search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தலைமைப்பதி"

    • ஆனி மாத முதல் ஞாயிற்றுக்கிழமையான நேற்று பதியில் அய்யாவழி பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
    • உகப்படிப்பு, வாகன பணிவிடை, நித்தப்பால் தர்மம், மதியம் உச்சிபடிப்பும் பின்னர் அன்னதர்மமும் நடந்தது.

    கன்னியாகுமரி:

    சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப் பதியில் ஞாயிற்றுகிழமை நாட்களில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்படுவது வழக்கம். ஆனி மாத முதல் ஞாயிற்றுக்கிழமையான நேற்று பதியில் அய்யாவழி பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

    அதிகாலை முதலே கன்னியாகுமரி, திருநெல் வேலி, தூத்துக்குடி, தென்காசி, சென்னை, கோவை உள்ளிட்ட மாவட்டங்கள் மற்றும் கேரளா மாநிலத்தை சேர்ந்த பக்தர்கள் குவிந்தனர்.

    அவர்கள் முத்திரி கிணற்றில் புனித நீராடி நீண்ட வரிசையில் காத்தி ருந்து பால், பழம், பன்னீர், தேங்காய், பூ ஆகியவற்றை சுருளாக வைத்து அய்யாவை வணங்கி சென்றனர்.

    இதையொட்டி நேற்று அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து உகப்படிப்பு, வாகன பணிவிடை, நித்தப்பால் தர்மம், மதியம் உச்சிபடிப்பும் பின்னர் அன்னதர்மமும் நடந்தது.

    பக்கர்களுக்கு இனிப்பு, சந்தனம், வெற்றிலை, பாக்கு உள்ளிட்டவை இனிமமாக வழங்கப்பட்டது. தொடர்ந்து சாமிதோப்பு குரு பால ஜனாதிபதி, அய்யாவழி சமயம் மற்றும் அய்யா வைகுண்டசாமியின் அற்புதங்கள் குறித்து பக்தர்களிடையே ஆன்மீக சொற்பொழிவாற்றினார்.

    இரவு 7 மணிக்கு பிச்சி பூவால் அலங்கரிக்கப்பட்ட அன்ன வாகனத்தில் அய்யா எழுந்தருளி பதி மற்றும் ரதவீதியை வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டதால் ரத வீதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    • தைத்திருவிழா கடந்த 20-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    • தேரோட்ட நிகழ்ச்சியில் தமிழ்நாடு மற்றும் கேரளாவைச் சேர்ந்த அய்யாவழி பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    கன்னியாகுமரி:

    சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப் பதியில் தைத்திருவிழா கடந்த 20-ந்தேதி கொடி யேற்றத்துடன் தொடங்கி யது. விழா தொடர்ந்து 11 நாட்கள் நடந்தது.

    விழாவின் 8-வது நாளில் அய்யா வைகுண்டசாமி வெள்ளை குதிரை வாகனத்தில் முத்திரி கிணற்றங்கரையில் கலி வேட்டையாடும் நிகழ்ச்சி நடைபெற்றது. 9 மற்றும் 10-ம் திருவிழாக்களில் இரவு வாகன பவனியும் தொடர்ந்து அன்னதானமும் நடந்தது. விழாவின் 11-ம் நாளான இன்று மதியம் 12 மணிக்கு தேரோட்ட நிகழ்ச்சி நடைபெற்றது.

    தேரோட்டத்தை முன்னிட்டு இன்று அதி காலை 5 மணிக்கு அய்யா வுக்கு சிறப்பு பணிவிடையும், தொடர்ந்து யுகப்படிப்பும் நடந்தது. பகல் 11 மணிக்கு அய்யா வைகுண்டசாமி பல்லக்கு வாகனத்தில் தேருக்கு எழுந்தருளினார். தொடர்ந்து 12 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட பஞ்சவர்ண தேரில் அய்யா வீற்றிருக்க தேரோட்டம் தொடங்கியது.

    தேரோட்ட நிகழ்ச்சிக்கு தலைமை பதி குரு பால ஜனாதிபதி தலைமை தாங்கி னார். குருமார்கள் பால லோகாதிபதி, ராஜவேல், பையன் கிருஷ்ண ராஜ், பையன் கிருஷ்ண நாம மணி, பையன் ஆனந்த், ஜனா யுகேந்த்,ஜனா வைகுந்த், நேம்ரிஷ்,பால் பையன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் அய்யா வழி பக்தர்கள் "அய்யா சிவ சிவ அரகரா அரகரா" பக்தி கோஷமிட்டவாறு தேரை வடம் பிடித்து இழுத்தனர். முத்து குடைகளும், மேள தாளங்களும் முன்செல்ல தேரோட்டம் தொடங்கியது.

    தலைமைப்பதி முன்பு இருந்து புறப்பட்ட தேர் கிழக்கு ரதவீதி, தெற்கு ரதவீதி, மேற்கு ரதவீதி வழியாக வடக்கு ரத வீதியில் உள்ள தலைமை பதியின் வடக்கு வாசல் பகுதிக்கு வந்தது. வடக்கு வாசல் பகுதியில் அய்யாவழி பக்தர்கள் அய்யா வைகுண்டசாமிக்கு வெற்றிலை, பாக்கு, பழம், பூ ஆகியவை அடங்கிய பொருட்களை சுருளாக படைத்து வழிபடுவதற்காக நீண்ட வரிசையில் காத்தி ருந்தனர். அங்கு பக்தர் களின் சுருள் ஏற்பு நிகழ்ச்சியும், தொடர்ந்து பக்தர்களுக்கு அருளாசி வழங்குதலும் நடைபெற்றது. பின்னர் இன்று மாலை 6 மணியளவில் தேர் நிலைக்கு வந்தடைகிறது. தேரோட்ட நிகழ்ச்சியில் தமிழ்நாடு மற்றும் கேரளாவைச் சேர்ந்த அய்யாவழி பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர். இரவு 7 மணிக்கு அய்யா வைகுண்டசாமி ரிஷப வாகனத்தில் தெருவீதி வலம் வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 6 மணிக்கு அய்யாவுக்கு பணிவிடையும் தொடர்ந்து திருக்கொடி இறக்கும் நிகழ்ச்சியும் நடை பெறும்.

    • 20-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது
    • வைகாசி, ஆவணி மற்றும் தை மாதங்களில் 11 நாட்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம்.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி மாவட்டம் சாமித்தோப்பில் அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதி அமைந்துள்ளது. இங்கு ஆண்டு தோறும் வைகாசி, ஆவணி மற்றும் தை மாதங்களில் 11 நாட்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம்.

    இந்த ஆண்டுக்கான தை திருவிழா வருகிற 20-ந் தேதி (வெள்ளிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. கொடி யேற்றத்தையொட்டி அதிகாலை 4 மணிக்கு முத்திரி பதமிடுதல், நடை திறந்து விளக்கேற்றுதல், காலை 6 மணிக்கு கொடிப்பட்டம் தயாரிக்கும் நிகழ்ச்சி, தொடர்ந்து 6.30 மணிக்கு திருக்கொடியேற்றம் நடை பெறுகிறது. தலைமைப்பதி குரு பால ஜனாதிபதி திருக்கொடியை ஏற்றி வைக்கிறார். குருமார்கள் பால லோகாதிபதி, ராஜவேல், பையன் கிருஷ்ண ராஜ், பையன் கிருஷ்ண நாம மணி, பையன் ஆனந்த், ஜனா யுகேந்த், ஜனா வைகுந்த், நேம்ரிஷ், பால் பையன் ஆகியோர் முன்னிலை வகித்து பணிவிடைகளை செய்கின்றனர். தொடர்ந்து வாகன பவனி, பகல் 12 மணிக்கு வடக்கு வாசலில் அன்னதர்மம், இரவு அய்யா தொட்டில் வாகனத்தில் தெருவை சுற்றி பவனி வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    கொடியேற்ற நிகழ்ச்சியில் தமிழ்நாடு, கேரளா முழுவதும் இருந்து அய்யா வழி பக்தர்கள் திரளாக கலந்து கொள்கின்றனர். விழா நாட்களில் தினமும் காலை, மாலை பணிவிடை, இரவு வாகன பவனி, அன்னதர்மம் நடக்கிறது.

    வருகிற 27-ந் தேதி மாலை 4 மணிக்கு அய்யா வெள்ளை குதிரை வாகனத்தில் எழுந்தருளி முத்திரி கிணற்றங்கரையில் கலி வேட்டையாடும் நிகழ்ச்சி நடக்கிறது. தொடர்ந்து சுற்றுப்புற கிராமங்களுக்கு குதிரை வாகனத்தில் சென்று பக்தர்களுக்கு அருள் பாலித்தல், இரவு 11 மணிக்கு தலைமைப்பதியின் வடக்கு வாசலில் அய்யாவின் தவக்கோல காட்சி, அன்னதர்மம் நடக்கிறது.

    30-ந் தேதி (திங்கட் கிழமை) பகல் 12 மணிக்கு தேரோட்டம் நிகழ்ச்சி நடக்கிறது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அய்யா வைகுண்டசாமியை வழிபடுவார்கள். விழா வுக்கான ஏற்பாடுகளை பதி நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

    • முத்திரிகிணற்றில் புனித நீராடி நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் அய்யாவை வணங்கி சென்றனர்.
    • உகப்படிப்பு, வாகன பணிவிடை, நித்தப்பால் தர்மம், மதியம் உச்சிபடிப்பும், அன்ன தர்மமும் நடந்தது.

    கன்னியாகுமரி:

    சாமிதோப்பு அய்யா வைகுண்ட சாமி தலைமைப்பதியில் ஞாயிற்றுகிழமை நாட்களில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்படுவது வழக்கம். ஐப்பசி மாதம் நான்காம் ஞாயிற்றுக்கிழமையான நேற்று பதியில் அய்யாவழி பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

    நேற்று அதிகாலை முதலே கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துகுடி,சென்னை உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த பக்தர்கள் குவிந்தனர். அவர்கள் முத்திரிகிணற்றில் புனித நீராடி நீண்ட வரிசையில் காத்திருந்து அய்யாவை வணங்கி சென்றனர்.

    இதையொட்டி நேற்று அதிகாலை 4-மணிக்கு நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து உகப்படிப்பு, வாகன பணிவிடை, நித்தப்பால் தர்மம், மதியம் உச்சிபடிப்பும் பின்னர் அன்ன தர்மமும் நடந்தது.

    பக்தர்களுக்கு இனிப்பு, சந்தனம், வெற்றிலை,பாக்கு உள்ளிட்டவை இனிமமாக வழங்கப்பட்டது.தொடர்ந்து சாமிதோப்பு தலைமை குரு பால ஜனாதிபதி, அய்யாவழி சமயம் மற்றும் அய்யா வைகுண்டசாமியின் அற்புதங்கள் குறித்து பக்தர்களிடையே சுமார் 1 மணிநேரம் ஆன்மீக சொற்பொழிவாற்றினார்.

    மாலையில் அய்யாவுக்கு பணிவிடை நடந்தது.

    தொடர்ந்து பிச்சிப் பூவால் அலங்கரிக்கப்பட்ட சிறிய சப்பர வாகன பவனியும் அன்ன தர்மம் நடைபெற்றது.

    • திரளான பக்தர்கள் பங்கேற்பு
    • திங்கட்கிழமை நண்பகல் 12 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது

    நாகர்கோவில்:

    சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் ஆவணி திருவிழா கடந்த 19-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. விழாவின் 8-வது நாளான நேற்று கலிவேட்டை நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதையொட்டி மாலை 4 மணிக்கு அய்யாவுக்கு பணி விடையும், 4.30 மணிக்கு கலி வேட்டைக்கு அய்யா புறப் படும் நிகழ்ச்சியும் நடைபெற் றது. 5 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட வெள்ளை குதிரை வாக னத்தில் அய்யா வீற்றிருக்க தலைமைப்பதியில் நான்கு ரதவீதிகளையும் வாக னம் சுற்றி வந்தது. இரவு 7 மணிக்கு குதிரை வாகனம் முத்திரி கிணற்றங்கரையை சென்றடைந்தது.

    அங்கு தலைப்பாகை அணிந்து திருநாமம் தரித்து காவி உடை அணிந்த ஆயிரக்கணக்கான அய்யாவழி பக்தர்கள் முன்னிலையில் அய்யா கலிவேட்டையாடும் நிகழ்ச்சி நடந்தது. கலி வேட் டையாடும் பணிவிடைகளை குரு பாலஜனாதிபதி நிகழ்த்தினார். கலி வேட்டை நிகழ்ச்சியில் நெல்லை, தூத்துக்குடி, சென்னை மாவட்டங்களை சேர்ந்த அய்யாவழி பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    குருமார்கள் பால லோகா திபதி, பையன் கிருஷ்ணராஜ், ஆனந்த் ஆகியோர் வாகன பவனி பணிவிடைகளையும், பள்ளி யறை பணிவிடைகளை குருமார்கள் ஜனாயுகேந்த், ஜனாவைகுந்த், நேம்ரிஷ் ஆகியோரும் செய்தி ருந்தனர். பின்னர் பக்தர்க ளுக்கு திருப்பதம் வழங்கி சுற்றுப்பகுதி ஊர்க ளான செட்டிவிளை, சாஸ் தான் கோவில் விளை, கோட்க டையடி புதூர், சோட்டப்ப ணிக்கன் தேரிவிளை, காமராஜபுரம் வழியாக வாகனம் பவனி வந்தது. அப்போது கிராம மக்கள் அய்யாவுக்கு சுருள் வைத்து வழிபட்டனர்.

    பல கிராமங்களை சுற்றி வந்த வாகனம் நள்ளிரவு 12 மணிக்கு தலைமைப்பதியின் வடக்கு வாசலுக்கு வந்தது. அங்கு அய்யா வைகுண்ட சாமி பக்தர்களுக்கு தவக்கோ லத்தில் காட்சியளித்தார். பின்னர் பணிவிடையும், பெரியயுகப்படிப்பும், வடக்கு வாசலில் அன்ன தர்மமும் நடந்தது.

    நாளை மறுநாள் (திங்கட்கிழமை) நண்பகல் 12 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. தேரோட்டம் அன்று தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் நாகர்கோவிலில் இருந்து சாமிதோப்புக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.

    ×