search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திட்டப் பணி"

    • திட்டப் பணிகளை கண்காணிப்பு அலுவலர் ஆய்வு செய்தார்.
    • மாதவி ராஜசேகர், யூனியன் ஆணையாளர் ராஜகோபாலன் ஆகியோர் உடனிருந்தனர்.

    கமுதி

    ராமநாதபுரம் மாவட்டம் கமுதி பகுதியில் நடைபெற்று வரும் பல்வேறு திட்டப் பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் தர்மேந்திரா பிரதாப் யாதவ் ஆய்வு செய்தார். கமுதி அருகே உள்ள டி.புனவாசல் கிராமத்தில் அங்கன்வாடி மையம், வல்லந்தை ஊராட்சியில் பஞ்சாப் மாநில விவசாயி மன்மோகன் சிங்கின் விவசாயத் தோட்டம், கண்மாயில் குடிநீர் சுத்திகரிப்பு பணி, அபிராமம் பேரூராட்சியில் ரூ.1.23 கோடி மதிப்பீட்டில் வாரச்சந்தை கட்டிட பணிகள், பேரையூர் சுகாதார ஆரம்ப நிலைய கட்டிடப்பணிகள், புல்வாய்க்குளம் ஊராட்சியில் நடைபெறும் சமுதாயக் கூட கட்டிடப் பணி, பேரையூர் கூட்டுறவு சங்கம் ஆகியவற்றில் கண்காணிப்பு அலுவலர் ஆய்வு செய்தார். மருத்துவம், ஊரக வளர்ச்சி, கூட்டுறவுத்துறை, தோட்டக்கலை, வேளாண் துறை உள்பட பல்வேறு துறைகளின் கீழ் நடைபெற்று வரும் திட்டப் பணிகளை பார்வையிட்டார். பணிகளை விரைந்து முடிக்க வேண்டுமென அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.

    இதில் ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ், கூடுதல் கலெக்டர் பிரவீன் குமார்(வளர்ச்சி), உதவி ஆட்சியர் நாராயணன் சர்மா (பயிற்சி) மாவட்ட குழந்தைகள் நலத்திட்ட அலுவலர் விசுவாபதி, ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் தமிழ்ச்செல்விபோஸ், ஊராட்சித் தலைவர்கள் அழகர்சாமி, தேவதி, மாதவி ராஜசேகர், யூனியன் ஆணையாளர் ராஜகோபாலன் ஆகியோர் உடனிருந்தனர்.

    ×