என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  ஓடும் ரெயிலில் இருந்து வாலிபர் தவறி விழுந்து படுகாயம்
  X

  ரெயிலில் இருந்து தவறி விழுந்த வாலிபரை பொது மக்கள் மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் வாகனத்திற்கு கொண்டு சென்ற போது எடுத்த படம்.

  ஓடும் ரெயிலில் இருந்து வாலிபர் தவறி விழுந்து படுகாயம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • விடுமுறைக்கு சொந்த ஊருக்கு சென்ற போது பரிதாபம்
  • போலீசார் விசாரணை

  ஜோலார்பேட்டை:

  திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த நடராஜபுரம் பகுதியில் உள்ள ரெயில்வே தண்டாவளம் அருகே கேரளா மாநிலம் மங்களுர் ரெயில் நிலையத்தில் இருந்து சென்னை செல்லும் வெஸ்ட்கோஸ்ட் எக்ஸ்பிரஸ் ரெயிலிலிருந்து வடமாநில இளைஞர் ஒருவர் தவறி விழுந்தார்.

  பள்ளத்தில் உருண்டு விழுந்ததில் தலை மற்றும் கை கால்கள் பகுதியில் பலத்த காயமடைந்த வட மாநில வாலிபர் சுயநினைவை இழந்து கிடந்ததை கண்ட அப்பகுதி மக்கள் அவரை மீட்டு உடனடியாக சிகிச்சைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

  இது குறித்து தகவல் அறிந்ததும் ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசார் சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் உத்திரபிரதேச மாநிலம் ஹிமத்பூர் பகுதியைச் சேர்ந்த சுரேஷ் சந்த் இவரது மகன் அஜய் குமார் (வயது24) என தெரியவந்தது.

  இவர் கேரளாவில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்துவிட்டு விடுமுறையில் தனது சொந்த ஊருக்கு செல்ல மங்களூரிலிருந்து - சென்னை செல்லும் வெஸ்ட் கோஸ்ட் விரைவு எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணம் செய்தபோது ஓடும் ரெயிலில் தவறி விழுந்திருப்பது தெரியவந்தது.

  மேலும் மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

  Next Story
  ×