோவில் அருகில் தற்காலிக பஸ் நிறுத்தமும், அரச்சலூர், கரூர் மார்க்கமாக செல்லும் பஸ்களுக்கு அரச்சலூர் ரோட்டிலும், ஊத்துக்குளி மார்க்க பஸ்களுக்கு மேலப்பாளையத்திலும் தற்காலிக பஸ் நிறுத்தமும் அமைக்கப்படுகிறது.

    ×