search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சோதனை ஓட்டம் வெற்றி"

    • நாட்டிலேயே முதன் முறையாக உள்நாட்டில் தயாரிக்கப்பட்டது.
    • கடந்த 3 ஆண்டாகவே முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

    மேட்டுப்பாளையம்,

    நாட்டிலேயே முதன் முறையாக முழுவதும் உள்நாட்டு தொழில்நுட்பத்தில் டீசலை எரிபொருளாக பயன்படுத்தி நீராவி உற்பத்தி செய்து இயக்கப்படும் மேட்டுப்பாளையம் ஊட்டி மலை ெரயில் நீராவி என்ஜின் முதல் கட்ட சோதனை ஓட்டம் வெற்றியடைந்துள்ளது.

    திருச்சி பொன்மலை ெரயில்வே பணிமனையில் வடிவமைக்கப்பட்ட இந்த மலை ெரயிலின் புதிய என்ஜின் மேட்டுப்பாளையத்திற்கு கடந்த 2 நாட்களுக்கு முன்பு கொண்டு வரப்பட்டது.

    இந்த என்ஜின் நேற்று 4 பெட்டிகளுடன் மேட்டுப்பாளையம் முதல் அடர்லி ெரயில் நிலையம் வரை இயக்கி, முதற்கட்ட சோதனை வெற்றியடைந்ததாக அறிவிக்கப்பட்டது. மேட்டுப்பாளையம்-ஊட்டி வரை இயக்கப்படும் மலை ெரயில், மேட்டுப்பா ளையத்தில் இருந்து குன்னூர் வரை நீராவி என்ஜினால் இயக்கப்படுகிறது.

    முதன்முறையாக. நிலக்கரியில் இயக்கப்பட்டு வந்த இந்த என்ஜின் நிலக்கரி பற்றாக்குறை காரணமாக பர்னஸ் ஆயில் எனப்படும் அடர்த்தி மிகுந்த ஆயிலை எரிபொருளாக கொண்டு இயக்கப்பட்டது.

    சுற்றுச் சூழல் மாசு ஏற்படுவதாக வந்த புகாரை தொடர்ந்து மாற்று எரிபொருளாக டீசலை பயன்படுத்தி நீராவி உற்பத்தி செய்து மலை ெரயில் என்ஜினை வடிவமைக்க கடந்த 3 ஆண்டாகவே முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

    இதையடுத்து தற்போது, டீசலை எரிபொருளாக கொண்டு நீராவி உற்பத்தி செய்து இயங்கும் மலை ெரயில் என்ஜினை திருச்சி மலை ெரயில்வே பணிமனை பொறியாளர்கள் உருவாக்கி உள்ளனர். மேட்டுப்பாளையம்- குன்னூர் வரை இயக்கப்படும் மலை ெரயிலுக்கான நீராவி என்ஜின் சுவிட்சர்லாந்து நாட்டிலிருந்து கொண்டு வரப்பட்டு இயக்கப்பட்டு வந்தது. நூற்றாண்டுகள் பழமை வாய்ந்ததால் அங்கிருந்து கொண்டு வரப்பட்டிருந்த என்ஜின்கள் பயன்படுத்தபட்டு வந்த நிலையில் முழுக்க முழுக்க உள்நாட்டின் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி பொறியா ளர்கள் புதிய என்ஜினை வடிவமைத்து வெற்றிகரமாக சோதனை நடத்தி உள்ளனர்.

    இந்த மலை ெரயிலுக்கான பல்வேறு உதிரிபாகங்கள் கோவையில் உள்ள தொழிற்சாலைகளில் உருவாக்கப்பட்டு இந்த என்ஜினில் பொருத்தப்ப ட்டுள்ளது என்பது குறிப்பிட த்தக்கது.

    ×