search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திரிகரண சுத்தி"

    • மாலை அணிந்து விரதம் இருக்கும் பக்தர்கள் மனம், வாக்கு, செயல் ஆகியவற்றில் தூய்மையானவர்களாக இருக்க வேண்டும்.
    • பிரம்மச்சரியம் கடைபிடிக்க வேண்டும்.

    அய்யப்பனுக்கு மாலை அணிந்து விரதம் இருக்கும் பக்தர்கள் மனம், வாக்கு, செயல்

    ஆகிய மூன்றாலும் தூய்மையானவர்களாக இருக்க வேண்டும்.

    இதனை 'திரிகரணசுத்தி' என்பர்.

    அதிகாலையில் எழுந்து குளிர்ந்த நீரில் நீராடி பக்தியுடன் சரணம் சொல்ல வேண்டும்.

    தரையில், பாய் விரித்துப் படுக்க வேண்டும். தலையணை கூடாது.

    பிரம்மச்சரியம் கடைபிடிக்க வேண்டும்.

    கரடுமுரடான மலைப்பாதையில் குளிர்ச்சி மிக்க பனிக்காலத்தில் செல்ல வேண்டும் என்பதற்காகவும்,

    மன அடக்கத்திற்காகவும் இத்தகைய கடின பயிற்சி முறைகள் பக்தர்களுக்கு விதிக்கப்பட்டன.

    ×