search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தடுப்பு பயிற்சி"

    • வனத்தீ தடுப்பு பற்றிய பயிற்சி பட்டறை நடத்தப்பட்டது.
    • காட்டுத்தீ இயற்கையான முறையில் ஏற்படுவதை விட மனிதர்களால் அதிகம் ஏற்படுகிறது .

    திருப்பூர் :

    திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் அலகு-2, திருப்பூர் வனச்சரகம் சார்பில் கல்லூரி வளாகத்தில் உள்ள ஏ. வி. அரங்கில் வனத்தீ தடுப்பு பற்றிய பயிற்சி பட்டறை நடத்தப்பட்டது . முன்னதாக அலகு - 2 ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார் வரவேற்புரை வழங்கினார். பேராசிரியர் விநாயகமூர்த்தி தலைமை தாங்கினார்.

    சிறப்பு விருந்தினராக திருப்பூர் வனச்சரக அலுவலர் சுரேஷ் கிருஷ்ணன் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். அவர் பேசுகையில் , காடுகளுக்குள் எப்படி பாதுகாப்பாக செல்லவேண்டும் , காட்டுத்தீயை எப்படி அணைக்க வேண்டும் , காட்டுத்தீ எப்படி உருவாகிறது , வெப்பம் , எரிபொருள் மற்றும் காற்று இந்த மூன்று பொருட்களும் சேரும் போது நெருப்பு உருவாகிறது என்றார். மேலும் காட்டுத்தீ இயற்கையான முறையில் ஏற்படுவதை விட மனிதர்களால் அதிகம் ஏற்படுகிறது .ஆகையால் இவற்றை கட்டுப்படுத்த வேண்டும் என்றார். காட்டுத்தீ மிகவும் ஆபத்தானது.காட்டுத் தீ உருவானால் பல கிலோமீட்டர் சுற்றளவுக்கு பரவும். இவை காடுகளில் வாழும் உயிரினங்களை அழிக்கப்படுவது மட்டுமல்லாமல் காடுகளின் வளத்தையே அழிக்கிறது . காட்டுத்தீ இயற்கையான முறையில் எப்படி உருவாகிறது என்பதை தெளிவாக கூறினார். சில நேரங்களில் அதுவும் வெயில் காலங்களில் காய்ந்து போன மரங்கள் மற்றும் செடிகளில் நெருப்பு உருவாகிறது எனவும் , மழைக்காலங்களில் மின்னல் மரங்களில் படும்போது நெருப்பு உருவாகிறது, இதன் மூலம் காட்டுத்தீ உருவாகிறது , மனிதர்கள் காடுகளுக்குள் செல்லும் போது தீயை மூட்டுவதால் அதிலிருந்து வரும் நெருப்பு காடுகளில் பரவுவதன் மூலம் காட்டுத்தீ உருவாகிறது . மேலும் காடுகளின் அருகில் வசிக்கும் மக்கள் குப்பைகளை எரிப்பதன் மூலம், அதிலிருந்து உருவாகும் நெருப்பு காடுகளில் பரவுவதன் மூலம் காட்டுத்தீ உருவாகிறது.

    அவற்றை கட்டுப்படுத்த ரசாயன பொருட்கள் பயன்படுத்தி காட்டுத் தீ அணைக்கப்படுகிறது, காட்டுத்தீ அதிகமாக பரவும் போது கிளவுடு சேவிங் என்ற தொழில்நுட்பம் மூலமாக செயற்கையான முறையில் மழைகளைப் பொழியவைத்து காட்டுத்தீ அணைக்கப்படுகிறது என்று கூறினார். பிறகு மாணவர்கள் தங்கள் கேள்விகளை கேட்டு நிவர்த்தி செய்தனர். மாணவ செயலர்கள் சுந்தரம், ரமேஷ், பாலாஜி ஆகியோர் தலைமையில் ஏராளமான கல்லூரி மாணவ மாணவிகள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

    ×