search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தண்ணீர் வெளியேற்றம்"

    • பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 78.86 அடியாக உள்ளது.
    • அணையில் இருந்து 2,600 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானி சாகர் அணை. 105 அடி கொள்ளளவு பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.

    கடந்த சில நாட்களாக அணைக்கு நீர் வரத்தை காட்டிலும் பாசனத்திற்காக அதிக அளவில் நீர் திறந்து விடப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வந்தது. மழை பொழிவு இல்லாததால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைந்துள்ளது.

    இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 78.86 அடியாக உள்ளது. அனைக்கு வினாடிக்கு 429 கனஅடி தண்ணீர் மட்டுமே வருகிறது.

    அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்காக 2,100 கன அடி, காளிங்கராயன் பாசனத்திற்கு 400 கனஅடி, குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 100 கனஅடி என மொத்தம் பவானிசாகர் அணையில் இருந்து 2,600 கன அடி தண்ணீர் வெளி யேற்றப்பட்டு வருகிறது.

    குண்டேரிப்பள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 24.92 கனஅடியும், பெரும்பள்ளம் அணையின் நீர்மட்டம் 15.35 கன அடியும், வரட்டுப்பள்ளம் அணையின் நீர்மட்டம் 21.39 கனஅடியாக உள்ளது.

    • சானல்கள் தூர்வாரும் பணி தீவிரம்
    • முக்கடல் அணையின் நீர் மட்டம் தொடர்ந்து மைனஸ் அடியில் இருந்து வருகிறது

    நாகர்கோவில்,ஜூலை.12-

    குமரி மாவட்டத்தில் கன்னிப்பூ சாகுபடிக்காக பேச்சிப்பாறை அணை ஜூன் 1-ந்தேதி திறக்கப்பட்டது. பெருஞ்சாணி அணையும் திறக்கப்பட்டு தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது.

    தென்மேற்கு பருவமழை கண்ணாமூச்சி காட்டி வந்ததையடுத்து பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென சரிந்தது. இதனால் அணையில் இருந்து வெளியேற்றப்பட்ட தண்ணீர் அளவு குறைக்கப்பட்டது. ஒரு வாரமாக பெய்த மழையை யடுத்து பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 10 அடி உயர்ந்துள்ளது.

    இதைத்தொடர்ந்து அணையில் இருந்து வெளி யேற்றப்படும் தண்ணீரின் அளவு அதிகரிக்கப்பட்டு உள்ளது. பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணையில் இருந்து திறக்கப்பட்டுள்ள தண்ணீர் சானல்களில் ஷிப்ட்டு முறையில் வெளி யேற்றப்பட்டு வருகிறது.

    பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் இன்று காலை 35.38 அடியாக உள்ளது. அணைக்கு 394 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணை யில் இருந்து 641 கன அடி தண்ணீர் வெளி யேற்றப்படு கிறது. பெரு ஞ்சானி அணை நீர்மட்டம் 30.90 அடியாக உள்ளது. அணை 104 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கி றது. அணையிலிருந்து 100 கன அடி தண்ணீர் வெளி யேற்றப்படுகிறது.

    பேச்சிப்பாறை, பெருஞ் சணி அணைகளில் உள்ள வெளியேற்றப்படும் தண்ணீர் கடைமடை பகுதி வரை முறையாக வந்து சேரவில்லை என்று விவசாயிகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார்கள்.

    இந்த நிலையில் கடைமடை பகுதிகளில் உள்ள சானல்கள் தூர்வாரும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. ஜே.சி.பி. எந்திரம் மூலமாக சானலில் உள்ள முட் புதர்களை அப்பு றப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. நாகர்கோவில் நகருக்கு குடிநீர் சப்ளை செய்யப்படும் முக்கடல் அணையின் நீர் மட்டம் தொடர்ந்து மைனஸ் அடியில் இருந்து வருகிறது. இன்று காலை அணையின் நீர்மட்டம் மைனஸ் 14.60 அடியாக உள்ளது.

    • கன்னிபூ சாகுபடிக்காக பேச்சிபாறை அணை கடந்த 1-ந்தேதி திறக்கப்பட்டது
    • சானல்களில் தண்ணீர் திறந்து விடப்பட்டதையடுத்து விவசாயிகள் சாகுபடி பணியை தீவிரப்படுத்தி உள்ளனர்.

    நாகர்கோவில் :

    குமரி மாவட்டத்தில் விவசாயிகள் கன்னி பூ சாகுபடியில் ஈடுபட்டுள்ளனர்.கன்னிபூ சாகுபடிக்காக பேச்சிபாறை அணை கடந்த 1-ந்தேதி திறக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து பெருஞ்சாணி அணையில் இருந்தும் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. பேச்சிப்பாறை அணையில் இருந்து நேற்று குறைவான அளவு தண்ணீர் வெளியேற்றப்பட்டு வந்த நிலையில் இன்று அணையில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீரின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது. அணையில் இருந்து 223 கன அடி தண்ணீர் வெளியேற்றபடுகிறது. பெருஞ்சாணி அணையில் இருந்தும் 575 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இரு அணைகளில் இருந்தும் 798 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. தோவாளை சானல், அனந்தனார் சானல்களில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. சானல்களில் தண்ணீர் திறந்து விடப்பட்டதையடுத்து விவசாயிகள் சாகுபடி பணியை தீவிரப்படுத்தி உள்ளனர்.

    • பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 92.90 அடியாக உள்ளது.
    • அணையில் இருந்து 2,700 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. பவானிசாகர் அணை மூலம் ஈரோடு, கரூர், திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த 2,47,000 விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

    105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர்ப்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலை பகுதி உள்ளது.

    இந்நிலையில் கடந்த சில நாட்களாக பவானிசாகர் அணைக்கு வரும் நீர் வரத்தை காட்டிலும் பாசனத்திற்காக அதிக அளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது.

    இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 92.90 அடியாக உள்ளது. அணைக்கு வரும் நீரின் வரத்து வினாடிக்கு 756 கன அடியாக குறைந்தது.

    கீழ்பவானி வாய்க்காலுக்கு வினாடிக்கு 2,200 கன அடி, குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 200 கனஅடி, காலிங்கராயன் வாய்க்கால் பாசனத்திற்கு 300 கனஅடி என மொத்தம் அணையில் இருந்து 2,700 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    ×