search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிறுபாலங்கள்"

    • மாநகராட்சி சார்பில் ரூ.1 கோடி மதிப்பில் கட்டப்பட்ட சிறுபாலங்களை அமைச்சர் மூர்த்தி திறந்து வைத்தார்.
    • ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் லேக் ஏரியாவி லும் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் 2 பாகங்கள் கட்டப்பட்டன.

    மதுரை

    மதுரை மாட்டுத்தாவணி அருகே உள்ள டி.எம்.நகர், லேக் ஏரியா பகுதிகளில் மழை காலத்தில் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்து பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாத சூழ்நிலை ஏற்பட்டு வந்தது. இதுகுறித்து அந்த பகுதி பொதுமக்கள் அமைச்சர் மூர்த்தியிடம் மனு கொடுத்தனர்.

    இதையடுத்து அமைச்ச ரின் உத்தரவுப்படி மாநகராட்சி அதிகாரிகள், மாவட்ட நிர்வாக அலுவ லர்கள் அந்த பகுதியில் ஆய்வு செய்தனர். அப்போது அந்த பகுதி மக்கள் இங்கு சிறு பாலம் அமைத்தால் பயன் உள்ளதாக இருக்கும் என அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தனர். எங்கள் பகுதிக்கு பாலம் வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர். இதுகுறித்து அமைச்சர் மூர்த்தியின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. இதையடுத்து அந்த பகுதியில் பாலம் அமைப்பதற்கான பணிகளை தொடங்கும்படி அமைச்சர் ஆலோசனை வழங்கினார்.

    அதன்படி ரூ. 50 லட்சம் மதிப்பீட்டில் டி.எம். நகரி லும், ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் லேக் ஏரியாவி லும் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் 2 பாகங்கள் கட்டப் பட்டன. இந்த நிலையில் இந்த பாலங்களின் திறப்பு விழா நடந்தது. அமைச்சர் மூர்த்தி கலந்து கொண்டு பாலங்களை திறந்து வைத்தார்.

    பின்னர் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:-

    இப்பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று அரசு உடனடியாக அதில் கவனம் செலுத்தி நிறைவேற்றி தந்துள்ளது.

    மேலும் வண்டியூரில் இருந்து ரிங் ரோடு வரை சாலை விரிவாக்க பணிகள் செய்யப்பட்டுள்ளது. வருகிற சட்டமன்ற கூட்ட தொடரில் பத்திர பதிவுத்துறையில் மக்களின் கோரிக்கைகளை கருத்தில் கொண்டு முதல்-அமைச்சர் புதிய அறிவிப்புகளை வெளியிடுவார்.

    இவ்வாறு அவர் கூறி னார்.

    நிகழ்ச்சியில் மேயர் இந்திராணி பொன்வசந்த், பூமிநாதன் எம்.எல்.ஏ., மாநகராட்சி ஆணையாளர் பிரவீன் குமார், மண்டல தலைவர் வாசுகி சசிகுமார், நகர் நல அலுவலர் அரசு, முன்னாள் எம்.எல்.ஏ. கதிரவன், தி.மு.க. பகுதி செயலாளர் சசிகுமார், மதுரை வடக்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் இளங்கோ, இந்து சமய மண்டல அறங்காவலர் குழு தலைவர் ரவிச்சந்திரன், குடியிருப் போர் நல சங்க நிர்வாகிகள் பிரகலாதன், பிரேம்சந்த், தினகரன், வக்கீல் இளங்கோ வன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து ரிங் ரோட்டில் இருந்து கல்மேடு வரை அமைக்கப்பட்டுள்ள புதிய சாலையையும் அமைச்சர் மூர்த்தி திறந்து வைத்தார்.

    ×