search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிறப்பு ஹோமம்"

    • மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு நடந்தது
    • கூட்டுப்பிரார்த்தனை செய்து வழிபாடு

    வாலாஜா:

    ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில், ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு டாக்டர்.ஸ்ரீ முரளிதரஸ்வாமிகள் அருளாணைப்படி, பிரதமர் நரேந்திர தாமோதரதாஸ் மோடியின் 72 வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு இன்று காலை ஸ்ரீ தன்வந்திரி ஹோமம், ஆயுஷ் ஹோமம், மிருத்யுஞ்சய ஹோமம், சுதர்சன ஹோமம், திருஷ்டி ஹோமம், சத்ரு சம்ஹார ஹோமம் போன்ற பல்வேறு வகையான ஹோமங்களும், மோடியின் பிறந்த நட்சத்திரமான அனுஷம் நட்சத்திரம், விருச்சிக லக்னம் என்ற பெயரில் மகா சங்கல்பம் செய்யப்பட்டு அதற்குரிய தெய்வங்களுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று, அதனை தொடர்ந்து கூட்டுப்பிரார்த்தனையும் நடைபெற்றது.

    மேற்கண்ட ஹோமத்தின் பிரசாதம் ஸ்ரீ முரளிதரஸ்வாமிகளின் வாழ்த்து கடிதத்துடன் பிரதமர் மோடிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ தன்வந்திரி குடும்பத்தினர் செய்திருந்தனர்.

    • ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் நடந்தது
    • பக்தர்கள் தீபம் ஏற்றி வழிபட்டனர்

    வாலாஜா:

    வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் டாக்டர்.ஸ்ரீ முரளிதரஸ் சுவாமிகள் ஆக்ஞைப்படி நேற்று பஞ்சமி திதியை முன்னிட்டு பஞ்சமுக வராஹி அம்மனுக்கு சிறப்பு ஹோமம் மற்றும் அபிஷேகம் நடைபெற்றது.

    ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் வராஹி, காளி, சூலினி, திரிபுர, பைரவி என 5 முகங்களுடன் காட்சி தரும் ஸ்ரீ பஞ்சமுக வராஹி அம்மனுக்கு பிரதி பஞ்சமி திதி தோறும் சிறப்பு ஹோமம் மற்றும் அபிஷேகங்கள் நடைபெறும்.

    அதன்படி நேற்று மாலையில் பஞ்சமி திதியை முன்னிட்டு ஸ்ரீ பஞ்சமுக வராஹி அம்மனுக்கு சிறப்பு வராஹி ஹோமமும், அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

    ஹோமம் மற்றும் சிறப்பு பூஜைகளில் கலந்து கொண்ட பக்தர்கள் விவசாய நிலங்களில் விளைச்சல் பெருக, காரிய தடைகள் விலக, தோஷங்களிலிருந்து விடுபட, குடும்ப நிம்மதி போன்றவை உள்பட பல்வேறு வேண்டுதல்களுக்காக வராஹி அம்மனை வணங்கி தேங்காயில் நெய் வீட்டு தீபம் ஏற்றியும் அம்மனை வழிபட்டனர்.

    இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ தன்வந்திரி குடும்பத்தினர் செய்திருந்தனர்.

    ×