பேச்சிபாறை, பெருஞ்சாணி அணையில் இருந்து 798 கனஅடி தண்ணீர் வெளியேற்றம்

கன்னிபூ சாகுபடிக்காக பேச்சிபாறை அணை கடந்த 1-ந்தேதி திறக்கப்பட்டதுசானல்களில் தண்ணீர் திறந்து விடப்பட்டதையடுத்து விவசாயிகள் சாகுபடி பணியை தீவிரப்படுத்தி உள்ளனர்.
பேச்சிபாறை, பெருஞ்சாணி அணையில் இருந்து 798 கனஅடி தண்ணீர் வெளியேற்றம்
Published on

நாகர்கோவில் :

குமரி மாவட்டத்தில் விவசாயிகள் கன்னி பூ சாகுபடியில் ஈடுபட்டுள்ளனர்.கன்னிபூ சாகுபடிக்காக பேச்சிபாறை அணை கடந்த 1-ந்தேதி திறக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து பெருஞ்சாணி அணையில் இருந்தும் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. பேச்சிப்பாறை அணையில் இருந்து நேற்று குறைவான அளவு தண்ணீர் வெளியேற்றப்பட்டு வந்த நிலையில் இன்று அணையில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீரின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது. அணையில் இருந்து 223 கன அடி தண்ணீர் வெளியேற்றபடுகிறது. பெருஞ்சாணி அணையில் இருந்தும் 575 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இரு அணைகளில் இருந்தும் 798 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. தோவாளை சானல், அனந்தனார் சானல்களில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. சானல்களில் தண்ணீர் திறந்து விடப்பட்டதையடுத்து விவசாயிகள் சாகுபடி பணியை தீவிரப்படுத்தி உள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com