search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தவறி விழுந்து படுகாயம்"

    • மேம்பாலத்தில் மோட்டார் சைக்கிள் சென்று கொண்டிருந்த வாலிபர் நிலை தடுமாறி கீழே விழுந்து படுகாயம் அடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
    • உயிருக்கு போராடிய தினேஷ்குமாரை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு தலைமை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு தினேஷ்குமார் அபாய கட்டத்தில் சிகிச்சை பெற்று வருகிறார்

    ஈரோடு,

    ஈரோடு மாநகர் மையப்பகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் ஈரோடு மீனாட்சி சுந்தரனார் சாலையிலிருந்து பெருந்துறை சாலை வரை மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது.

    இந்த மேம்பாலம் ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை முன் பகுதி வரையும் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று காலை மேம்பாலத்தில் மோட்டார் சைக்கிள் சென்று கொண்டிருந்த வாலிபர் நிலை தடுமாறி கீழே விழுந்து படுகாயம் அடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது . இந்த சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

    நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அடுத்த காமாட்சி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் தினேஷ்குமார்(20). இவர் ஈரோடு பழைய பாளையத்தில் உள்ள ஒரு ஜவுளி கடையில் வேலை பார்த்து வந்தார். தினமும் காலையில் மோட்டார் சைக்கிளில் தினேஷ்குமார் வருவது வழக்கம். இதேப்போல் மீண்டும் இரவில் பணி முடிந்து மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு செல்வார்.

    இந்நிலையில் இன்று காலை வழக்கம் போல் பள்ளிபாளையத்தில் இருந்து தினேஷ்குமார் மோட்டார் சைக்கிளில் வேலை பார்க்கும் கடைக்கு சென்று கொண்டிருந்தார். ஈரோட்டில் உள்ள மேம்பாலத்தில் மோட்டார் சைக்கிள் சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென அவர் நிலை தடுமாறி மோட்டார் சைக்கிளுடன் மேம்பாலத்தின் தடுப்பு சுவரில் மோதினார். இதில் அவர் தூக்கி வீசப்பட்டு மேம்பாலத்தில் இருந்து 60 அடி பள்ளத்தில் கீழே விழுந்தார்.

    இதில் தினேஷ்குமார் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடினார். தினேஷ்குமார் மேம்பாலத்தில் இருந்து கீழே சவிதா சிக்னல் அருகே இடது புறத்தில் விழுந்தார். அந்த சமயம் பள்ளிகளுக்கு தங்களது பிள்ளைகளை அழைத்து சென்ற பெற்றோர் மற்றும் வாகன ஓட்டிகள் இதனை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    உடனடியாக இதுகுறித்து ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 108 ஆம்புலன்ஸ் மூலம் உயிருக்கு போராடிய தினேஷ்குமாரை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு தலைமை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு தினேஷ்குமார் அபாய கட்டத்தில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இது குறித்து ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.

    தினேஷ்குமார் மோட்டார் சைக்கிளில் சென்ற போது நிலை தடுமாறி மேம்பாலத்தில் இருந்து கீழே விழுந்தாரா ? அல்லது பின்பகுதியில் வந்த வாகனம் இடித்து தள்ளியதில் அவர் மேம்பாலத்தில் இருந்து கீழே விழுந்தாரா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • விடுமுறைக்கு சொந்த ஊருக்கு சென்ற போது பரிதாபம்
    • போலீசார் விசாரணை

    ஜோலார்பேட்டை:

    திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த நடராஜபுரம் பகுதியில் உள்ள ரெயில்வே தண்டாவளம் அருகே கேரளா மாநிலம் மங்களுர் ரெயில் நிலையத்தில் இருந்து சென்னை செல்லும் வெஸ்ட்கோஸ்ட் எக்ஸ்பிரஸ் ரெயிலிலிருந்து வடமாநில இளைஞர் ஒருவர் தவறி விழுந்தார்.

    பள்ளத்தில் உருண்டு விழுந்ததில் தலை மற்றும் கை கால்கள் பகுதியில் பலத்த காயமடைந்த வட மாநில வாலிபர் சுயநினைவை இழந்து கிடந்ததை கண்ட அப்பகுதி மக்கள் அவரை மீட்டு உடனடியாக சிகிச்சைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    இது குறித்து தகவல் அறிந்ததும் ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசார் சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் உத்திரபிரதேச மாநிலம் ஹிமத்பூர் பகுதியைச் சேர்ந்த சுரேஷ் சந்த் இவரது மகன் அஜய் குமார் (வயது24) என தெரியவந்தது.

    இவர் கேரளாவில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்துவிட்டு விடுமுறையில் தனது சொந்த ஊருக்கு செல்ல மங்களூரிலிருந்து - சென்னை செல்லும் வெஸ்ட் கோஸ்ட் விரைவு எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணம் செய்தபோது ஓடும் ரெயிலில் தவறி விழுந்திருப்பது தெரியவந்தது.

    மேலும் மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

    ×