search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திருடுதல்"

    • பேன்சி கடை, மற்றும் கடைகளில் அடிக்கடி திருட்டு சம்பவங்கள் நடைபெற்று வந்தது.
    • கண்காணிப்பு கேமராவில் உள்ள உருவத்தை கடைக்காரர்களின் செல்போனுக்கு சமூக வலைத்தளம் மூலம் பகிர்ந்தனர்.

    பல்லடம்

    பல்லடம் தினசரி மார்க்கெட் பகுதியில் உள்ள பேன்சி கடை, மற்றும் கடைகளில் அடிக்கடி திருட்டு சம்பவங்கள் நடைபெற்று வந்தது. இது குறித்து வியாபாரிகள் பலமுறை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். ஆனாலும் திருடன் சிக்கவில்லை. இதையடுத்து கடைக்காரர்கள் கடைகளுக்கு முன்னும் பின்னும் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தினர். சம்பவத்தன்று இரவு பேன்சி கடை, துணிக்கடை உள்ளிட்ட கடைகளில் சுமார் ரூ.2.500 மதிப்பிலான பொருட்கள் திருட்டு போனது.

    கண்காணிப்பு கேமரா காட்சிகளை பார்த்த போது, அதில் ஒரு வாலிபர் கடைகளில் புகுந்து திருடுவது தெரிய வந்தது. இதையடுத்து கண்காணிப்பு கேமரா காட்சிகளுடன் பல்லடம் போலீஸ் நிலையத்தில் வியாபாரிகள் புகார் அளித்தனர். மேலும் கண்காணிப்பு கேமராவில் உள்ள உருவத்தை கடைக்காரர்களின் செல்போனுக்கு சமூக வலைத்தளம் மூலம் பகிர்ந்தனர்.

    இதற்கிடையே நேற்று இரவு கண்காணிப்பு கேமராவில் பதிவான உருவம் கொண்ட நபர் மார்க்கெட் பகுதிக்கு வந்தார்.

    அவரை வியாபாரிகள் சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை செய்த போது அவர் கடைகளில் திருடியதை ஒப்புக்கொண்டார். இதையடுத்து அவருக்கு தர்ம அடி கொடுத்து பல்லடம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

    மேலும் இது குறித்து பேன்சி கடை நடத்தி வரும் நாகராஜன் (வயது59) என்பவர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை செய்ததில் அவன் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த பாரதி புத்தி பதார் என்பவரது மகன் ராஜு என்கிற சிந்தாமணி (வயது 28) என்பது தெரிய வந்தது.

    அவனை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    ×