search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டாக்டர் கிருஷ்ணசாமி"

    • பாராளுமன்ற தேர்தலில் கட்சி கூட்டணி வைப்பது குறித்து முடிவெடுக்க தலைவர் கிருஷ்ணசாமிக்கு அதிகாரம் கொடுத்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
    • தேர்தலில் 2 அல்லது 3 இடங்களை கேட்க திட்டமிட்டுள்ளோம்.

    குனியமுத்தூர்:

    டாக்டர் கிருஷ்ணசாமி தலைமையில் புதிய தமிழகம் கட்சி செயல்பட்டு வருகிறது.

    இந்த கட்சி கடந்த சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. - பா.ஜ.க. அங்கம் வகித்த கூட்டணியில் இடம் பெற்று இருந்தது. தற்போது அந்த கூட்டணி உடைந்து ள்ளது. இதன் காரணமாக டாக்டர் கிருஷ்ணசாமி, எந்த அணியுடன் கூட்டணி சேரப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.

    இந்நிலையில் புதிய தமிழகம் கட்சியின் அரசியல் உயர்மட்ட குழு கூட்டம் கோவை குனியமுத்தூரில் உள்ள டாக்டர் கிருஷ்ணசாமி இல்லத்தில் நடந்தது. பாராளுமன்ற தேர்தலில் கட்சி கூட்டணி வைப்பது குறித்து முடிவெடுக்க தலைவர் கிருஷ்ணசாமிக்கு அதிகாரம் கொடுத்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    இதைத்தொடர்ந்து டாக்டர் கிருஷ்ணசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    இந்த ஆண்டு நடக்க உள்ள பாராளுமன்ற தேர்தல் மிக முக்கியமான காலக்கட்டத்தில் நடக்கிறது. எனவே வலுவான கூட்டணியில் இடம்பெற திட்டமிட்டுள்ளோம். அது எண்ணிக்கை மற்றும் கொள்கை அடிப்படையில் வெற்றி பெறும் கூட்டணியாக இருக்க வேண்டும். தேர்தலில் 2 அல்லது 3 இடங்களை கேட்க திட்டமிட்டுள்ளோம்.

    2019-ல் அ.தி.மு.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அமைக்கப்பட்டது. அதில் நாங்கள் இடம்பெற்றோம். தற்போது தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி என்பது இல்லை. புதிய அரசியல் சூழல் நிலவுகிறது.

    புதிய தமிழகம் கட்சி சுதந்திரமாக செயல்பட நினைக்கிறது. பாரதிய ஜனதா- அ.தி.மு.க. கூட் டணி என்பது காலம் கடந்துவிட்டது. எந்த கட்சியுடன் கூட்டணி என்பது குறித்து நாங்கள் இதுவரை முடிவுக்கு வரவில்லை.

    தமிழகத்தில் தற்போது 3 அணிகள் உள்ளன. நாங்கள் வெற்றிக்கூட்டணியில் இடம்பெறுவோம். பாராளுமன்றத்தில் எங்களது குரல் ஒலிக்க வேண்டும். அதுதான் எங்களின் நோக்கம் ஆகும். இம்முறை நாங்கள் மக்களவையிலும், மாநிலங்களவையிலும் இடம்பெற வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • இளைஞர்களை காப்பாற்ற தமிழகத்தில் ஆட்சி மாற்றம் தேவை என்று டாக்டர் கிருஷ்ணசாமி கூறினார்.
    • மது இல்லா புதிய தமிழகம் படைப்போம் என்று பிரச்சாரத்தை மேற் கொள்ள வேண்டும்.

    ராமநாதபுரம்

    ராமேசுவரத்தில் பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையின் நடைபயணத்தை மத்திய மந்திரி அமித்ஷா தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட கூட்டணி கட்சியான புதிய தமிழகம் கட்சி நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி நிருபர்களிடம் கூறியதா வது:-

    டாஸ்மாக் குடியின் பிடியிலிருந்து தமிழகத்தை மீட்போம், மது இல்லா புதிய தமிழகம் படைப்போம், என்ற பிரச்சார புத்தகத்தை வெளியிட்டு, தமிழகத்தில் போதைக்கு அடிமையாகும் இளைஞர்களை காப்பாற்ற தமிழகத்தில் ஆட்சி மாற்றம் தேவை.

    டாஸ்மாக் வேண்டாம் என தி.மு.க. பல்வேறு போராட்டங்கள் நடத்தியது 2016-ம் ஆண்டுக்கு பின்னர் ஆட்சியை வந்தவுடன் டாஸ் மாக் மதுவிலக்கை அமல் படுத்தவில்லை. டாஸ்மாக் கால் தமிழகத்தில் இளம் விதவைகளின் எண்ணிக்கை அதிகமாக வருகிறது.

    தமிழ கத்தில் தி.மு.க.வினர் நடத்த கூடிய அனைத்து மதுபான ஆலைகளையும் மூட வேண் டும். ஆட்சிக்கு வந்து பல மாதங்களாகியும் டாஸ்மாக்கை மூடவில்லை.

    டாஸ்மாக்கில் மிக பெரிய ஊழல் நடந்துள்ளதால் இன்று செந்தில் பாலாஜி சிறை யில் கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார். அடுத்த அமைச்சரும் காலை ஏழு மணி முதல் மதுபான கடை திறப்போம் என்றும், மது குடிப்பவர்களை யாரும் குடிகாரர் என்று கூறக் கூடாது என்று கூறி வரு கிறார்.

    தி.மு.க. ஆட்சியில் மதுவால் இளைஞர்கள் சீரழிக் கப்பட்டு வருகின்றனர்.டாஸ்மாக்கில் மது குடித்தால் குடல் புண் நோய் தான் வரும் என்று சொல்கிறார்கள். ஆனால் 200-க்கும் மேற் பட்ட வியாதிகள் வரும் என்று டாக்டராகிய நான் பரிசோதித்து கூறுகிறேன்.

    தமிழகத்தில் மதுவிலக்கை அமல்படுத்த கோரி புதிய தமிழக கட்சியின் சார்பில் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டு, பாட்டில் உடைக்கும் போராட்டமும் நடத்தப்பட்டது.

    ஆகையால் தமிழகத்தில் மது இல்லா புதிய தமிழகம் படைப்போம் என்று பிரச்சாரத்தை மேற் கொள்ள உள்ளேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×