search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தடுமாறும்"

    • சேலம் மாநகராட்சியில் 60 வார்டுகள் உள்ளன. 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வசித்து வருகிறார்கள். நாளுக்கு நாள் பெருகி வரும் மக்கள் தொகையால் சேலம் விரிவடைந்து வருகிறது .இதனால் வாகன போக்குவரத்தும் பல மடங்கு பெருகி உள்ளது.
    • பல சாலைகள் தோண்டப்பட்டு பணிகள் முடிக்கப்படாமல் வாகனங்கள் செல்ல முடியாத நிலையில் மிக மோசமாக காட்சியளிக்கின்றன. இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் தவியாய் தவித்து வருகிறார்கள்.

    சேலம் மாநகராட்சியில் 60 வார்டுகள் உள்ளன. 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வசித்து வருகிறார்கள். நாளுக்கு நாள் பெருகி வரும் மக்கள் தொகையால் சேலம் விரிவடைந்து வருகிறது .இதனால் வாகன போக்குவரத்தும் பல மடங்கு பெருகி உள்ளது.

    பாதாள சாக்கடை பணிகள்

    ஆனால் சேலம் மாநகராட்சியில் பாதாள சாக்கடை பணிகள் மற்றும் கியாஸ் குழாய் பதிப்பு போன்ற பல்வேறு பணிகளால் பல சாலைகள் தோண்டப்பட்டு பணிகள் முடிக்கப்படாமல் வாகனங்கள் செல்ல முடியாத நிலையில் மிக மோசமாக காட்சியளிக்கின்றன. இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் தவியாய் தவித்து வருகிறார்கள்.

    ஓமலூர் மெயின் ரோடு

    சேலம் ஓமலூர் மெயின் ரோட்டில் டி.வி.எஸ்.பஸ் ஸ்டாப் அருகே இருந்து அங்கம்மாள் காலனி செல்லும் சாலை கடந்த மூன்று மாதங்களாக ஜல்லி கொட்டி ரோடுகள் போடாமல் அப்படியே உள்ளது.

    இதனால் அந்த வழியாக இருசக்கர வாகனம் உட்பட எந்த வாகனமும் செல்ல முடியாத நிலை உள்ளது. இருசக்கர வாகனங்களில் வருவோர் இறங்கி தள்ளி செல்லும் நிலை நீடிக்கிறது. அங்குள்ள அ.தி.மு.க. அலுவலகம் அருகே பாதாள சாக்கடைக்கு தோண்டப்பட்டு ஒன்றரை ஆண்டுகளாக பணி முடியாமல் உள்ளது . இதனால் அந்த சாலை பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

    நகர மலை அடிவாரம்

    குரங்கு சாவடியில் இருந்து நகரமலை அடிவாரம் செல்லும் சாலை கடந்த மூன்று ஆண்டு களாக சீர மைக்கப்படாமலே உள்ளது. இதனால் அந்த சாலை முழுவதும் குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகளும் புலம்பி தவிக்கிறார்கள்.

    சேலம் பழைய பஸ் நிலையம் அருகே உள்ள கல்லாங்குத்து பகுதியில் சாலை அமைக்கும் பணி மிகவும் மந்தமாக நடைபெறு வதால் அந்த சாலை கடந்த சில மாதங்களாக போக்கு வரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது.

    அதேபோல சேலம் பழைய பஸ் நிலையத்தில் இருந்து களரம்பட்டி செல்லும் மெயின் ரோடு, எருமா பாளையம் மற்றும் சன்னியாசிகுண்டு செல்லும் பிரதான சாலைகள் சீரமைக்கப்படாமல் பல ஆண்டுகளாக மோசமான நிலையில் உள்ளது .இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் வாகனத்தை இயக்க முடியாமல் தடுமாறி வருகிறார்கள்.

    அம்மாபேட்டை

    சேலம் அம்மாபேட்டை ஜெயா தியேட்டர் முன்புள்ள ரோடு கான்கிரீட் ரோடாக போடும் பணி கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக நடந்து வருகிறது . அந்த பணிகளும் இன்னும் நிறைவு பெறாததால் அந்த வழியாக வாகனங்கள் செல்ல முடியாமல் பல ரோடுகளை சுற்றி செல்லும் நிலை இன்றும் நீடிக்கிறது.தாதகாப்பட்டி வள்ளுவர் நகர் பகுதியில் ரோடு சீரமைப்பு பணி தொடங்கியும் பணிகள் நிறைவு பெறாதால் அந்த சாலையும் மிக மோசமாக காட்சியளிக்கிறது .

    ரெட்டியூர் மெயின் ரோடு

    இதேபோல சேலம் ரெட்டியூர் மெயின் ரோடு பணிகள் முடியாமல் அரைகுறையாக கடந்த 6 மாதமாக இருப்பதால் அந்த சாலையிலும் வாகனங்கள் செல்ல முடியாத நிலையில் வாகன ஓட்டிகள் தவித்து வருகிறார்கள்.

    குகை காளியம்மன் மாரியம்மன் கோவில் திருவிழா நடந்து வருகிறது. ஆனால் அந்த கோவில் அருகே உள்ள சாலைகள் பல மாதங்களாகியும் இன்னும் பணி முடியாத நிலையே நீடிக்கிறது. இதனால் அந்த வழியாக போலீஸ் கமிஷனர் அலுவலகம் செல்லவும் குகை பெரியார் வளைவு செல்லவும் முடியாததால் திருச்சி குகை மெயின் ரோட்டில் அதிக அளவில் போக்குவரத்து நெரிசல் நிலவுகிறது.இந்த சாலையில் ஆம்புலன்ஸ் கூட வெகு நேரம் காத்து நின்று செல்லும் நிலை ஒவ்வொரு நாளும் பலமுறை ஏற்படுகிறது.

    முள்ளுவாடி கேட்

    சேலம் முள்ளுவாடி கேட் பகுதியில் கடந்த எட்டு ஆண்டுகளாக பாலப்பணி நடைபெற்று வருகிறது.இதனால் ெரயில் செல்லும் நேரங்களில் ெரயில்வே கேட் மூடப்பட்டு பின்னர் திறந்து விடப்படுகிறது. இதனால் அந்த பகுதியில் ஒவ்வொரு முறையும் ரெயில்கள் செல்லும்போது அரை மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து நெரிசல் கடுமையாக உள்ளது.

    இதே போல சேலம் மாநகரின் பல்வேறு சாலைகள் மிக மோசமான நிலையில் உள்ளதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர். எனவே மோசமான நிலையில் உள்ள அனைத்து சாலைகளையும் போர்க்கால அடிப்படை யில் சீரமைக்க வேண்டும் என்பது சேலம் மாநகர பொது மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

    ×